Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கால்பந்து.. கோப்பையை வெல்லக் காத்திருக்கும் 5 அணிகள்

ரியோடிஜெனிரோ: உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய ஜாம்பவான்கள் கோப்பையை வெல்லும் துடிப்புடன் காத்திருக்கின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன. பிரேசிலில் 64 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற 'வெறியுடன்' காத்திருக்கிறது பிரேசில்.

இந்த உலகக் கோப்பையை வெல்லக் காத்திருக்கும் அணிகள் பற்றிய ஒரு பார்வை..

ஸ்பெயின்

ஸ்பெயின்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின். ஸ்பெயின் அணி ‘பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.

ஸ்பெயின் நாளை நெதர்லாந்தை எதிர் கொள்கிறது. 18-ந் தேதி சிலியுடனும், 23-ந் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகின்றன. அணியின் வலிமை பற்றி ஸ்பெயின் பயிற்சியாளர் டெல்பாஸ்கியூ கூறுகையில், உலக கோப்பை போட்டிக்காக தீவிர பயிற்சி பெற்று வந்தோம். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய பிறகு நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

எங்கள் அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. உலக கோப்பையை மீண்டும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறோம். அந்த அணியை பார்த்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தை பிடித்ததால் நாங்கள் நெதர்லாந்தை மதிக்கிறோம் என்றார்.

கடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியின் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில்

பிரேசில்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் அணி பிரேசில். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் இம்முறை தன் சொந்த மண்ணில் மகுடம் சூட காத்திருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கான்ஃபெடரேசன் கோப்பை இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை 3-0 என வீழ்த்தியதிருந்தது பிரேசில்.

கடந்த 1950 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிச் சுற்று பிரேசிலின் ரியோடீ ஜெனீரோவில் நடைபெற்றது. அப்போது பிரேசிலும், அதன் அண்டை நாடான உருகுவேயும் யுத்தத்துக்கு தயாராக இருந்தன. மைதானத்தில் ஆட்டத்தைக் காண 1,73,850 கால்பந்து வெறியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

கால்பந்து தங்கள் ரத்தத்தில் ஊறியது என்பதால் வெற்றி தங்களுக்கே என பிரேசில் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வி அடைந்தது. இதனால் நாடே துக்கத்தில் ஆழ்ந்தது.

2002ஆம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை வெல்ல முடியாத நிலையில் இருக்கும் பிரேசில் அணி முதல் ஆட்டத்தில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

கடந்த உலகக் கோப்பையில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததைப் போல இந்தமுறை பிரேசில் அணியின் இளம் வீரர் நெய்மர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இம்முறை உலகக் கோப்பை கால்பந்தில் பிற அணிகளுக்கு சவாலாக இருக்கக் கூடிய அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கும். 1966-ல் நடைபெற்ற 8-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இங்கிலாந்து நடத்தியது. அதில் இங்கிலாந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. பேங்ஸ், மோரி, சார்ல்டன், கிரேவ்ஸ், ஹர்ட்ஸ், ஹன்ட் போன்ற வீரர்களைக் கொண்டிருந்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஃபிராங்க் லாம்பார்ட். ங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் தொடரி்ல், கடந்த 13 வருடங்களாக செல்சியா அணிக்காக ஃபிராங்க் லாம்பார்ட் விளையாடி உள்ளார். ஃபிராங் லாம்பார்ட் நம்பிக்கை வீரராக இருப்பதாக அந்த் அணியின் நிர்வாகி ராய் ஹோட்சென் கூறியுள்ளார். இந்த அணியில் ஜாக் வில்ஷெர், அலெக் ஓக்ஸ்லெட், ரோஸ் பர்க்லே ஆகிய சிங்கங்களும் இங்கிலாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.

ஜெர்மனி

ஜெர்மனி

உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த நாடு ஜெர்மனி. ஒவ்வொரு உலக கோப்பை போட்டியிலும் தொடக்க சுற்று போட்டிகளில் பலமான அணிகளை வீழ்த்தி வெற்றிகளை தொடர்ந்து குவித்தாலும், அரையிறுதியில் தோற்றுப் போய் வெளியேறுவது ஜெர்மனிக்கு வாடிக்கையாகப் போய் விட்டது.

1954ம் ஆண்டு முதல் முறையாக ஜெர்மனி அணி உலக கோப்பையை வென்றது. கடைசியாக 1990ம் ஆண்டு இத்தாலியில் நடந்த போட்டியில் உலக கோப்பையை வென்றது அப்போதைய மேற்கு ஜெர்மனி அணி. அதன் பின்னர் ஒன்றுபட்ட ஜெர்மனி அணிக்கு உலக கோப்பை வெற்றி கனவாகவே இருந்து வருகிறது.

2002ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் யோகஹாமா நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் போது இறுதி வரை முன்னேறியது ஜெர்மனி அணி. இறுதிப் போட்டியில் வீறு பிரேசிலிடம் சரணடைந்து தோல்வி கண்டனர் ஜெர்மனி வீரர்கள்.

அதன் பின்னர், கடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளிலும் ஜெர்மனி சிறப்பாக விளையாடினாலும், உலக கோப்பை கிடைக்கவில்லை. இரண்டிலும் ஜெர்மனி அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

24 ஆண்டுகளாக உலக கோப்பைக்காக போராடி வருகிறது ஜெர்மனி. இது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாஹெம். ‘உலக கோப்பை அரையிறுதி போட்டியில் மீண்டும் வெளியேறக்கூடாது என எண்ணுகிறேன். பிரேசிலில் உலக கோப்பையை வெல்வதுதான் எனது தீர்க்கமான இலக்கு. உலக கோப்பையை வெல்வதற்கு தேவையான தாக்குதல் நடத்தக்கூடிய அணி எங்களிடம் உள்ளது. எங்களது வீரர்களிடம் உள்ள திறமையும், தாங்களே உயர்ந்தவர் என்ற எண்ணமும் அணிக்கு நலன் பயப்பதாக மட்டுமே அமைய வேண்டும் என்றார்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்தை வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ள அணிகளில் பிரான்ஸும் ஒன்று. இந்த அணியின் முன்னணி வீரர் பிராங் ரிபரி, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளின் அனுபவத்தை கொண்டு பிரான்ஸ் அணியின் வீரர்கள் பட்ரிஸ் எவ்ரா, ரபேல் ஆகியோர் முழுத் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

Story first published: Thursday, June 12, 2014, 11:44 [IST]
Other articles published on Jun 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+