Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA உலககோப்பை 2026: கோல்டன் ஷூவை தொடர்ந்து 2வது முறையாக வென்று பிரான்ஸ் வீரர் எம்பாபே உலக சாதனை

நியூயார்க்: 2026 பிஃபா உலகக் கோப்பை தொடரின் தங்கக் காலணி எனப்படும் கோல்டன் பூட் விருதை வென்று பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, வரலாற்று சாதனை படைத்துள்ளார். 27 வயதான இந்த நட்சத்திர ஆட்டக்காரர், இந்தத் தொடரில் பிரான்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 10 கோல்களை அடித்துள்ளதுடன், மற்ற வீரர்கள் 4 கோல்கள் அடிப்பதற்கும் உதவியாக இருந்துள்ளார்.

இதன் மூலம் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை விட இரண்டு கோல்கள் அதிகமாகப் பெற்று அவர் முதலிடத்தைப் பிடித்தார். அர்ஜென்டினா அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி, 8 கோல்களை அடித்ததுடன் 4 அசிஸ்ட்களையும் செய்திருந்தார்.

Kylian Mbappe

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை அர்ஜென்டினா எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இறுதியில், அர்ஜென்டினா அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியைத் தழுவியது.

FIFA உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

FIFA உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

2026 உலகக் கோப்பையில் தங்கக் காலணி விருதை வென்றதன் மூலம், எம்பாப்பே கால்பந்து வரலாற்றுப் பக்கங்களில் புதிய சாதனையை படைத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு முறை தங்கக் காலணி விருதை வென்ற உலகின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2022 பிஃபா உலகக் கோப்பையிலும் எம்பாப்பே அதிக கோல் அடித்தவராகத் திகழ்ந்தார்.

அந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக அடித்த ஹாட்ரிக் கோல் உட்பட மொத்தம் 8 கோல்களை அவர் அடித்திருந்தார்.மேலும், இரண்டு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் தலா 8 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் எம்பாப்பே தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே 10 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் 7 கோல்கள் மற்றும் ஒரு அசிஸ்ட் செய்துள்ளார். நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் அசிஸ்ட் ஏதுமின்றி 7 கோல்களை அடித்துள்ளார்.

FIFA உலககோப்பை 2026: யார் இந்த ஃபெரான் டோரஸ்? பைனலில் ஒரே ஒரு கோல் அடித்து மெஸ்ஸிக்கு வில்லன் ஆனார்

FIFA உலககோப்பை 2026: யார் இந்த ஃபெரான் டோரஸ்? பைனலில் ஒரே ஒரு கோல் அடித்து மெஸ்ஸிக்கு வில்லன் ஆனார்

பிரான்ஸ் அணியின் உஸ்மான் டெம்பேலே 6 கோல்கள் மற்றும் 2 அசிஸ்ட்களையும், இங்கிலாந்தின் ஹாரி கேன் 6 கோல்கள் மற்றும் ஒரு அசிஸ்ட்டையும் பெற்றுள்ளனர். ஸ்பெயினின் மைக்கேல் ஓயர்சாபால் 5 கோல்கள் மற்றும் ஒரு அசிஸ்ட் செய்துள்ளார். செனகலின் இஸ்மைலா சர், மெக்ஸிகோவின் ஜூலியன் குய்னோன்ஸ் மற்றும் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் தலா 4 கோல்கள் மற்றும் தலா ஒரு அசிஸ்ட் செய்து இப்பட்டியலில் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

Story first published: Monday, July 20, 2026, 4:20 [IST]
Other articles published on Jul 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+