
ரியோ டி ஜெனிரோவில் பைனல்
பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோடி ஜெனிரோதான் அந்த நாட்டின் மிகப்பெரிய கால்பந்து மைதானத்தை தன்னகத்தே வைத்துள்ளது. மைதானத்தின் பெயர் எஸ்டாடியோ டூ மராகானா. பைனலுடன் சேர்த்து மொத்தம் 7 போட்டிகள் இங்கு நடக்கின்றன. ஜூன் 15ம்தேதி அர்ஜெண்டினாவும், போஸ்னியா ஹெர்சகோவினாவும் ரிப்பன் வெட்டி இந்த மைதானத்தின் முதல் போட்டியை இனிதே துவங்கி வைக்க உள்ளன. 18ம்தேதி ஸ்பெயின் மற்றும் சிலி, 22ல் பெல்ஜியம் மற்றும் ரஷ்யா, 25ம் தேதி ஈகுவெடார் மற்றும் பிரான்ஸ், 28ல் சி குரூப்பின் வெற்றியாளரும், டி குரூப்பில் 2ம் இடம் பிடித்த அணிகளும் மோதுகின்றன. ஜூலை 4ம்தேதி காலிறுதியும், 13ம்தேதி இறுதி போட்டியும் இதே மைதானத்தில் நடக்க உள்ளன. 1950ல் கட்டப்பட்ட இம்மைதானத்தில் ஒரே நேரத்தில் 76 ஆயிரத்து 804 ரசிகர்கள் அமர்ந்து பந்தையத்தை பார்க்க முடியும்.

பெரும் ரசிகர் கூட்டத்துடன் பீலோ ஹரிசோன்ட்
எஸ்டாடியோ மினைரோ மைதானம் அமைந்துள்ள நகரம் பீலோ ஹரிசோன்ட். ஜூன் 14ம் தேதி கொலம்பியாவும் கிரீசும் இம்மைதானத்தில் மோதலை ஆரம்பித்து வைக்கின்றன. 21ம்தேதி அர்ஜெண்டினாவும் ஈரானும், 24ம்தேதி கோஸ்டரிகாவும் இங்கிலாந்தும், 17ம்தேதி பெல்ஜியமும் அல்கேரியாவும், 28ம்தேதி குரூப் ஏ வெற்றியாளர் அணியும், குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த அணியும் மல்லு கட்டுகின்றன. ஜூலை 8ம்தேதி அரை இறுதி போட்டி இங்கு நடக்கிறது. 1965ல் கட்டப்பட்ட இம் மைதானம் 62 ஆயிரத்து 254 ரசிகர்களின் கொள்ளளவு கொண்டது.

மனாஸ் நகரம்
மனாஸ் நகரிலுள்ள அரேனா அமாசோனியா மைதானத்தில் ஜூன் 14ல் இங்கிலாந்தும் இத்தாலியும், 18ல் கேமரூனும், குரோசியாவும், 22ல் அமெரிக்காவும் போர்ச்சுக்கலும், 25ல் ஹோண்டுராஸ் மற்றும் சுவிட்சர்லாந்தும் களம் காண்கின்றன. சமீபத்தில் 2013ம் ஆண்டுதான் கட்டப்பட்ட மைதானம் என்பதால் நவீனம் மிக்கது. 42 ஆயிரத்து 374 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம்.

பிரேசிலியா
எஸ்டாடியோ நாகியோனல் டி பிரேசிலியா என்ற நீளமான பெயர் கொண்ட மைதானம் பிரேசிலியா நகரில் உள்ளது. ஜூன் 15ம்தேதி சுவிட்சர்லாந்து மற்றும் ஈகுவெடார், 19ல் கோலம்பியா மற்றும் ஐவரி கோஸ்ட், 23ல் கேமரூனும் பிரேசிலும், 26ல் போர்ச்சுக்கலும் கானாவும், 30ல் குரூப் இயில் வெற்றி பெற்ற அணியும், குரூப் எப் பிரிவில் 2ம் இடம் பிடித்த அணிகளும் மோதுகின்றன. ஜூலை 5ம்தேதி காலிறுதி போட்டியும், ஜூலை 12ல் மூன்றாம் இடத்தை பிடிக்கும் அணியை நிர்ணயிக்கும் போட்டியும் இங்கு நடக்க உள்ளது. 68 ஆயிரத்து 9 ரசிகர்கள் அமர வசதியுள்ள இந்த மைதானம் 2012ல் கட்டப்பட்டது.

துவக்க விழா காணும் சாபவுலோ
அரேனா டி சா பவுலோ என்ற பெயர் கொண்ட இந்த மைதானம்தான் துவக்க விழாவையும் அதைத்தொடர்ந்த பந்தையத்தையும் நடத்த உள்ளது. ஜூன் 12ம்தேதி உலக கோப்பை கால்பந்தாட்ட துவக்க பந்தையத்தில் பிரேசில் மற்றும் குரோசியா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. 19ம்தேதி உருகுவேயும் இங்கிலாந்தும், 23ம்தேதி நெதர்லாந்தும் சிலியும், 26ல் தென்கொரியாவும் பெல்ஜியமும் மல்லுக்கட்ட உள்ளன. ஜூலை 1ம்தேதி குரூப் எப் பிரிவின் வெற்றியாளரும், குரூப் இ பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணியும் இந்த மைதானத்தில் மோதுகின்றன. ஜூலை 9ம்தேதி அரை இறுதி போட்டி இங்குதான் நடக்க உள்ளது. 65 ஆயிரத்து 807 ரசிகர்களை தாங்கும் இந்த மைதானம் இந்த ஆண்டுதான் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது.

