Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து: நேற்றுவரை நடந்த போட்டிகளின் முடிவுகள், ஆட்ட நாயகர்கள் விவரம்

ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. அதில் குரூப் மட்டத்திலான போட்டிகளில் வெற்றி பெற்ற 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், போட்டி தொடரின் முதல் நாள் தொடங்கி இதுநாள் வரையில் நடந்த ஆட்டங்கள், அணிகளின் ரிசல்ட், ஆட்ட நாயகன்கள் குறித்த விவரம் இதோ...

மண்ணை கவ்விய நடப்பு சாம்பியன்

மண்ணை கவ்விய நடப்பு சாம்பியன்

ஜூன் 12ம்தேதி நடந்த முதல் போட்டியில், குரோசியாவை 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது, பிரேசில். இரு கோல்கள் அடித்த, நெய்மர் ஆட்ட நாயகனாக தேர்வானார். மறுநாள் நடந்த போட்டியில் கேமரூனை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது மெக்சிகோ. அந்த அணியின் ஜிவானி டாஸ் சான்டோஸ் ஆட்ட நாயகனானார். அதே நாளில், நடந்த மற்றொரு போட்டியில் நெதர்லாந்து ஐந்துக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினை பந்தாடியது. நெதர்லாந்தின் ராவின் வான் பெர்சி ஆட்ட நாயகன். அதே தினத்தில் ஆஸ்திரேலியாவை சிலி அணி 3க்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்தது. அந்த அணியின் அலெக்சிஸ் சான்செஸ் ஆட்ட நாயகன் ஆனார்.

உருதெரியாத உருகுவே

உருதெரியாத உருகுவே

ஜூன் 14ம்தேதி கிரீசை கொலம்பியா 3-0 என்ற கணக்கில், மண்ணை கவ்வ செய்தது. ஜோம்ஸ் ரோட்ரிகுவஸ் ஆட்ட நாயகன். அதே நாளில் கோஸ்டரிகா, உருகுவேவை 3க்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்தது. அவ்வணியின் ஜோயல் கேம்பல் ஆட்டநாயகன். மற்றொரு போட்டியில் இங்கிலாந்தை 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்கடித்தது. இத்தாலியின், மரியோ போலாடெல்லி ஆட்டநாயகனானார். மற்றொரு போட்டியில் ஐவரி கோஸ்ட் ஜப்பானை 2க்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்தது. ஆட்ட நாயகன் யயாடூரே.

அர்ஜெண்டினா வெற்றி கணக்கு

அர்ஜெண்டினா வெற்றி கணக்கு

15ம்தேதி நடந்த போட்டியில் ஈக்குவெடாரை, சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணியின் எக்சர்டான் ஷாகிரி ஆட்ட நாயகன். அதே நாளில் மற்றொரு போட்டியில் ஹோண்டுராஸை, 3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் பந்தாடியது. கரிம் பென்சமா, ஆட்ட நாயகன். மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினா, போஸ்னியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி ஆட்ட நாயகனானார்.

ஜெர்மனி அபாரம்

ஜெர்மனி அபாரம்

ஜூன் 16ம்தேதி போர்ச்சுக்கலை 4-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது ஜெர்மனி. தாமஸ் முல்லர், ஆட்ட நாயகன். அதேபோல நைஜீரியா-ஈரான் போட்டி டிராவில் முடிவடைந்தது. நைஜீரியாவின் ஜான் ஒபி மைக்கேலுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. மற்றொரு போட்டியில் அமெரிக்கா 2-1 கணக்கில் கானாவை வீழ்த்தியது. கிளைன்ட் டெம்ப்சே, ஆட்ட நாயகன்.

கோல் போட முடியாத பிரேசில்

கோல் போட முடியாத பிரேசில்

ஜூன் 17ல், அல்ஜீரியாவை 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம். பெல்ஜியத்தின் கெவின் டி புருயானே ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். மற்றொரு போட்டியில் பிரேசில்-மெக்சிகோ போட்டி 0-0 கணக்கில், டிராவில் முடிந்தது. கில்லர்மோ ஒசா, ஆட்ட நாயகன். மற்றொரு போட்டியில் 1-1 என்ற கணக்கில், ரஷ்யா-தென்கொரியா போட்டியும் டிராபில் முடிவடைந்தது. தென்கொரியாவின் சன் ஹென்க்மின், ஆட்ட நாயகன்.

ஸ்பெயினை வீழ்த்திய சிலி

ஸ்பெயினை வீழ்த்திய சிலி

ஜூன் 18ம்தேதி நடந்த போட்டியில், ஆஸ்திரேலியாவை, நெதர்லாந்து 3-2 கணக்கில் வீழ்த்தியது. நெதர்லாந்தின், அர்ஜென்ரொப்பன், ஆட்ட நாயகன். அதே நாளில் மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணியை சிலி 2-0 கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. ஆட்ட நாயகனாக, வெற்றி பெற்ற அணியின், எடுர்டோ வர்காஸ் தேர்வானார். மற்றொரு போட்டியில், கேமரூனை 4-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அபாரமாக தோற்கடித்தது. மரியோ மண்ஸ்சுகிக், ஆட்ட நாயகன்.

'கடி' மன்னன் அபாரம்

'கடி' மன்னன் அபாரம்

ஜூன் 19ம்தேதி, நடந்த போட்டியில், கொலம்பியா அணி ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜேம்ஸ் ரோட்ரிகஸ், ஆட்ட நாயகன். அதே நாளில் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்தை, 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே வீழ்த்தியது. உருகுவே அணியின், கடி மன்ன் லூயிஸ் சுவாரஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மற்றொரு போட்டியில் கிரீஸ்-ஜப்பான் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பானின் கெய்சுகே ஹோண்டா, ஆட்ட நாயகன்.

இத்தாலி தோல்வி..

இத்தாலி தோல்வி..

ஜூன் 20ம்தேதி நடந்த போட்டியில் இத்தாலியை 1-0 கணக்கில் கோஸ்ட ரிகா தோற்கடித்தது. பிரையான் ரூயிஸ், ஆட்ட நாயகன். மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்கடித்தது. அந்த அணியின் கரிம் பென்சமா ஆட்ட நாயகனானார். மற்றொரு போட்டியில் ஈக்குவெடார் அணி ஹோண்டுராஸை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஈக்குவெடாரின் என்னர் வளன்சியா, ஆட்ட நாயகன்.

போட்டி கொடுத்த ஈரான்

போட்டி கொடுத்த ஈரான்

ஜூன் 21ம்தேதி நடந்த போட்டியில் ஈரானை 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த்தியது. லியோனல் மெஸ்சி, ஆட்ட நாயகன். ஜெர்மனி, கானா இடையேயான போட்டி 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. ஜெர்மனியின் மரியோ கோயட்ஸ், ஆட்ட நாயகன். மற்றொரு போட்டியில், ஹெர்சகோவினாவை 1-0 என்ற கணக்கில் நைஜீரியா வீழ்த்தியது. பீட்டர் ஒடேம்விங்கி, ஆட்டநாயகன்.

தென்கொரியா அவுட்

தென்கொரியா அவுட்

ஜூன் 22ம்தேதி நடந்த போட்டியில் ரஷ்யாவை, பெல்ஜியம் 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஈடன் ஹசார்ட், ஆட்ட நாயகன். தென்கொரியாவை, அல்ஜீரியா 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இஸ்லாம் ஸ்லிமனிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. போர்ச்சுக்கல்-அமெரிக்கா போட்டி 2-2 என டிரா ஆனது. அமெரிக்காவின் டிம் ஹோவர்ட், ஆட்ட நாயகன்.

ஸ்பெயின் ஆறுதல்

ஸ்பெயின் ஆறுதல்

ஜூன் 23ம்தேதி சிலியை, நெதர்லாந்து 2-0 என்று வீழ்த்தியது. அர்ஜென் ரொப்பன், ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதேபோல ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது. டேவிட் வில்லா, ஆட்ட நாயகன்.

