Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக்கோப்பை.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. நள்ளிரவில் முக்கிய போட்டிகள்.. முதல்வார அட்டவணை!

தோஹா: ஃபிபா உலகக்கோப்பைத் தொடரின் முதல் வாரத்தில் நடைபெறும் முக்கியப் போட்டிகள் நள்ளிரவில் நடக்கவுள்ளது. இந்த நிலையில் முதல் வாரத்தில் நடக்கவுள்ள போட்டிகளின் அட்டவணை குறித்து பார்க்கலாம்.

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும். சுமார் 200க்கும் மேற்பட்ட அணிகள் தகுதி சுற்றில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்துவர். அதில் தகுதிச்சுற்று அடிப்படையில் சிறப்பாக செயல்படும் அணிகள் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும்.

32 அணிகள் பங்கேற்றுள்ள கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் இன்று கத்தாரில் தொடங்கவுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக்கோப்பைத் தொடர் என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கத்தார் அணியை எதிர்த்து ஈக்வேடார் அணி விளையாடுகிறது. முதல் நாளான இன்று மட்டுமே ஒரே ஒரு போட்டி நடைபெறுகிறது.

 நாளை 2 போட்டிகள்

நாளை 2 போட்டிகள்

இதனைத் தொடர்ந்து நாளை முதல் ஒவ்வொரு நாளும் 4 குரூப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளது. நாளை குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வலிமையான இங்கிலாந்து அணியை எதிர்த்து ஈரான் அணி விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது. அதேபோல் மாலை 9.30 மணிக்கு நடக்கவுள்ள போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாட உள்ளது.

 அர்ஜென்டினா - சவுதி அரேபியா மோதல்

அர்ஜென்டினா - சவுதி அரேபியா மோதல்

இதேபோல் நவ.22ம் தேதி குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து சவுதி அரேபியா அணி மோதவுள்ளது. இந்தப் போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும். அதேபோல் குரூப் டி பிரிவில் உள்ள டென்மார்க் - துனிஷியா அணிகள் மோதும் போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ளது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்த்து போலாந்து அணி விளையாடுகிறது. இறுதியாக குரூப் பி பிரிவில் உள்ள அமெரிக்கா - வேல்ஸ் அணி மோதவுள்ளன. இது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.

 பிரான்ஸ் - ஆஸ்திரேலியா மோதல்

பிரான்ஸ் - ஆஸ்திரேலியா மோதல்

நவ.23ம் தேதி முதல் போட்டியாக குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள மொராக்கோ அணியை எதிர்த்து வலிமையான குரோஷியா அணி விளையாடுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குரூப் ஈ பிரிவில் உள்ள ஜெர்மனியை அணியை எதிர்த்து ஜப்பான் அணி விளையாட உள்ளது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மிகவும் வலிமை வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்த்து கோஸ்ட்டா ரிக்கா அணி மோத உள்ளது. பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது.

 போர்ச்சுகல் - கானா அணிகள் மோதல்

போர்ச்சுகல் - கானா அணிகள் மோதல்

இதேபோல் நவ.24ம் தேதியும் 4 போட்டிகள் நடக்கவுள்ளன. குறிப்பாக குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்விட்சர்லாந்து அணியை எதிர்த்து கேமரூன் அணி மோத உள்ள போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் உருகுவே அணியை எதிர்த்து தென் கொரியா அணி விளையாடுகிறது. பின்னர் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை எதிர்த்து கானா அணி மோத உள்ளது. பின்னர் நள்ளிரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெல்ஜியம் அணியை எதிர்த்து கனடா அணி விளையாட உள்ளது.

 பிரேசில் - செர்பியா மோதல்

பிரேசில் - செர்பியா மோதல்

நவ.25ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வேல்ஸ் அணியை எதிர்த்து ஈரான் அணி விளையாட உள்ளது. பின்னர் 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கத்தார் - செனகல் அணி விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து - ஈகுவடார் அணிகள் மோதும் போட்டி இரவு 9.30 மணிக்கு நடக்கவுள்ளது. இதன்பின்னர் குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணியை எதிர்த்து செர்பியா அணி விளையாடும் போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 இங்கிலாந்து - அமெரிக்கா மோதல்

இங்கிலாந்து - அமெரிக்கா மோதல்

இதேபோல் நவ.26ம் தேதி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் குரூப் டி பிரிவில் உள்ள துனிஷியா அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது. இதேபோல் குரூப் சி பிரிவில் உள்ள போலாந்து அணியை எதிர்த்து சவுதி அரேபியா அணி மோதும் போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ளது. தொடர்ந்து குரூப் டி பிரிவில் உள்ள பிரான்ஸ் அணியை எதிர்த்து டென்மார்க் அணி விளையாடும் போட்டி இரவு 9.30 மணிக்கு நடக்க உள்ளது. இறுதியாக குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்த்து அமெரிக்கா ஆடும் போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்க உள்ளது.

 அர்ஜென்டினா - மெக்சிகோ மோதல்

அர்ஜென்டினா - மெக்சிகோ மோதல்

அதேபோல் அடுத்த வாரம் ஞாயிறு அன்று நான்கு போட்டிகள் நடக்க உள்ளன. அதில் குரூப் ஈ பிரிவில் உள்ள ஜப்பான் அணியை எதிர்த்து கோஸ்ட்டா ரிக்கா அணி விளையாடும் போட்டி 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதெபோல் மாலை 6.30 மணிக்கு நடக்கும் கால்பந்து போட்டியில் பெல்ஜியம் - மொராக்கோ அணிகள் மோதுகின்றன. அதேபோல் இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரோஷியாவை எதிர்த்து கனடா அணி விளையாட உள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து மெக்சிகோ அணி மோத உள்ளது.

Story first published: Sunday, November 20, 2022, 14:35 [IST]
Other articles published on Nov 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+