ஃபிஃபா உலககோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறை.. சாம்பியன் அணிக்கு தரப்படும் விஷேச பரிசு
நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, புகழ்பெற்ற உலகக் கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் மோதிரங்கள் வழங்கப்படும் என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் ஃபிஃபா இந்த கௌரவத்தை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க விளையாட்டு மரபைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மோதிரங்கள், ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெறும் இறுதிப் போட்டிக்குப் பிறகு சாம்பியன்களுக்கு வழங்கப்படும்.

இந்த உலகக் கோப்பை தொடரை நினைவுகூரும் வகையில் ஃபிஃபா நிறுவனம் 2026 மோதிரங்களை பிரத்யேக எண்களுடன் தயாரிக்கவுள்ளது. இதில் 30 மோதிரங்கள் வெற்றி பெறும் அணியின் வீரர்களுக்கு வழங்கப்படும், மீதமுள்ள 1996 மோதிரங்கள் ரசிகர்களுக்காக அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்ற தயாரிப்பாக உலகம் முழுவதும் வெளியிடப்படும்.
ஒவ்வொரு மோதிரத்தின் ஒரு பக்கத்தில் ஃபிஃபா உலகக் கோப்பை சின்னமும், மறுபக்கத்தில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியின் அடையாளமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த மோதிரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி எண்களோடு, கச்சிதமான அளவிலும், அதற்கான நம்பகத்தன்மை சான்றிதழுடனும் வழங்கப்படும்.
இறுதிப் போட்டி முடிந்த உடனேயே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிக்கும் வகையில் வெற்றி பெற்ற அணியின் கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு தற்காலிக மோதிரங்கள் வழங்கப்படும்.
சாம்பியன்களுக்கான 30 மோதிரங்களும் பின்னர் அந்தந்த வீரர்களின் விரல் அளவுகளுக்கு ஏற்ப அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த வரலாற்று சாதனையை நினைவுகூரும் வகையில் அமையும்.
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இந்த வார தொடக்கத்தில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஜென்டினாவின் இந்த இரண்டு கோல்களுக்கும் லியோனல் மெஸ்ஸி அசிஸ்ட் செய்து உதவினார்.
இத்தோல்வி மூலம், 1966-க்குப் பிறகு முதல் முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற இங்கிலாந்தின் கனவு கலைந்தது.மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2010-ல் கோப்பையை வென்றதற்குப் பிறகு ஸ்பெயின் அணி முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஸ்பெயின் அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் ஆறாவது முறையாக ஒரு கோல் கூட அடிக்க விடாமல் clean sheet வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

