Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA WC: ஒரே ஒரு கோல்.. கானாவை காலி செய்த கொலம்பியா.. கடும் வெயிலுக்கு நடுவே வெற்றி

கன்சாஸ்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், கானா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கொலம்பியா வீரர் ஜான் ஆரியாஸ் அடித்த ஒரே ஒரு கோல் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள ஆரோஹெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி கடும் வெப்பத்திற்கு மத்தியில் நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இப்போட்டி இரவு 8:30 மணிக்கு தாமதமாகத் தொடங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கொலம்பியா முன்கள வீரர் ஜான் கோர்டோபாவுக்கு காயம் ஏற்பட்டதால், பயிற்சியாளர் நெஸ்டர் லோரென்சோ அவருக்குப் பதிலாக லூயிஸ் சுவாரஸை மாற்று வீரராகக் களம் இறக்கினார்.

FIFA WC Colombia beat Ghana 1-0 to Secure Round of 16 Clash with Switzerland

களமிறங்கிய உடனே லூயிஸ் சுவாரஸ் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில், டேனியல் முனோஸ் கொடுத்த பந்தை பெற்ற லூயிஸ் சுவாரஸ், அதனை கானா கோல்கீப்பர் லாரன்ஸ் அதி ஜிகி தடுத்ததையும் தாண்டி கிராஸ் செய்ய, அங்கு தயாராக இருந்த ஜான் ஆரியாஸ் அதனை நேர்த்தியாக கோலாக மாற்றி கொலம்பியாவுக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.

இதன் பிறகு கானா அணி கோல் அடிக்க மேற்கொண்ட பல முயற்சிகளை கொலம்பியா தடுப்பாட்ட வீரர்கள் முறியடித்தனர். ஆட்ட நேர முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தத் வெற்றியின் மூலம் கொலம்பியா அணி தனது அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பலம் வாய்ந்த சுவிட்சர்லாந்து அணியை வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வான்கூவர் நகரில் எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி நடைபெற்ற போது கன்சாஸ் நகரில் 31.1 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆட்டத்தின் நடுவே வழங்கப்பட்ட தண்ணீர் குடிக்கும் இடைவெளிகள் (ஹைட்ரேஷன் பிரேக்) இரு அணி வீரர்களுக்கும் பெரும் உதவியாக அமைந்தன.

Story first published: Saturday, July 4, 2026, 10:31 [IST]
Other articles published on Jul 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+