ட்விட்டரில் இரட்டை சாதனை படைத்த ஜெர்மனி, பிரேசில் கால்பந்து போட்டி
பெலா ஹரிசான்டே: ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி பிரேசில் அணியை வென்றது ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.
ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரேசில், ஜெர்மனி அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமை இரவு பெலா ஹரிசான்டே நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வென்றது.

ட்விட்டர்
ஜெர்மனி, பிரேசில் அணிகள் விளையாடியபோது உலக ரசிகர்கள் இது குறித்து தான் ட்விட்டரில் பேசியுள்ளனர்.

அடேங்கப்பா
ட்விட்டரில் ஜெர்மனி, பிரேசில் போட்டி பற்றி மட்டும் 3 கோடியே 56 லட்சம் ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய சாதனை
ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு போட்டி பற்றி இத்தனை பேர் ட்வீட் செய்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும் ஒரு சாதனை
ஒரு நிமிடத்தில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்டதும் ஜெர்மனி, பிரேசில் போட்டி பற்றி தான் என்று ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போட்டி துவங்கிய 29வது நிமிடத்தில் ஜெர்மனியின் சமி கெதிரா கோல் போட்ட பிறகு நிமிடத்திற்கு 5 லட்சத்து 80 ஆயிரத்து 166 ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications