For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லோகோ, பாடல், வித்தியாசமான கால்பந்து.. 2018 பிஃபா உலகக் கோப்பை போட்டியின் சிறப்புகள்!

இந்த வருடம் ரஷ்யாவில் நடக்க இருக்கும் பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் எல்லாம் தொடங்கிவிட்டது.

By Shyamsundar

மாஸ்கோ: இந்த வருடம் ரஷ்யாவில் நடக்க இருக்கும் பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் எல்லாம் தொடங்கிவிட்டது. மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி உள்ளது.

இந்த தொடர் ரஷ்யாவில் நடக்க உள்ளது. ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெறுகிறது. குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத ரஷ்யா இந்த கால்பந்து தொடரை கோலாகலமாக கொண்டாட உள்ளது.

என்ன கால்பந்து, என்ன பாடல், என்ன லோகோ என எல்லா விவரங்களும் வெளியாகி உள்ளது. அணிகள் தீவிரமாக பயிற்சி செய்து வரும் நிலையில், இதில் என்னென்ன சிறப்பம்சம் இருக்கிறது என்று பார்த்துவிடலாம்.

பந்து

பந்து

எல்லா பிஃபா உலகக் கோப்பை தொடருக்கும் வித்தியாசமான கால்பந்து வடிவமைக்கப்படும். இந்த வருட கால்பந்திற்கு டெல்ஸ்டர் 18 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இந்த கால்பந்தை ஸ்பான்சர் செய்கிறது. 1970 ல் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பயன்படுத்தப்பட்ட அதே கால்பந்தை கொஞ்சம் மாற்றி அப்டேட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். பழைய பந்தில் 32 கட்டங்கள் இருக்கும், புதிய பந்தில் 6 கட்டங்கள் மட்டுமே இருக்கும்.

லோகோ என்ன

லோகோ என்ன

எல்லா வருடமும் பிஃபா உலகக் கோப்பை தொடருக்கு லோகோவில் சிறிய அளவில் மட்டும் மாற்றம் செய்யப்படும். இந்த வருடமும் மிக சிறிய அளவிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லிஸ்பன் என்பவரால் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு, நீலம் கலந்த கலவையில் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. லோகோ முழுக்க ரஷ்யாவின் பாரம்பரிய அடையாளம் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நீலம் , சிவப்பு நிறம் கூட ரஷ்ய கொடியில் இருக்கும் வண்ணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரினம்

உயிரினம்

எல்லா பிஃபா உலகக் கோப்பை தொடருக்கும் ஒரு விலங்கோ, பறவையோ அதிகாரப்பூர்வ அடையாளமாக வைக்கப்படும். ''சபீவாக்கா'' ஒருவகை நரி இனங்களில் ஒன்று, இந்த உயிரான அடையாளமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுவாக 20 சதவிகிதம் பூனையின் குணமும், 27 சதவிகிதம் புலியின் குணமும், மீதம் நரியின் குணமும் இருக்கும். இந்த நரி, கால்பந்து ஒன்றை உதைப்பது போன்ற படம்தான், இந்த தொடரின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.

பாடல் வெளியீடு

பாடல் வெளியீடு

ஒவ்வொரு முறையும் பிஃபா உலகக் கோப்பைக்கு உருவாக்கப்படும் ஆன்தம் பாடல் அந்த வருடம் பெரிய அளவில் ஹிட் ஆகும். ரிக்கி மார்டினின் ''ஆலே.. ஆலே'', ஷகிராவின் ''வக்கா வக்கா'' ஹிட்டானது போல இந்த சீசன் கோப்பைக்கான பாடல் அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஜெருலோ பாடியிருக்கிறார். நிக்கி மினாஜ், பிட்புல் இந்த பாடலில் சில வரிகளை எழுதி பாடியுள்ளனர். கலர்ஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பாடல், உலகில் இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமையை பேசியுள்ளது. முக்கியமாக கறுப்பின மக்களின் விடுதலையை பேசும் பாடலாக வந்துள்ளது.

Story first published: Monday, May 21, 2018, 13:05 [IST]
Other articles published on May 21, 2018
English summary
FIFA World Cup 2018: Theme song, Logo, Mascot, Football , all details you need to know!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+