ஃபிபா உலகக் கோப்பை... நோன்பு திறக்க முஸ்லிம் வீரர்கள் கடைபிடிக்கும் சூப்பர் டெக்னிக்
Recommended Video

மாஸ்கோ: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இஸ்லாமிய நாட்டு வீரர்கள், நோன்பு திறக்க மிகவும் வித்தியாசமான முறைகளை கடைபிடிக்கிறார்கள்.
ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெறுகிறது.
குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத ரஷ்யா இந்த கால்பந்து தொடரை கோலாகலமாக நடத்துகிறது. இதில் மொத்தம் 7 நாடுகளில் அதிக அளவில் முஸ்லீம் வீரர்கள் இருக்கிறார்கள்.

சவுதியும் ஈரானும்
இந்த போட்டியில் சவுதியும், ஈரானும் மிகவும் கடுமையான நோன்பு விதிகளை கடைபிடிக்கிறது. முதலில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்த போட்டியில்தான், சவுதி வீரர்கள் நோன்பு திறந்தனர். அவர்கள் இதற்காக போட்டி முடியும் வரை காத்திருந்தார்கள். அதேபோல் ஈரான் நாடும் வீரர்கள் போட்டி முடியும் வரை காத்திருந்து நோன்பு திறக்க முடிவு எடுத்துள்ளனர்.

மொராக்கோ துனிஷியா நிலைப்பாடு
மொராக்கோ இதில் நிலையற்ற முடிவு எடுத்துள்ளது. விளையாடும் போது உடல் கண்டிப்பாக ஒத்துழைக்கவில்லை என்றால் நோன்பு திறந்து கொள்ளலாம் என்றும் அந்நாடு வீரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் துனிஷியா வீரர்கள் நோன்பு காரணமாக மிகவும் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது . இதனால், துனிஷியா வீரர்களுக்கும் இதே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எகிப்து
இதில் எகிப்து மிகவும் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவரை அந்நாடு நியமித்துள்ளது. அவர் எல்லோர் உடலையும் சோதித்து தினமும் நோன்பு இருக்கலாமா வேண்டாமா என்று தெரிவிப்பார். அதேபோல் நைஜீரியா, தேவைபடும் சமயங்களில் அவசரமான காலங்களில், நோன்பு திறக்க அனுமதி அளித்துள்ளது.

செனெகல்
செனெகல் என்ற சிறிய நாட்டில் நிறைய இஸ்லாமிய வீரர்கள் இருக்கிறார்கள். அந்நாட்டின் பயிற்சியாளரே இஸ்லாமியர்தான். இத்தானில் அவர்கள் வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர் . அதன்படி கடைசி நாட்களை மட்டும் நோன்பு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications