உலகக் கோப்பை பரிசு..... ஃபேர் பிளே விருது விருது.... ஸ்பெயினுக்கு கிடைத்தது!
மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. இந்த உலகக் கோப்பையில் மிகவும் சிறப்பாகவும், அதிக ஃபவுல் அடிக்காமலும் விளையாடிய அணிக்கு ஃபேர் பிளே விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நாக் அவுட் சுற்றில் விலையாடிய ஸ்பெயின் வென்றுள்ளது.
ஃபிபா உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதைத் தவிர, சிறந்த முறையில் செயல்படும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மிகவும் சிறப்பாகவும், ஒழுக்கமாகவும், அதாவது அதிக ஃபவுல் அடிக்காமல் விளையாடும் அணிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஃபிபாவின் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் இந்த விருதுக்குரிய அணியை தேர்வு செய்வர்.
பிரேசிலில் 2014ல் நடந்த உலகக் கோப்பையில் கொலம்பியா அணி இந்த விருதை வென்றது.
Story first published: Sunday, July 15, 2018, 23:33 [IST]
Other articles published on Jul 15, 2018


Click it and Unblock the Notifications