For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிஃபா உலககோப்பை 2022 - ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்தது.. சொந்த அணி வீரரே தாக்கிய அதிர்ச்சி

தோஹா : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஈரானை எதிர்கொண்டது. இரு அணிகளும் தற்போது தான் கால்பந்து வரலாற்றில் முதல் முறை மோதுகின்றன.

இங்கிலாந்து அணி கடந்த 5 போட்டிகளில் ஒரு முறை கூடு வெற்றி பெறவில்லை. இதனால், இன்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்தது.

56 ஆண்டுகளுக்கு பிறகு ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி, உலககோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அபார வெற்றி

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியே பெரும்பாலான பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்து வீரர் ஷாகா அதிகபட்சமாக 2 கோல் அடிக்க, ஸ்டர்லிங், மார்கஷ் ராஸ்ஃபோர்ட், ஜூட் பெல்லிங்கம் மற்றும் ஜொக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஈரான் அணி ஆட்டத்தில் தங்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றியது, இதனால் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 6க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெனால்டி தரவில்லை

பெனால்டி தரவில்லை

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்களது அதிரடியை அதிகப்படுத்தினர். அப்போது, ஈரான் அணியின் கோல் போஸ்ட்க்கு பந்துகளை இங்கிலாந்து வீரர்கள் கடத்தி வந்தனர்.

காயம்

காயம்

அப்போது பந்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரான் வீரர் மஜித்தும், கோல் கீப்பர் அலியும் ஓடி வந்த போது எதிர்பாராத விதமாக இருவரும் மோதி கொண்டனர். இதில், அலியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் நிலை தடுமாறி, கோல் கீப்பர் அலி கீழே விழுந்தார். இதனையடுத்து, மருத்துவ குழு உடனடியாக வந்து, அவருக்கு வெளியான ரத்தத்தை நிறுத்த முயற்சி செய்தனர்.

ஆட்டம் நிறுத்தம்

ஆட்டம் நிறுத்தம்

அலி எழுந்து நின்று மீண்டும் போட்டியில் தொடர அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் என்னால் முடியவில்லை என்று கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து மாற்று கோல் கீப்பர் ஹூசைன் களத்திற்கு வந்தார். இதனால் போட்டி 14 நிமிடம் வரை தடைப்பட்டது. இதற்கு ஈடு செய்ய கூடுதல் நேரம் இரு பகுதியிலும் வழங்கப்பட்டது.

Story first published: Monday, November 21, 2022, 22:22 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
FIFA world cup 2022 – Iran Goal Keeper Allireza injured in a clash vs England ஃபிஃபா உலககோப்பை 2022 - ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்தது.. சொந்த அணி வீரரே தாக்கிய அதிர்ச்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+