Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA உலகக் கோப்பை கால்பந்து.. முதல் போட்டியிலேயே 3 ரெட்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

மெக்சிகோ சிட்டி: 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோவில் கோலாகலமாகத் தொடங்கியது. இத்தொடரின் தொடக்க விழா உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் ஷகீரா மற்றும் நைஜீரியாவின் பர்னா பாய் ஆகியோரின் அதிரடி இசையுடன் தொடங்கியது. அவர்கள் இத்தொடரின் அதிகாரப்பூர்வ பாடலான 'டாய் டாய்' பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

FIFA World Cup 2026 Mexico Beats South Africa 2-0 in Opener Amid Record Three Red Cards

இதனைத் தொடர்ந்து மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்திலேயே மெக்சிகோவின் ஜூலியன் குய்னோனஸ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். தென் ஆப்பிரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸ் செய்த தவறான பாஸை பயன்படுத்தி மெக்சிகோ இந்த கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 1-0 என முன்னிலையில் இருந்தது.

ஆட்டத்தின் 2வது பாதியில் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. 50வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் யா யா சிதோலே முரட்டுத்தனமான ஆட்டத்தால் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் தென் ஆப்பிரிக்கா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
இதனைச் சரியாகப் பயன்படுத்திய மெக்சிகோவின் நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ், 67வது நிமிடத்தில் தலையால் முட்டி ஒரு அபாரமான கோல் அடித்து அசத்தினார். கடந்த 2020ல் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 9 மாதங்கள் ஓய்வில் இருந்த ஜிமினெஸின் இந்த கோல் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நெகிழ வைத்தது.

ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தென் ஆப்பிரிக்காவின் தெம்பா ஸ்வானே ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் தென் ஆப்பிரிக்கா 9 வீரர்களுடன் விளையாடியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மெக்சிகோ கேப்டன் சீசர் மாண்டெஸும் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார்.

BAN vs AUS: சரித்திரம் படைத்த வங்கதேசம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்றது!

BAN vs AUS: சரித்திரம் படைத்த வங்கதேசம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்றது!

உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஒரே போட்டியில் 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த 2022 உலகக் கோப்பை தொடர் முழுவதுமே 64 போட்டிகளில் 4 ரெட் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி 3 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Story first published: Friday, June 12, 2026, 7:30 [IST]
Other articles published on Jun 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+