Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: யாருப்பா நீங்க? ஸ்பெயினுடன் டிரா செய்த கேப் வெர்டே என்ற குட்டி நாடு.. உலகக் கோப்பையில் வரலாறு

அட்லாண்டா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்களது அறிமுக ஆட்டத்திலேயே, பலம் வாய்ந்த ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியை 0-0 என சமன் செய்து கேப் வெர்டே என்ற குட்டி நாடு மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள வெறும் 5 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய தீவு நாடுதான் கேப் வெர்டே. உலகத் தரவரிசையில் 67வது இடத்தில் உள்ள இந்த எளிய அணி, உலகக் கோப்பையில் நேற்று (திங்கட்கிழமை) தனது முதல் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை எதிர்கொண்டது. 2010 உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின் எளிதாக வெல்லும் எனக் கணிக்கப்பட்ட இப்போட்டியில், கேப் வெர்டே அணி இறுதிவரை ஸ்பெயினுக்கு கோல் அடிக்க வாய்ப்பே தராமல் டிரா செய்து அதிர்ச்சியளித்தது.

FIFA Who are Cape Verde Team that Stuns Spain with Historic 0-0 Draw in World Cup Debut

கேப் வெர்டே அணியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவிற்கு அந்த அணியின் 40 வயது அனுபவமிக்க கோல்கீப்பர் வோசின்ஹா தான் முக்கிய காரணம். போர்ச்சுகலின் 2வது டிவிஷன் கிளப்பில் விளையாடி வரும் அவர், நேற்று ஸ்பெயின் நட்சத்திர வீரர்களான பெட்ரி, பெரான் டோரஸ், லபோர்டே ஆகியோரின் அதிரடி கோல் முயற்சிகளைப் பாய்ந்து தடுத்து நிறுத்தினார். போட்டி முடிந்ததும் அவர் மைதானத்திலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தார். "எனது வாழ்நாள் கனவு இன்று நனவாகியுள்ளது" என்று வோசின்ஹா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இப்போட்டியில் ஸ்பெயின் அணி பந்தை அதிகம் தன் வசம் வைத்திருந்த போதிலும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. காயம் காரணமாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த 18 வயது இளம் நட்சத்திரம் லமின் யமால், 2வது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கியும் ஸ்பெயினின் கோல் தாகத்தைத் தணிக்க முடியவில்லை. நிக்கோ வில்லியம்ஸும் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில்தான் களமிறக்கப்பட்டார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேப் வெர்டேவின் தினே போர்ஜஸ் அடித்த ஹெட்டர் கோலாவதை ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன் நல்வாய்ப்பாக தடுத்துக் காப்பாற்றினார்.

கதறவிட்ட ஸ்வீடன்.. 5-1 என்ற கோல் கணக்கில் துனிசியா படுதோல்வி.. அயாரு இரட்டை கோல் அடித்து அசத்தல்

கதறவிட்ட ஸ்வீடன்.. 5-1 என்ற கோல் கணக்கில் துனிசியா படுதோல்வி.. அயாரு இரட்டை கோல் அடித்து அசத்தல்

உலகக் கோப்பையின் மிகப்பெரிய அதிர்ச்சியாகக் கருதப்படும் இந்த டிராவிற்குப் பிறகு, ஸ்பெயின் அணி தனது அடுத்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவையும், கேப் வெர்டே அணி உருகுவேயையும் எதிர்கொள்ள உள்ளன.

Story first published: Tuesday, June 16, 2026, 6:46 [IST]
Other articles published on Jun 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+