Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா: 24 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில்

சா பாலோ: ஃபீஃபா உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா நெத்ரலாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகள் நடந்து வந்தது. ஒரு போட்டியில் ஜெர்மனி பிரேசிலை 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதிப் போட்டி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

மெஸ்ஸி

மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரரான லயனல் மெஸ்ஸி ஏதாவது மேஜிக் செய்து கோல் போட மாட்டாரா என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் கோலே அடிக்கவில்லை.

பெர்ஸி

பெர்ஸி

நெதர்லாந்தின் நட்சத்திர ஆட்டக்காரரான ராபின் வான் பெர்ஸி மீதும் ரசிகர்களின் கண்கள் இருந்தன. ஆனால் அவரும் கோல் அடிக்கவில்லை.

பந்தே வரவில்லையே

பந்தே வரவில்லையே

இந்த போட்டியில் டிபெண்டர்கள் திறமையாக விளையாடினார்கள். அவர்கள் மெஸ்ஸி மற்றும் நெதர்லாந்தின் பெர்ஸி, ஆர்யன் ராபென் ஆகியோரிடம் பந்து கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர்.

எக்ஸ்ட்ரா டைம்

எக்ஸ்ட்ரா டைம்

ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் போடாததால் கூடுதலாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் நேரத்திலும் யாரும் கோல் போடவில்லை.

பெனால்ட்டி ஷூட் அவுட்

பெனால்ட்டி ஷூட் அவுட்

எந்த அணியும் கோல் போடாததால் பெனால்ட்டி ஷூட் அவுட் மூலம் வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

4 கோல்கள்

4 கோல்கள்

அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, கரோ, செர்ஜியோ அக்விரோ மாற்றும் மாக்சி ரோட்ரிகஸ் ஆகியோர் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் தலா ஒரு கோல்கள் போட்டனர். ஆனால் நெதர்லாந்து அணியில் ஆர்யன் ராபென் மற்றும் டிரிக் குயிட் ஆகியோர் தான் கோல்கள் அடித்தனர்.

ரொமீரோ

ரொமீரோ

அர்ஜென்டினாவின் கோல் கீப்பரான ரொமீரோ நெதர்லாந்து வீரர்கள் ரான் விலார் மற்றும் வெஸ்லி ஸ்னீடர் ஆகியோரின் கோல்களை தடுத்து தனது நாட்டு மக்கள் முன்பு ஹீரோவாக ஆனார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

நெதர்லாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதுகிறது.

24 ஆண்டுகள்

24 ஆண்டுகள்

அர்ஜென்டினா கடைசியாக 1990ம் ஆண்டு தான் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதையடுத்து 24 ஆண்டுகள் கழித்து தற்போது தான் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 10, 2014, 8:59 [IST]
Other articles published on Jul 10, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+