FIFA உலககோப்பை 2026: கோல்டன் பால், சிறந்த இளம் வீரருக்கான விருதுகளை வென்றது யார்?
நியூயார்க்: 2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதை ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோத்ரி வென்றுள்ளார். இந்த விருதுக்கான போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியைப் பின்னுக்குத் தள்ளி ரோத்ரி முதலிடம் பிடித்தார்.
ஸ்பெயின் அணி தனது இரண்டாவது உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு ரோத்ரியின் சிறப்பான ஆட்டமும், மைதானத்தில் அவர் வெளிப்படுத்திய தலைமைத்துவமும் முக்கியக் காரணமாக அமைந்தன.

தொடர் முழுவதும் ஸ்பெயின் அணியின் நடுப்பகுதியை வலுவாகக் கட்டுப்படுத்திய கேப்டன் ரோத்ரி, ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவரது இந்த அபார பங்களிப்பிற்காகவே அவர் உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கால்பந்து உலகில் லியோனல் மெஸ்சியை முந்தி இந்த விருதை அவர் கைப்பற்றியுள்ளது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே போன்று ஸ்பெயின் அணியின் 19 வயது பாவ் குபார்சி, 2026 உலகக் கோப்பை தொடரின் சிறந்த இளம் வீரர் விருதைக் கைப்பற்றியுள்ளார். இந்த விருதுக்கான பந்தயத்தில் ஸ்பெயின் அணியின் மற்றொரு நட்சத்திர இளம் வீரரான லாமின் யமாலை முந்தி அவர் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு குபார்சியின் தற்காப்பு ஆட்டம் முக்கியப் பங்காற்றியது. மிகக் குறைந்த வயதிலேயே உலகக் கோப்பையின் இத்தகைய உயரிய விருதைப் பெற்ற மிகச் சில இளம் வீரர்களின் பட்டியலில் தற்போது 19 வயது குபார்சி இணைந்துள்ளார்.
இந்த உலககோப்பை தொடரில் அனைவரின் கண்களும் யமால் மீது தான் இருந்தது. ஆனால், அவர் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. சவுதிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அவர் கோல் அடித்தார். மேலும் யமாலுக்கு காயம் ஏற்பட்டதால், அவருடைய முழு திறனையும் வெளிப்படுத்த முடியவில்லை. பைனல் முடிந்ததும், மெஸ்ஸி யமாலை கட்டி அணைத்து வாழ்த்து பெற்றார்.


Click it and Unblock the Notifications

