Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டிலில் 'விளையாட' கால்பந்து வீரர்களுக்குத் தடை!... தோற்று வெளியேறிய சோகம்!!

ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பைக் கால்பந்து போட்டி ஜுரம்தான் இன்றைக்கு உலகமெங்கும். ஈராக்கில் குண்டுமழைக்கு நடுவேயும் கால்பந்து போட்டிகளை ரசித்துக்கொண்டிருக்கின்றனர்.

விடிய விடிய நடந்தாலும் பார்ப்போம், ஆபிஸ் டைம்ல தூங்கிக்கலாம்! என்று ஹாயாக ரசிக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கால்பந்து போட்டியிலும் நாட்டிற்காக விளையாடும் வீரர்களுக்கு மிக முக்கியமான தடை ஒன்று போடப்பட்டுள்ளதாம். அதாவது போட்டி நடைபெறும் ஒரு மாதத்திற்கு 'அது' கூடாது என்பதுதானாம்.

கட்டில் விளையாட்டுக்குத் தடை

கட்டில் விளையாட்டுக்குத் தடை

கால்பந்து மைதானத்தில் விளையாடுங்கப்பா... கட்டில் விளையாட்டுக்கு ஒருமாதம் லீவ் விடுங்கப்பா என்று தங்கள் நாட்டு வீரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன சிலி, மெக்ஸிகோ நாடுகள்.

மனைவி - கேர்ள் ப்ரண்ட்

மனைவி - கேர்ள் ப்ரண்ட்

மனைவி, துணைவி, பெண் நண்பி என யாருடனும் இணையக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டனவாம் சிலியும், மெக்ஸிகோவும்.

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்

நீண்ட நேரம் வேண்டாம்... கொஞ்சநேரம் கொஞ்சிக்கங்கப்பா... என்று லேசாய் தடையை தளர்த்தியுள்ளது பிரான்ஸ். அதனால் கொஞ்சம் உற்சாகத்தோடு விளையாடுகின்றனர் பிரான்ஸ் அணி வீரர்கள்.

ஓவர் வித்தை வேண்டாமே

ஓவர் வித்தை வேண்டாமே

உறவுக்குத் தடையில்லை ஆனால் மெத்தையில் ஓவர் வித்தைகள் வேண்டாமே என்றும் ஆர்டர் போட்டுள்ளது பிரேசில். .உங்க வித்தைகளை எல்லாம் கால்பந்து மைதானத்தில் காட்டுங்கப்பா என்றும் உத்தரவிட்டுள்ளதாம்.அதுதான் உற்சாகமாக விளையாடுகிறார்களோ?

நோ டச்சிங் டச்சிங்

நோ டச்சிங் டச்சிங்

இரண்டாம் சுற்றுவரை டச் பண்ணக்கூடாது என்று தங்கள் நாட்டு வீரர்களை எச்சரித்து அனுப்பியதாம் கோஸ்டரிகா.

மனைவி ஓகே கேர்ள்பிரண்ட் நோ

மனைவி ஓகே கேர்ள்பிரண்ட் நோ

அதேசமயம் நைஜீரியாவோ மனைவியுடன் மட்டும் ஓகே கேர்ள் பிரண்ட் வேண்டாமே என்று லேசாய் தடையை தளர்த்தியுள்ளது.

ஒண்ணா தங்கலாம்…

ஒண்ணா தங்கலாம்…

ஜெர்மனி, ஹாலந்து அணி வீரர்கள் தங்கள் துணையுடன் ஒரே ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கால்இறுதிவரை கொஞ்சம் ஜாக்கிரதை என்று எச்சரிக்கப்பட்டுள்ளனராம்.

கடுப்பில் கடித்தாரோ

கடுப்பில் கடித்தாரோ

கோப்பை ஜெயிக்க எதை எல்லாம் தியாகம் செய்ய வேண்டியிருக்குப்பா... என்ற கடுப்பில்தான் இத்தாலி வீரர் செலினியை உருகுவே அணியில் நட்சத்திர வீரர் ஸ்வாரஸ் கடித்து வைத்திருப்பாரோ?

பெட்டியை கட்டிய அணிகள்

பெட்டியை கட்டிய அணிகள்

இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவெனில், கட்டில் விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட போஸ்னியா, ரஸ்யா, மெக்ஸிகோ,சிலி, ஆகிய நாட்டு அணி வீரர்கள் எல்லாம் தங்களின் பெட்டி படுக்கைகளை பிரேசிலில் இருந்து பேக் செய்துவிட்டனர்.

உற்சாக விளையாட்டு

உற்சாக விளையாட்டு

கட்டில் விளையாட்டு அனுமதிக்கப்பட்ட அணிவீரர்கள்தான் கால்இறுதிக்கு முன்னேறி உற்சாகமாக விளையாடிவருகின்றனவாம். அப்போது கால்பந்து போட்டியின் கோப்பையை ஜெயிக்க வீரர்களுக்கு கட்டில் விளையாட்டு உற்சாகம் தருகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Story first published: Friday, July 4, 2014, 12:12 [IST]
Other articles published on Jul 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+