Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA உலககோப்பை 2026: யார் இந்த ஃபெரான் டோரஸ்? பைனலில் ஒரே ஒரு கோல் அடித்து மெஸ்ஸிக்கு வில்லன் ஆனார்

நியூயார்க்: லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் 26 வயதான ஃபெரான் டோரஸ் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் மாபெரும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் அர்ஜென்டினாவுக்கு எதிராக நடைபெற்ற இப்போட்டியின் கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் அவர் அடித்த அசாத்திய கோல் ஸ்பெயின் அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்தது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் டோரஸ் பந்தை கோலுக்கு தள்ளி ஸ்பெயின் அணிக்கு 1-0 என்ற முன்னிலையை வழங்கினார். இறுதிவரை அர்ஜென்டினாவால் இந்த கோலை சமன் செய்ய முடியாமல் போனதால், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை முத்தமிட்டது.

Ferran Torres

மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் டோரஸ் பதிவு செய்த முதல் கோல் இதுவாகும். நடப்பு தொடர் முழுவதும் கோல் அடிக்காமல் தடுமாறி வந்த பார்சிலோனா நட்சத்திர வீரர், ஒட்டுமொத்த சர்வதேச கால்பந்து உலகமே உற்றுநோக்கிய இறுதிப் போட்டியில், தனது அணிக்கு மிகவும் தேவையான தருணத்தில் மிகச்சரியாக செயல்பட்டு வெற்றி கோலை அடித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், ஸ்பெயின் அணி தனது இரண்டாவது உலகக் கோப்பை கனவிற்கான 16 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

FIFA உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

FIFA உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

இதனால், தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை அர்ஜென்டினா கோட்டை விட்டது. இதனால் மெஸ்ஸி ரசிகர்களின் இதயம் நொறுங்கியது. இந்த தொடர் முழுவதும் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக பல முடிவுகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பைனலில் அந்த அணி தோற்றது. இந்த தொடர் முழுவதும் 7 போட்டிகளில் தொடர்ந்து வென்ற அர்ஜென்டினா பயணம் முடிவுக்கு வந்தது. அதே போல் ஸ்பெயின் இந்த தொடர் முழுவதும் எதிரணியை வெறும் 2 கோல் தான் அடிக்க விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 20, 2026, 4:08 [IST]
Other articles published on Jul 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+