போஸ்னியாவின் அறிமுக உலகக் கோப்பைத் தொடர் சோகத்துடன் 'ஓவர்'!
குயாபா, பிரேசில்: போஸ்னியா ஹெர்ஸகோவினா அணியின் முதல் உலகக் கோப்பைத் தொடர் ஒரு வழியாக முடிந்து விட்டது. அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவை நைஜீரியா அணி ஒரே ஒரு கோலில் தடுத்து நிறுத்தி விட்டது.
பெரும் ஏமாற்றத்துடன் தனது முதல் தொடரை முடித்துள்ளது போஸ்னியா. நைஜீரியாவுக்கு எதிரானது போட்டியில் நைஜீரிய அணியின் பீட்டர் ஓடெம்விங்கி போட்ட ஒரே ஒரு கோல் காரணமாக போஸ்னியா தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

1998க்குப் பிறகு முதல் வெற்றி
நைஜீரியா கடைசியாக 1998 கோப்பைப் போட்டியில்தான் வேன்றிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து தோல்விகள்தான். இந்த நிலையில் தற்போது 98க்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது.

அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குள் அர்ஜென்டினாவுடன் இணைந்து செல்லும் வாய்ப்பை நைஜீரியா பிரகாசப்படுத்தியுள்ளது.

4 புள்ளிகளுடன்
தற்போது எப் பிரிவில் அர்ஜென்டினா 6 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட்டது. அடுத்த இடத்தில் 4 புள்ளிகளுடன் நைஜீரியா உள்ளது.

அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவுடன்
அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவை நைஜீரியா எதிர்கொள்ளவுள்ளது. இதில் வென்றால் அடுத்த சுற்றுக்கு நைஜீரியா தகுதி பெறும். மேலும் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தையும் பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டிரா ஆனாலும் கூட அதற்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போஸ்னியா 2 போட்டிகளிலும் தோல்வி
போஸ்னியா அணி தான் கலந்து கொண்ட முதல் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி விட்டது.


Click it and Unblock the Notifications