Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போர்ச்சுக்கல் அணி அதிர்ச்சி தோல்வி.. ரொனால்டோ மேஜிக் பலிக்கவில்லை.. நாக் அவுட் சுற்றில் தென் கொரியா

கத்தார் : கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆசிய அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சவுதியும், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகளை ஜப்பானும் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. தற்போது இன்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியும், தென் கொரியா அணியும் மோதின.

இதில் குரூப் H ஆட்டத்தில் 4அணிகளும், ஒரே நேரத்தில் மோதின. போர்ச்சுக்கல் அணி ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால், இன்றைய ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வென்று இருந்தால், உருகுவே அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டியில் நிலவியது. இதனையடுத்து, ஆட்டம் தொடங்கியதுமே போர்ச்சுக்கல் ஆதிக்கத்தை செலுத்தியது.

முதல் கோல்

முதல் கோல்

போட்டியின் 5வது நிமிடத்திலேயே போர்ச்சுக்கல் அணி வீரர் ரிகார்டோ முதல் கோல் அடித்தார். இதன் மூலம் போர்ச்சுக்கல் அணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து, இதனை சமன் செய்யும் முயற்சியில் தென் கொரிய வீரர்கள் ஈடுபட்டனர். போட்டியின் 17 நிமிடத்தில் தென் கொரியா முதல் கோல் அடித்தாலும், அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது.

பதிலடி

பதிலடி

எனினும், இதனால் மனம் தளராத தென் கொரிய வீரர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் தென் கொரிய வீரர்கள் முதல் கோல் போட்டு ஷாக் கொடுத்தனர். ஆட்டத்தின் முதல் பாதி 1க்கு1 என்ற சமன் நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து தென் கொரிய வீரர்கள், இரண்டாவது ஆட்டத்தில் ஆக்கோரஷமாக விளையாடி, போர்ச்சுக்கலின் தடுப்பாட்டத்திற்கு சவால் அளித்தனர்.

தென் கொரியா அபாரம்

தென் கொரியா அபாரம்

ஆட்டத்தின் 2வது பாதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மேஜிக் பலிக்கவில்லை. போட்டி 90 நிமிடத்தை கடந்த நிலையில், ஆட்டம் முடிவுக்கு வரும் சில மணித்துளிக்கு முன்பு தென் கொரியா 2வது கோலை அடித்து போர்ச்சுக்கல்லுக்கு ஷாக் கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு 3வது முறையாக தென் கொரிய அணி தகுதி பெற்றது. இதன் மூலம் மற்றொரு ஆட்டத்தில் 2 கோல் அடித்தும் உருகுவே அணி வெளியேறியது.

Story first published: Friday, December 2, 2022, 23:49 [IST]
Other articles published on Dec 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+