Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

36 ஆண்டுகளில் முதல் உலகக் கோப்பை வெற்றி.. ஹைட்டியை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஸ்காட்லாந்து

பாஸ்டன்: 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில், ஹைட்டி அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இது உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 36 ஆண்டுகளில் ஸ்காட்லாந்து பெறும் முதல் வெற்றியாகும்.

அமெரிக்காவின் பாக்ஸ்பரோ மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஹைட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஸ்காட்லாந்தின் நட்சத்திர வீரர் ஜான் மெக்கின் ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். 20 வயது இளம் வீரர் பென் கானன்-டோக் கொடுத்த அருமையான கிராஸைப் பயன்படுத்தி மெக்கின் இந்த கோலை அடித்தார்.

FIFA World Cup 2026 Scotland beat Haiti First Victory in 36 Years Puts Team on Top of Group C

கடந்த 1998 உலகக் கோப்பையில் கிரெய்க் பர்லி கோல் அடித்ததற்குப் பிறகு (அதாவது 10,244 நாட்களுக்குப் பிறகு) உலகக் கோப்பை அரங்கில் ஸ்காட்லாந்து அடித்த முதல் கோல் இதுவாகும். மேலும், கடந்த 1990ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 36 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து பெறும் முதல் வெற்றி இது என்பதால் மைதானத்தில் திரண்டிருந்த சுமார் 30,000 ஸ்காட்லாந்து ரசிகர்கள் இக்கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

உலகத் தரவரிசையில் 83வது இடத்தில் உள்ள ஹைட்டி அணி 2வது பாதியில் ஸ்காட்லாந்துக்கு கடும் சவாலளித்தது. குறிப்பாக ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹைட்டியின் பிரான்ட்ஸ் டி பியரோட் தலையால் முட்டிய பந்து, ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்குஸ் கன்னையும் தாண்டி நூலிழையில் வெளியேறியது. இதனால் ஸ்காட்லாந்து அணி தப்பியது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அபார வெற்றி பெற்றது.

IND vs AFG: சுப்மன் கில் செயலால் கொந்தளித்த ரோஹித்.. ஆனால் ரீப்ளே பார்த்தபின் நடந்ததே வேறு!

IND vs AFG: சுப்மன் கில் செயலால் கொந்தளித்த ரோஹித்.. ஆனால் ரீப்ளே பார்த்தபின் நடந்ததே வேறு!

முன்னதாக நடந்த குரூப் சி பிரிவின் மற்றொரு போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகள் 1-1 என டிரா செய்தன. இதனால், குரூப் சி பிரிவில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி மொராக்கோவை எதிர்கொள்ள உள்ளது.

Story first published: Sunday, June 14, 2026, 11:05 [IST]
Other articles published on Jun 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+