FIFA WC 2026: தோல்வியை தழுவினாலும், மாபெரும் பெருமையுடன் செல்லும் நெதர்லாந்து அணி
மும்பை: பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று நெதர்லாந்து அணி தோல்வியை தழுவினாலும், ஒரு மகத்தான சாதனையுடனே தாயகம் திரும்பி இருக்கிறது. நடப்பு கால்பந்து தொடரில் ஐரோப்பிய அணிகள் கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.
இந்த சூழலில் 2010 ஆம் ஆண்டு பிபா உலகக்கோப்பை இறுதி போட்டி வரை சென்று ரன்னர் அப பட்டத்தை வென்ற நெதர்லாந்து அணி தற்போது நடைபெற்ற 2026 உலகக்கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மொரக்கோ அணி இடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

எனினும் போட்டி 90 நிமிடங்கள் முடிவடையாமல் கூடுதல் நேரம் வரை சென்று பின் பெனாலிட்டி சூடவுட் முறையில்தான் போட்டி முடிந்தது.இதன் மூலம் நெதர்லாந்து அணி ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக 90 நிமிடங்களுக்குள் போட்டியை முடித்தது இல்லை என்ற பெருமை நெதர்லாந்து அணிக்கு கிடைத்திருக்கிறது.
பலமான அணியாக கருதப்படும் பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி போன்ற நாடுகள் கூட இந்த சாதனையை செய்ததில்லை.கடந்த 2022 உலகக் கோப்பை காலி இறுதி போட்டியில் அர்ஜென்டினாவை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது. எனினும் பெனால்ட்டியில் தோல்வியை தழுவியது.2018 உலக கோப்பையில் நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை.
அதற்கு முன்னதாக 2014 உலகக்கோப்பையிலும் இதேபோன்று அர்ஜென்டினாவுடன் பெனால்ட்டியில் தோல்வியை தழுவியது.இதற்கு முன்னதாக 2010 உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் ஸ்பெயினிடம் 116 நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க விட்டு தோல்வியை தழுவியது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஜப்பான் உடனும் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் நெதர்லாந்து அணி சமன் செய்தது.
இப்படி 20 ஆண்டுகளாக 90 நிமிடத்திற்குள் எந்த அணியும் நெதர்லாந்தை கட்டுப்படுத்தியது இல்லை என்ற மகத்தான சாதனையுடன் அந்த அணி தற்போது வெளியேறி இருக்கிறது. பிபா தரவரிசையில் நெதர்லாந்த அணி ஏழாவது இடத்திலும் மோரோக்கோ அணி ஆறாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நான்கு முறை சாம்பியன் ஆன ஜெர்மனி அணி தொடர்ந்து இரண்டு தோல்விகளை தழுவிய நிலையில் தற்போது இரண்டு இடங்கள் சரிந்து 12-வது இடத்தை பிடித்துள்ளது


Click it and Unblock the Notifications

