Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேர் சொல்லும் பிள்ளை... ஹெட்டிங்கில் கலக்கும் பிரேசில் வீரர் மார்சலோவின் மகன்!

டெல்லி: புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று கூறும் அளவுக்கு, பிரேசில் கால்பந்து அணியின் மார்சலோ வியராவின் 8 வயது மகன், ஹெட்டிங்கில் கலக்கி வருகிறார்.

அடுத்த மாதம் துவங்கும் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் பிரேசில் அணியில் இடம்பெற்றுள்ள மார்சலோ, உலகின் தலைச் சிறந்த பின்கள வீரராவார்.

fifa world cup 2018 russia offbeat

அவர் தற்போது ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி பங்கேற்கும் ஒரு போட்டிக்கு இடையே, டிரெஸ்ஸிங் ரூமில், அணியின் வீரர்களுடன், மார்சலோவின் 8 வயது மகன் ஹெட்டிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

மார்சலோவின் மகன் என்சோ வியரா, ஸ்பெயினைச் சேர்ந்த கிளப் அணியின் ஜூனியர் பிரிவில் விளையாடி வருகிறார். தலையால் பாலைத் தட்டும் ஹெட்டிங் செய்வதில் கில்லாடியாக உள்ளான்.

தந்தை விளையாடும் போட்டியை பார்க்கச் சென்ற அவன், ரியல் மாட்ரிட் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில், மார்சலோ உள்பட, 11 வீரர்களுடன் ஹெட்டிங் செய்து அதை கடைசியில், ஒரு கூடைக்குள் அனுப்புகிறான்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி, 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பிரேசிலுக்கு அடுத்த தலைமுறை வீரர் தயாராகி விட்டார் என்று அனைவரும் பாராட்டுகின்றனர்.

Story first published: Friday, May 25, 2018, 18:26 [IST]
Other articles published on May 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+