
6 ஊர்களில் போட்டிகள்
கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ள கோல்கத்தா, மார்கோ, கொச்சி, குவஹாத்தி, டெல்லி, மும்பையில் போட்டிகள் நடக்க உள்ளன.
மொத்தமுள்ள 24 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா ஏ பிரிவில்
இதில், ஏ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. முதல் சுற்று ரவுண்ட்-ராபின் முறையில் நடக்கும். அதாவது, பிரிவுக்குள் உள்ள அனைத்து அணிகளுடனும் விளையாடணும்.

அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த 12 அணிகளுடன், மொத்தமுள்ள 8 பிரிவுகளில், மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகளில், புள்ளிக் கணக்கின் அடிப்படையில் சிறந்த நான்கு அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும்.

நாக் அவுட் சுற்று
இந்த 16 அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது சுற்று நாக்அவுட் முறையில் நடக்கும். அதன்பிறகு, காலிறுதி, அரைஇறுதி, பைனல் போட்டி நடக்கும். நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான நைஜீரியா இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெறவில்லை. கடந்த, 2009ல் சுவிட்சர்லாந்து அணி இதேபோல், தகுதிச் சுற்றில் தோல்வியடைந்ததால், உலகக் கோப்பையில் பங்கேற்க முடியவில்லை.

24 அணிகள் விவரம்
ஏ பிரிவு - இந்தியா அமெரிக்கா, கொலம்பியா, கானா.
பி பிரிவு - பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி
சி பிரிவு - ஈரான், குயினா, ஜெர்மனி, கோஸ்டாரிகா
டி பிரிவு - வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின்
இ பிரிவு - ஹோண்டுராஸ், ஜப்பான், நியூ காலடோனியா, பிரான்ஸ்
எப் பிரிவு - ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து

இந்தியாவின் முதல் போட்டி
நாளை துவங்கி, வரும், 28ம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் நாளான நாளை இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை சந்திக்கிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.
9ம் தேதி டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் கொலம்பியாவையும், 12ம் தேதி டெல்லியில், கானாவையும் இந்தியா சந்திக்கிறது.

நாளை டெல்லியில் கொலம்பியா கானா மோதல்
டெல்லியில் நாளை நடக்கும், இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில், ஏ பிரிவில் உள்ள கொலம்பியாவும், கானாவும் மோதுகின்றன. மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நியூசிலாந்து - துருக்கி அணிகளும், பராகுவே - மாலி அணிகளும் மோதுகின்றன.


Click it and Unblock the Notifications

