Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கும் முன் "பிஸ்மில்லா" சொன்னாரா? உண்மை என்ன?

அமெரிக்கா: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி தற்போது காலுறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய போர்ச்சுகல் அணி பின்னர் ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று இருக்கிறது.

இந்த சூழலில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று கடந்த முறை மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா அணியை போர்ச்சுகல் எதிர்கொண்டது. இதில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெனால்டி வாய்ப்பு ஒன்று போர்ச்சுகல் அணிக்கு கிடைத்தது.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

அப்போது போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பந்தை உதைப்பதற்கு முன்பு வாயில் ஏதோ ஒரு வார்த்தையை முணுமுணுத்தார். இதைப் பார்த்தவுடன் ரசிகர்கள் ரொனால்டோ இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பிஸ்மில்லா என்ற வார்த்தையை தான் உபயோகித்தார் என்று கூறி அதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரல் ஆக்கினர்.

பிஸ்மில்லாஹ் என்றால் இறைவனின் பெயரால் என்று அர்த்தம். இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் இந்த வார்த்தை ரொனால்டோ பயன்படுத்தியதாக ரசிகர்கள் நம்புவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் நட்சத்திர வீரரான ரொனால்டோ சவுதி அரேபியாவில் நடந்த கால்பந்து தொடரில் பங்கேற்றார். அல்நசர் அணிக்காக ரொனால்டோ விளையாடினார்.

அப்போது சவுதி அரேபிய வீரர்களுடன் இணைந்து அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்ற தொடங்கினார். தண்ணீரை அமர்ந்து குடிப்பது, பேசும்போது பிஸ்மில்லாஹ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது என்ற செயலில் ரொனால்டோ ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாகவே தான் ரொனால்டோ பிஸ்மில்லா என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு கோல் அடித்தார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள போச்சுகல் முன்னாள் வீரர் ஒருவர், ரொனால்டோ பிஸ்மில்லா என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா என்று தெரியாது. ஆனால் போர்ச்சுகல் கால்பந்து வழக்கத்தில் ஒவ்வொரு முறையும் பெனால்டி கோல் அடிக்கும் முன்பு உன்னால் நிச்சயம் கோல் அடிக்க முடியும் என்ற போர்ச்சுகல் வார்த்தையை வீரர்கள் பயன்படுத்துவார்கள்.

FIFA உலககோப்பை போட்டியை நேரில் கண்ட ஜெய்ஸ்வால்.. மெஸ்ஸி ஜெர்சியை அணிந்து உற்சாகம்

FIFA உலககோப்பை போட்டியை நேரில் கண்ட ஜெய்ஸ்வால்.. மெஸ்ஸி ஜெர்சியை அணிந்து உற்சாகம்

ஒருவேளை அந்த வார்த்தை தான் ரசிகர்கள் பிஸ்மில்லாஹ் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். தற்போது காலிறுதியின் முந்தையச் சுற்றில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை போர்ச்சுகல் எதிர்கொள்கிறது.

Story first published: Saturday, July 4, 2026, 11:40 [IST]
Other articles published on Jul 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+