யு17 உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில்.. யார் யார் மோதல்?
டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் விளையாடும் 8 அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டன. நேற்று நடந்த ஆட்டங்களில் வென்று, பிரேசில், கானாவும் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொண்டன.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்தி வருகிறது. இந்தியா உள்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நேற்றுடன் முடிந்தன.

நேற்று நடந்த ஆட்டங்களில் வென்று, கானா, பிரேசில் அணிகளும், காலிறுதிக்கு விளையாடும் அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது. காலிறுதி ஆட்டங்கள் 21ல் நடக்கிறது.
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கானா 2-0 என்ற கோல் கணக்கில் நைஜர் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 3-0 என்ற கணக்கில் ஹோண்டுராஸ் அணியை வென்றது. முன்னதாக ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, மாலி, ஸ்பெயின், ஈரான் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
21ல் நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் மாலி - கானா அணியும், அமெரிக்கா - இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. 22ல் நடக்கும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் - ஈரான் அணிகளும், ஜெர்மனி - பிரேசில் அணிகளும் மோத உள்ளன.
Story first published: Thursday, October 19, 2017, 13:44 [IST]
Other articles published on Oct 19, 2017


Click it and Unblock the Notifications