Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டை விட கால்பந்து ஏன் கெத்து??.. உலகமே கொண்டாடுவது இதற்காக தானா?..மூன்று முக்கிய காரணங்கள்

சென்னை: இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களே அதிகம் இருக்கும் நிலையில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் குறித்த பேச்சுக்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்திய அணி கோப்பையை வென்றுவிடுமா? என காத்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால் உலகக்கோப்பையில் கிரிக்கெட் அணிக்கு காட்டிய ஆர்வத்தையும், ஆதரவுகளையும் மிகுவும் குறைந்த அளவில் கூட உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு கொடுக்க இந்திய ரசிகர்கள் தயாராக இல்லை.

அயல்நாடுகளில் மக்களின் உணர்வுகளோடு ஒன்றியுள்ள கால்பந்து போட்டியானது, கிரிக்கெட்டை விட பல மடங்கு சிறப்பான விளையாட்டு என்பதை பல்வேறு வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதற்கு 3 மிக முக்கிய காரணங்களும் உள்ளன. அந்த 3 விஷயங்கள் தான் வரவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை இந்திய ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்கும் காரணமாகும்.

விளையாட்டுடைய மோகம்

விளையாட்டுடைய மோகம்

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் உலகில் சராசரியாக 20 - 25 நாடுகள் வரை தான் புகழ்பெற்று இருக்கின்றன. இதில் இருந்து உலகக்கோப்பைக்கு 12 அணிகள் தான் தகுதி பெறுகின்றன. ஆனால் உலகில் உள்ள 150+க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தேசிய கால்பந்து அணி உள்ளது. அதில் இருந்து உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 30 அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பொழுதுபோக்கு அம்சம்

பொழுதுபோக்கு அம்சம்

முதலில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே இருந்த சூழலில் தற்போது 50 ஓவர், 20 ஓவர், 10 ஓவர் வரை குறைத்துக்கொண்டே செல்கின்றனர். எதிர்காலத்தில் 5 ஓவர் போட்டிகளை கூட பார்க்கலாம். கிரிக்கெட்டிற்கு சர்வதேச போட்டிகள் தான் அழகே. ஆனால் அதனை குறைத்துவிட்டு, லீக் தொடர்களை மட்டும் இனி நடத்த ஏற்பாடு செய்துவருகின்றனர். ஆனால் கால்பந்தில் முதலில் 40 நிமிடம், 2வது 40 நிமிடம் என பல வருடங்களாக எந்தவித மாற்றங்களும் இன்றி மக்களை மகிழ்வித்து வருகிறது. கால்பந்தின் அழகே லீக் சுற்றுகள் தான்.

வருமானம் எவ்வளவு

வருமானம் எவ்வளவு

லீக் சுற்றுகளில் மிகவும் பிரபலாமனது ஐபிஎல் தான். அதில் சிஎஸ்கே மற்றும் மும்பை தான் டாப். 2022ம் ஆண்டில் சிஎஸ்கேவின் மொத்த வருமானம் ரூ. 349 கோடி ஆகும். கால்பந்தில் புகழ்பெற்ற ஐரோப்பா தொடரின் டாப் 10 அணிகளை எடுத்துக்கொண்டால் கடைசி அணியின் வருமானமே ரூ.3200 கோடியாகும். அதாவது ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் உள்ள கடைசிகட்ட அணிகளின் வருமானத்தை விட கிரிக்கெட்டில் முதலிடத்தில் உள்ள அணி சிஎஸ்கே 100 மடங்கு பின்தங்கியுள்ளது.

வீரர்கள் வருமானம்

வீரர்கள் வருமானம்

இந்தியாவில் தான் இருப்பதிலேயே கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக சம்பளம். அதுவும் பிசிசிஐ தருவதை விட ஐபிஎல் தான் அதிகம் தருகிறது. முன்னணி வீரரான விராட் கோலிக்கு ஒரு சீசனுக்கு ரூ.15 கோடி தருகிறது ஆர்சிபி அணி. ஆனால் கிரிக்கெட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஃபிரான்சின் கைலியன் பாப்பேவுக்கு ஒரு போட்டிக்கு ரூ.15 கோடி சம்பளம் தரப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால் இதுதான் உண்மை.

விளையாட்டு அரசியல்

விளையாட்டு அரசியல்

கிரிக்கெட்டில் இந்தியாவை பொறுத்தவரை ஏழ்மையில் இருந்து வரும் அடிதட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அதிசயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நடராஜன் போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்குள் இடம்பிடித்துவிட்டார் என்பது இந்தியாவில் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. ஆனால் கிரிக்கெட்டில் ஒடுக்கப்பட்டவர், பணக்காரர், கறுப்பினத்தவர் என எந்தவித பாகுபாடும் இன்றி திறமை உள்ள வீரர்கள் மிகவும் சகஜமாக வாய்ப்பு பெற்று சாதித்து வருகின்றனர். அவர்கள் மூலம் அவர்களின் நாடே பயன்பெறுகிறது.

 வல்லுநர்கள் கோரிக்கை

வல்லுநர்கள் கோரிக்கை

பொழுதுபோக்கு, பொருளாதாரம், அரசியல் என இந்த முக்கிய விஷயங்களிலுமே கால்பந்தை விட கிரிக்கெட் எட்ட முடியாத அளவிற்கு பின் தங்கியுள்ளது. எனவே வரவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை ரசிகர்கள் கட்டாயம் பார்த்து கிரிக்கெட்டிற்கு தருவதை போன்றே ஆதரவு தர வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த தொடர் குறித்த சுவாரஸ்ய செய்திகளை மைக்கேல் தமிழ் வலைதள பக்கத்தில் உடனுக்குடன் நீங்கள் பெறலாம்.

Story first published: Saturday, November 19, 2022, 12:15 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+