Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கால்பந்து 3 பிரம்மாண்ட தொடக்க விழாக்கள்.. இந்திய நேரப்படி எப்போது, எங்கு பார்க்கலாம்?

மெக்சிகோ: 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று (வியாழக்கிழமை, ஜூன் 11) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. வரலாற்றிலேயே முதல்முறையாக 3 நாடுகள் இணைந்து நடத்தும் இத்தொடருக்காக 3 தனித்தனி தொடக்க விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இத்தொடரை நடத்துகின்றன. மிலன் குளிர்கால ஒலிம்பிக்கை வடிவமைத்த மார்கோ பாலிச் இந்த 90 நிமிட தொடக்க விழா நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார்.

இந்திய நேரப்படி தொடக்க விழாக்கள்:

மெக்சிகோ தொடக்க விழா: ஜூன் 11 (இன்று) இரவு 10:30 மணி. விழா முடிந்ததும் மெக்சிகோ - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் லீக் போட்டி நடக்கும்.

கனடா தொடக்க விழா: ஜூன் 12 (வெள்ளிக்கிழமை) இரவு 11:00 மணி. தொடர்ந்து கனடா - போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா போட்டி நடக்கும்.

அமெரிக்கா தொடக்க விழா: ஜூன் 13 (சனிக்கிழமை) அதிகாலை 5:00 மணி. தொடர்ந்து அமெரிக்கா - பராகுவே போட்டி நடக்கும்.

FIFA World Cup 2026 Opening Ceremonies Check India Timings Venues and Live Streaming Details
Photo Credit: Image generated by AI

மெக்சிகோ தொடக்க விழா

மெக்சிகோ நாட்டில் உள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் இன்று இரவு முதல் தொடக்க விழா நடக்கிறது. உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் ஷகீரா மற்றும் நைஜீரியாவின் பர்னா பாய் ஆகியோர் இணைந்து இத்தொடரின் அதிகாரப்பூர்வ பாடலான 'டாய் டாய்' பாடலை முதன்முறையாக மேடையில் பாட உள்ளனர்.

மெக்சிகோ தேசிய கீதத்தை அலெஜான்ட்ரோ பெர்னாண்டஸும், தென்னாப்பிரிக்க தேசிய கீதத்தை டைலாவும் பாடுகின்றனர். ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயெக் சிறப்பு தூதராகப் பங்கேற்கிறார். மேலும் ஜே பால்வின், பெலிண்டா, மேனா போன்ற பல பிரபலங்கள் மேடையை அலங்கரிக்கின்றனர்.

கனடா மற்றும் அமெரிக்கா கொண்டாட்டங்கள்

டொராண்டோவில் நடக்கும் கனடா தொடக்க விழாவில் மைக்கேல் புப்லே, அலேசியா காரா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலிவுட் நட்சத்திரம் நோரா ஃபதேஹி ஆகியோர் பங்கேற்று நடனமாட உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் அமெரிக்க தொடக்க விழாவில் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி, பிளாக்பிங்க் இசைக்குழுவின் லிசா, ரெமா மற்றும் அனிட்டா ஆகியோர் ஹாலிவுட் பாணியில் அதிரடிப் பாடல்களைப் பாட உள்ளனர்.

காசுக்காக கால்பந்தை நாசம் செய்யும் பிபா? 3 நிமிட 'டிரிங்க்ஸ்' விதியால் ரசிகர்கள் கொந்தளிப்பு

காசுக்காக கால்பந்தை நாசம் செய்யும் பிபா? 3 நிமிட 'டிரிங்க்ஸ்' விதியால் ரசிகர்கள் கொந்தளிப்பு

இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?

இந்தியாவில் இந்த தொடக்க விழாக்கள் மற்றும் போட்டிகளை ஜீ5 செயலி மற்றும் இணையதளத்திலும், யுனைட் 8 ஸ்போர்ட்ஸ் தளத்திலும் நேரலையில் பார்க்கலாம். தொலைக்காட்சி ஒளிபரப்பைப் பொறுத்தவரை, மத்திய அரசின் கட்டாயப் பகிர்வு விதியின்படி, அரசு தொலைக்காட்சியான 'டிடி ஸ்போர்ட்ஸ்' மற்றும் 'யுனைட் 8 ஸ்போர்ட்ஸ்' நெட்வொர்க் சேனல்களில் நேரடியாகக் காணலாம்.

Story first published: Thursday, June 11, 2026, 16:45 [IST]
Other articles published on Jun 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+