Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA உலககோப்பை 2026: இங்கிலாந்தை கதறவிட்ட கானா அணி.. கோல் அடிக்க முடியாமல் திணறல்

நியூயார்க்: ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் கானாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி கோலே அடிக்காமல் போட்டி சதனில் முடிந்தது, அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தது.

ஆனால், கானாவுக்கு எதிரான லீக் ஆட்டம் அவர்களுக்கு எளிதாக அமையவில்லை. உலகக் கோப்பை கால்பந்தின் கடினமான யதார்த்தத்தை இங்கிலாந்து அணிக்கு உணர்த்திய ஒரு கடுமையான சோதனையாகவே இந்தப் போட்டி அமைந்தது.

England team struggling against Ghana s World Cup defense

இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி:

முந்தைய ஆட்டத்தில் குரோஷியா அணி இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை செலுத்த தீவிரமாக முயன்றது. இது இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமைந்து எளிதாக கோல் அடிக்க வழிவகுத்தது. ஆனால் கானா அணியோ முற்றிலும் மாறுபட்ட வியூகத்தைக் கையாண்டது. அவர்கள் பின்வாங்கி தற்காப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினர். மேலாளர் தாமஸ் துஷெலின் இங்கிலாந்து அணி நீண்ட நேரம் பந்தை தன் வசம் வைத்திருக்க கானா அனுமதித்தாலும், கோல் பகுதிக்குள் அவர்களை ஊடுருவ விடாமல் மிகச் சிறப்பாக தடுத்தது.

FIFA உலககோப்பை: 41 வயதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை.. மெஸ்ஸி ரெக்கார்ட் முறியடிப்பு

FIFA உலககோப்பை: 41 வயதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை.. மெஸ்ஸி ரெக்கார்ட் முறியடிப்பு

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி கோனாவின் கோல் அரணை உடைக்கும் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களிடம் தென்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களால் கோல் அடிக்க முடியல்லை. கானாவின் தற்காப்பு அரணை உடைக்க இங்கிலாந்து பயிற்சியாளர் துஷெல் தனது உத்திகளை மாற்றியமைத்தார். ஆட்டத்தில் எதிர்பார்த்த அளவு செயல்படாத அந்தோணி கார்டனுக்குப் பதிலாக புகாயோ சாகா களமிறக்கப்பட்டார். ஆர்சனல் ஸடாரான இவர் வந்த உடன் இங்கிலாந்தின் ஆட்டத்தில் வேகம் கூடியது. கானா கோல்கீப்பர் ஆசாரேவை மிகக் கடினமாக டைவ் செய்து தடுக்க வைக்கும் அளவிற்கு சாகா ஒரு சிறப்பான கோல் வாய்ப்பை உருவாக்கினார்.

கோல் முயற்சி தோல்வி:

ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இங்கிலாந்து அணி கோல் அடிப்பதற்காக ஆக்ரோஷமாக விளையாடியது. ஆனால் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு சாதகமாக இல்லை. ஓ'ரெய்லி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியதால் அவர் ஏமாற்றத்தில் தலையில் கை வைத்தார். அதேபோல் மார்க் குஹி தலையால் முட்டி அடித்த பந்தும் கோல் கோட்டிற்கு மிக அருகில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் மிகவும் தாமதமாகவே நிகழ்ந்தன. இதனால் இரு அணிகளும் கோல் இன்றி போட்டியை டிராவில் முடித்தனர்.

FIFA: ராவணன் மவன் டா! உலகையே திரும்பி பார்க்க வைத்த ரொனால்டோ.. மெஸ்ஸி தொடர்பான கேள்விக்கு ரியாக்சன்?

FIFA: ராவணன் மவன் டா! உலகையே திரும்பி பார்க்க வைத்த ரொனால்டோ.. மெஸ்ஸி தொடர்பான கேள்விக்கு ரியாக்சன்?

உலகத் தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள கானா அணி, முன்னணி அணியான குரோஷியாவை விட இங்கிலாந்திற்கு மிரள வைக்கும் சவாலை அளித்தது. இந்த வலுவான தற்காப்பு வியூகத்தை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் இங்கிலாந்திடம் இல்லாததே இந்த ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என கால்பந்து விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Wednesday, June 24, 2026, 7:00 [IST]
Other articles published on Jun 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+