Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கானாவை வீழ்த்திய குரோஷியா.. புதிய சாதனை படைத்த மோட்ரிச்.. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி

பிலடெல்பியா: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் லீக் போட்டியில், குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பிலடெல்பியாவில் மழையையும் பொருட்படுத்தாமல் திரண்ட 68,000 ரசிகர்கள் முன்னிலையில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதன் முடிவில், கானா அணி தோல்வியடைந்த போதிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதே போல வெற்றி பெற்ற குரோஷியாவும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி தொடங்கியதில் இருந்தே குரோஷியா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் குரோஷியாவின் நிகோலா விளாசிச் அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது. எனினும், ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சக வீரர் மேட்டியோ கோவாசிச் கொடுத்த பாஸைப் பெற்று, பெடார் சுசிக் 30 கெஜம் தொலைவில் இருந்து உதைத்து குரோஷியா அணியின் முதல் கோலை அடித்தார்.

FIFA World Cup 2026 Croatia Beats Ghana 2-1 as Modric Sets New Assist Record Both Teams Advance

இரண்டாவது பாதியில் கானா அணி ஆட்டத்திற்குள் மீண்டெழுந்தது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் கானாவின் மாற்று வீரர் எர்னஸ்ட் நுவாமா வீசிய ஃப்ரீ-கிக் பந்தை, டிஃபெண்டர் டெரிக் லுகாசென் கோலாக மாற்றினார். முதலில் இந்த கோல் ஆஃப்சைட் என மறுக்கப்பட்டாலும், கனடா நடுவர் ட்ரூ ஃபிஷர் விஏஆர் பரிசீலனைக்குப் பிறகு கோலை உறுதி செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

ஆனால், ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் குரோஷியா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை குரோஷியாவின் நட்சத்திர வீரர் லுகா மோட்ரிச் துல்லியமாக வீச, அதை நிகோலா விளாசிச் கோலாக மாற்றி 2-1 என அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

FIFA: இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் உலகக்கோப்பையில் வரலாற்று சாதனை.. பனாமாவை வீழ்த்தி முதல் இடம்!

FIFA: இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் உலகக்கோப்பையில் வரலாற்று சாதனை.. பனாமாவை வீழ்த்தி முதல் இடம்!

இந்த அசிஸ்ட் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் கோல் அடிக்க அசிஸ்ட் செய்த மிக வயதான வீரர் என்ற புதிய சாதனையை லுக்கா மோட்ரிச் படைத்துள்ளார். மேலும் கூடுதல் நேரத்தில் கானாவின் அப்துல் ஃபதாவ் கோல் அடிக்க முயன்ற பந்தை மோட்ரிச் தடுத்து நிறுத்தினார். இந்த வெற்றியின் மூலம் குரோஷியா அணி குரூப் L பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கானா அணியும் 2010-க்குப் பிறகு முதல் முறையாக உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

WI vs SL: லாரா, கெய்ல் மட்டுமே செய்த ரெக்கார்டை செய்த அமீர் ஜாங்கூ.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை

WI vs SL: லாரா, கெய்ல் மட்டுமே செய்த ரெக்கார்டை செய்த அமீர் ஜாங்கூ.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை
Story first published: Sunday, June 28, 2026, 8:24 [IST]
Other articles published on Jun 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+