Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து உலகக்கோப்பையின் முதல் நாளே ஸ்ட்ரீமிங் சொதப்பல்.. தொழில்நுட்ப கோளாறால் ரசிகர்கள் அதிருப்தி

மும்பை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நள்ளிரவு தொடங்கிய 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நேரலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்திய ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியை இந்தியாவில் நேரலையில் ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்காக பல லட்சம் ரசிகர்கள் 799 ரூபாய் செலுத்தி பிரத்யேக உலகக் கோப்பை சந்தாதாரராக இணைந்துள்ளனர். ஆனால், போட்டி தொடங்கிய முதல் நாளான நேற்று நேரலையின் போது அடிக்கடி சர்வர் முடங்குவது, ஆப் கிராஷ் ஆவது, லாகின் செய்ய முடியாமல் போவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டன. விளம்பரம் செய்யப்பட்டபடி 4கே தரத்தில் வீடியோ கிடைக்காததும் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

FIFA World Cup 2026 Zee5 Streaming Glitch Ruins Opening Match Angry Fans Demand Fixes

போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே, விளம்பரம் செய்யப்பட்டபடி மூன்று திரைகளில் பார்க்க முடியாமல் ஒரு திரையில் மட்டுமே பார்க்க முடியும் என ஜீ5 கட்டுப்பாடு விதித்தது. இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மீண்டும் மூன்று திரைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு குறித்து புகார்கள் குவிந்ததை அடுத்து, ஜீ5 நிறுவனம் சில தீர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது:

ஸ்மார்ட் டிவி பயன்படுத்துபவர்கள்: டிவி அமைப்புகளுக்குச் சென்று ஜீ5 ஆப்பின் கேச் மற்றும் டேட்டாவை அழிக்க வேண்டும். பிரச்சனை தொடர்ந்தால் ஆப்பை முழுமையாக நீக்கிவிட்டு மீண்டும் நிறுவ வேண்டும்.
இணையதளத்தில் பார்ப்பவர்கள்: கூகுள் குரோம் அல்லது சபாரி பிரவுசர்களின் குக்கீஸ்கள் மற்றும் ஹிஸ்டரியை முழுமையாக அழிக்க வேண்டும். விளம்பர தடுப்பான்களை (Ad Blocker) தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய வேண்டும்.
திரை கட்டுப்பாடு நீங்க: கணக்கில் இருந்து ஒருமுறை லாக் அவுட் (Log Out) செய்துவிட்டு மீண்டும் லாக் இன் (Log in) செய்ய வேண்டும்.

IND vs AFG: கோலி இடத்தில் கடவுளின் செல்லப் பிள்ளை ஆடட்டும்.. பிளேயிங் 11இல் ஜெய்ஸ்வால் வேண்டாம்

IND vs AFG: கோலி இடத்தில் கடவுளின் செல்லப் பிள்ளை ஆடட்டும்.. பிளேயிங் 11இல் ஜெய்ஸ்வால் வேண்டாம்

ஜீ நிறுவனம் பிபா அமைப்புடன் 2034ஆம் ஆண்டு வரை 39 முக்கிய கால்பந்து தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்ப 8 ஆண்டுகால ஒளிபரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முதல் நாளே ஏற்பட்ட இந்த சொதப்பல் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, June 12, 2026, 9:30 [IST]
Other articles published on Jun 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+