நெய்மர் ஆட்ட நாயகன்

நெய்மர் ஆட்ட நாயகன்

மற்றொரு ஆட்டத்தில் கேமரூனை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது. 2 கோல் போட்ட பிரேசிலின், நம்பிக்கை நட்சத்திரம் நெய்மருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. அதேபோல மெக்சிகோ, 3-1 என்ற கோல் கணக்கில், குரோசியாவை வீழ்த்தியது. ரஃபேல் மர்குயஸ், ஆட்ட நாயகன்.

ஜப்பான் தோல்வி

ஜப்பான் தோல்வி

ஜூன் 24ம்தேதி நடந்த போட்டியில் இத்தாலியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது உருகுவே. ஆனால் ஆட்ட நாயகன் விருது என்னவோ இம்முறை தோற்ற அணி வீரரான ஜியான்லுய்கி பஃபோனுக்கு அளிக்கப்பட்டது. கோஸ்டரிகா-இங்கிலாந்து இடையேயான மற்றொரு போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஜப்பான், 4-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோற்றது. ஜக்சன் மர்டினெஸ், ஆட்ட நாயகன். மற்றொரு போட்டியில் ஐவரி கோஸ்ட் அணியை கிரீஸ், 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. சாமராஜ், ஆட்டநாயகன்.

நைஜீரியாவுடன், பிரேசில் நல்ல போட்டி

நைஜீரியாவுடன், பிரேசில் நல்ல போட்டி

ஜூன் 25ம்தேதி நடந்த போட்டியில் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. லியோனல் மெஸ்சி, ஆட்ட நாயகன். மற்றொரு போட்டியில் போஸ்னியா அணி ஈரானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. எடின் டிசெகோ, ஆட்ட நாயகன். மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, ஹோண்டுராசை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. மூன்று கோல்களையும் அடித்த, எக்செர்டான் ஷக்கிரி, ஆட்ட நாயகன். மற்றொரு போட்டியில் ஈகுவெடார்-பிரான்ஸ் இடையேயான போட்டி 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது.

ரொனால்டோ ஆட்ட நாயகன்

ரொனால்டோ ஆட்ட நாயகன்

ஜூன் 26ம்தேதி நடந்த ஆட்டத்தில், கானாவை, போர்ச்சுக்கல் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. போர்ச்சுக்கலின் நம்பிக்கை நட்சத்திரம், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி தோற்கடித்தது. தாமஸ் முல்லர், ஆட்ட நாயகன். தென்கொரியாவை மற்றொரு போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கணக்கில் மண்டியிட செய்தது. ஜன் வெர்டோன்கன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, ரஷ்யா-அல்ஜீரியா போட்டி 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. அல்ஜீரியாவின் இஸ்லாம் ஸ்லிமனி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பிரேசில் திணறல்

பிரேசில் திணறல்

குரூப் போட்டிகள் நிறைவுற்ற நிலையில், நாக்-அவுட் போட்டிகள் 28ம்தேதி முதல் துவங்கியுள்ளன. முதல் போட்டியிலேயே 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்ததால் பெனால்டி ஷாட் வாய்ப்பு தரப்பட்டு அதில் பிரேசில் வென்றது. பிரேசிலின் கீப்பர் ஜூலியோ சீசர், ஆட்ட நாயகனானார். மற்றொரு போட்டியில் உருகுவேவை 2-0 என்ற கணக்கில் கொலம்பியா வென்றது. ஜேம்ஸ் ரோட்ரிகஸ், ஆட்ட நாயகன்.

நெதர்லாந்து அசத்தல்

நெதர்லாந்து அசத்தல்

ஜூன் 29ம்தேதி நடந்த போட்டியில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில், மெக்சிகோவை வென்றது. மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஒசோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு போட்டியில் கோஸ்ட ரிகா, கிரீஸ் அணியை 5க்கு 3 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் வாய்ப்பில் வீழ்த்தி வெற்றிபெற்றது கோஸ்ட ரிகா. அந்த அணியின் கோல் கீப்பர் கெய்லோர் நவாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Story first published: Monday, June 30, 2014, 16:28 [IST]
Other articles published on Jun 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+