Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 நிமிடத்தில் 2 கோல்கள்.. இவர் மனிதனா?? ஏலியனா?? அடுத்த GOAT ஆக எம்பாப்பே போற்றப்படுவது ஏன்??

கத்தார்: ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் வீரர் எம்பாப்பே அடித்த கோல்களை கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி 3வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

கடைசி வரை இரு அணிகளும் விடாப்பிடியாக போராடியதால் நடத்தப்பட்ட பெனால்டி ஹூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை அர்ஜெண்டினா ருசித்தது.

அர்ஜெண்டினாவின் வெற்றி

அர்ஜெண்டினாவின் வெற்றி

அர்ஜெண்டினாவின் இந்த வெற்றியால் அதன் கேப்டன் லியோனல் மெஸ்ஸியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 35 வயதாகும் மெஸ்ஸி, தனது கடைசி உலகக்கோப்பையில் கனவை நிறைவேற்றிக்கொண்டுள்ளார் என புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மெஸ்ஸியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு எம்பாப்வேவின் பெயரும் இணையத்தில் பெரும் பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் இறுதிப்போட்டியில் அவர் செய்த விஷயம் தான்.

எம்பாப்பேவின் ஸ்ட்ரைக்

எம்பாப்பேவின் ஸ்ட்ரைக்

ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் அர்ஜெண்டினா அணி 3 - 0 என ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதனால் சுலபமாக கோப்பையை வென்றுவிடுவார்கள் என நினைத்த போது, அதை முற்றிலும் மாற்றி அமைத்தவர் எம்பாப்பே மட்டும் தான். பிரான்ஸ் அணிக்காக அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து பெனால்டி ஷூட் அவுட் என்ற பரபரப்பு கட்டத்திற்கு எடுத்து சென்றார்.

அபார திறமைகள்

அபார திறமைகள்

போட்டியின் 81வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர், எதிரணி கீப்பர் தனது ஷாட்டை கணித்துவிட்டார் எனத்தெரிந்தும் மின்னல் வேகத்தில் அதே இடத்தில் பந்தை அடித்து கோல் அடித்தார். இதனைக்கூட ஏதோ பெனால்டி அதிர்ஷ்டம் என்று கூறி விடலாம். ஆனால் அடுத்த 2 கோல்கள் ஜாம்பவன்களுக்கே உரியதாகும்.

மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

மெஸ்ஸியிடம் இருந்த பந்து கோல் போஸ்டின் வலது கார்னருக்கு வந்த போது, அதனை சாதூர்யமாக கணித்த கோல் கீப்பர் தடுத்துவிட நின்றார். பந்தும் அர்ஜெண்டினா வீரரிடம் தான் இருந்தது. அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென கீழே சரிந்த எம்பாப்பே, கீப்பரின் கால்களுக்கு அருகில் செல்லும் படி கீழாக பந்தை உதைத்தார். அவர் உதைத்த வேகம் தான் அவரின் திறமைக்கு பெரும் எடுத்துக்காட்டு. எப்படி ஒரு வீரரால் கீழே விழும் நேரத்தில் இவ்வளவு வேகமாக அடிக்க முடியும் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். முதல் கோலிற்கும் 2வது கோலிற்கும் இருந்த கால அவகாசம் வெறும் 90 விநாடிகள் மட்டும் தான்.

சாம்பவான் கோல்

சாம்பவான் கோல்

ஆட்டத்தின் 117வது நிமிடத்தில் தான் மற்றொரு பெனால்டி எம்பாப்பேக்கு கிடைத்தது. அதாவது, இடதுபுறத்தின் கார்னரில் இருந்து அடித்த அந்த கோல் தான் அவரின் வாழ்வில் நீண்ட தூரத்தில் இருந்து அடிக்கப்பட்டதாக இடம்பெற்றுள்ளது. இந்த அசுரத்தனமான கோல்கள் தான், ஆட்டத்தை முற்றிலுமா புரட்டிப்போட்டுள்ளது.

ஹாட்ரிக் கோல்கள்

ஹாட்ரிக் கோல்கள்

வெறும் 23 வயதே ஆகும் எம்பாபே இதுவரை உலகக்கோப்பை தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடி 12 கோல்களை அடித்துள்ளார். மேலும் 1966ம் ஆண்டுக்கு பின் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் கோல் இதுவாகும். குறிப்பாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் 19 வயது சிறுவனாக இடம்பிடித்த இவர், 23வது வயதில் பிரான்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றுள்ளார்.

Story first published: Monday, December 19, 2022, 11:40 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+