Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரம்மாண்ட துவக்க விழா... கண்கவர் நிகழ்ச்சிகள்... துவங்கியது ஃபிபா ஃபீபர்!

சென்னை: கண்கவர் வாணவேடிக்கைகள், மயக்கும் இசை நிகழ்ச்சிகள், நரம்பை முறுக்க வைக்கும் டிரம்போலின் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கின. அடுத்ததாக புல்லரிக்க வைக்கும் ஆட்டங்கள் அடுத்த 32 நாட்களுக்கு காத்திருக்கின்றன. துவக்க விழாவில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த 32 நாடுகளும் தலா 4 அணிகள் என, 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்ததாக நடைபெறும் நாக் அவுட் சுற்றில் விளையாடும்.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. மாஸ்வில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதுகின்றன.

கண்கவர் நிகழ்ச்சிகள்

அதற்கு முன்னதாக ரஷ்யாவின் பெருமையை, சிறப்பை காட்டும் வகையில், மிகவும் பிரம்மாண்டமான துவக்க விழா நடைபெற்றது. இதில் முதலில் 500 உள்நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நடனம், இசை, ரஷ்யாவில் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தன.

 சொக்க வைத்த கரிபுலினா

சொக்க வைத்த கரிபுலினா

உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ரோபி வில்லியம்ஸ் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. பிரபல ரஷ்ய இசைக் கலைஞர் அய்டா கரிபுலினாவின் நிகழ்ச்சியை மைதானத்தில் கூடியிருந்தோரை மெய்மறக்க வைத்தது.

 ரொனால்டோவுக்கு கவுரவம்

ரொனால்டோவுக்கு கவுரவம்

வீரர்கள் சார்பில் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசிலின் ரொனல்டோ துவக்க விழாவில் பங்கேற்றார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர், லிவ் இட் அப் என்ற உலகக் கோப்பை பாடலை பாடினர்.

 32 நாட்கள் போட்டிகள்

32 நாட்கள் போட்டிகள்

பிரம்மாண்டமான, கண்களை கவரும் வகையில் நடந்த துவக்க விழாவைத் தொடர்ந்து, இந்த உலகக் கோப்பை போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த 32 நாட்களுக்கு 32 அணிகள் இடையே 64 ஆட்டங்கள் நடக்க உள்ளன.

Story first published: Thursday, June 14, 2018, 20:19 [IST]
Other articles published on Jun 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+