சிறிய ஸ்டேடிய நகரம் குரிசிபா
அரேனா டா பைக்சாடா என்ற ஸ்டேடியம் குரிசிபா நகரிலுள்ளது. ஜூன் 16ம்தேதி ஈரான் மற்றும் நைஜீரியாவும், 20ல் ஹோண்டுராஸ் மர்றும் ஈக்குவெடாருக்கும், 23ம்தேதி ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினுக்கும், 26ம்தேதி அல்கேரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போட்டிகள் நடக்கின்றன. பழமையான ஸ்டேடியமான இது 1914ம் ஆண்டிலேயே கட்டப்பட்டது. மொத்த கொள்ளளவு 41 ஆயிரத்து 456.

சால்வடோர்
அரேனா போன்டே நோவா என்றழைக்கப்படும் ஸ்டேடியம் அமைந்துள்ள நகரம் சால்வடோர். இங்கு ஜூன் 13ம்தேதி ஸ்பெயினும், நெதர்லாந்தும், 16ம்தேதி ஜெர்மனியும் போர்ச்சுக்கலும், 20ம்தேதி சுவிட்சர்லாந்தும் பிரான்சும், 25ம்தேதி போஸ்னியாவும் ஈரானும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ஜூலை 1ம்தேதி ஹெச் குரூப்பின் வெற்றியாளரும், ஜி குரூப்பில் 2ம் இடம் பிடித்த அணியும் மோத உள்ளன. ஜூலை 5ல் காலிறுதி போட்டி நடக்கிறது. 48ஆயிரத்து 747 ரசிகர் கொள்ளளவு கொண்ட இந்த மைதானம் 1951ல் கட்டப்பட்டது.

கியிபாவில் கோல் திருவிழா
அரேனா பன்டனல் என்ற பெயருள்ள இந்த மைதானம் அமைந்துள்ள நகரம் கியிபா. ஜூன் 13ம்தேதி சிலியும் ஆஸ்திரேலியாவும், 17ம்தேதி ரஷ்யாவும் தென்கொரியாவும், 21ல் நைஜீரியாவும் போஸ்னியாவும், 24ல் ஜப்பானும் கொலம்பியாவும் இந்த மைதானத்தில் களம் காண உளஅளன. 42ஆயிரத்து 968 ரசிகர்களின் கொள்ளளவு கொண்ட இந்த மைதாநம் இந்தாண்டுதான் கட்டப்பட்டது.

ரெசிபேயில் ரசிகர்கள் கூட்டம்
அரேனா பெர்னாம்புகோ என்ற மைதானம் அமைநத்துள்ள நகரம் ரெசிபே. ஜூன் 15ல் ஐவரி கோஸ்ட் மற்றும் ஜப்பான், 20ல் இத்தாலி மற்றும் கோஸ்டா ரிகா, 23ல் குரோசியா மற்றும் மெக்சிகோ, 26ல் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி மோதுகின்றன. ஜூன் 29ல் குரூப் டி வெற்றியாளரும், குரூப் ஹெச் பிரிவில் 2ம் இடம் பிடித்த அணியும் மோதுகின்றன. 48 ஆயிரத்து 849 ரசிகர்களை தாங்கும் இந்த ஸ்டேடியம் 1969ல் நிர்மாணிக்கப்பட்டது.

போர்டலேசாவில் புட்பால் விழா
ஈஸ்டாடியோ காஸ்டேலோ மைதானம் அமைந்துள்ள நகரின் பெயர் போர்டலேசா. ஜூன் 14ல் உருகுவே மற்றும் கோஸ்டா ரிகா, 17ல் பிரேசில் மற்றும் மெக்சிகோ, 21ல் ஜெர்மனி மற்றும் கானா, 24ல் கிரீஸ் மற்றும் ஐவரி கோஸ்ட், 29ல் குரூப் பி வெற்றியாளர் மற்றும் குரூப் ஏ பிரிவின் 2ம் இடம் பிடித்த அணிகள் மோதுகின்றன. ஜூலை 4ல் காலிறுதி போட்டியும் இங்கு நடக்கிறது. 64 ஆயிரத்து 846 ரசிகர்களை தாங்கும் இம்மைதானமும் இந்தாண்டுதான் நிர்மாணிக்கப்பட்டது.

நடால் நகரில் நட்சத்திரங்கள்
ஈஸ்டோடியா டாஸ் டுனாஸ் என்ற மைதானம் அமைந்துள்ள நகரம் நடால். ஜூன் 13ல் மெக்சிகோ மற்றும் கேமரூன், 16ல் கானா மற்றும் அமெரிக்கா, 19ல் ஜப்பான் மற்றும் கிரீஸ், 24ல் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் இதில் மோதுகின்றன. 42 ஆயிரத்து 86 ரசிகர் கொள்ளளவு கொண்ட இந்த மைதானம் கடந்தாண்டு கட்டப்பட்டது.


Click it and Unblock the Notifications













