ஃபிபா இறுதிப்போட்டி: போர் முதல் போராட்டம் வரை.. மறக்க முடியாத குரேஷியாவின் பயணம்
மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் குரேஷியா தோல்வி அடைந்து இருந்தாலும் அந்த நாடு கடந்து வந்த பாதை பெரியது
அதிக அளவில் பாராட்டப்பட வேண்டியது. உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இரண்டாவது முறையாக பிரான்ஸ் வெற்றி பெறுகிறது.
தற்போது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி முடிந்து உள்ளது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இறுதியாக பிரான்ஸ் வெற்றிபெற்றுள்ளது.பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது.

உதாசீனம் படுத்தினார்கள்
இந்த உலகக் கோப்பை தொடரில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது யார் என்றால் அது குரேஷியாதான். இந்த நாடு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதியானதையே யாரும் பெரிதாக நினைக்கவில்லை. அதேபோல் இந்த அணி எல்லாம் கடைசிவரை விளையாடுமா என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தார்கள்.

அதிர்ச்சி அளித்தனர்
ஆனால் அவர்கள் நினைத்தது போல அல்லாமல், குரேஷியா எல்லா அதிர்ச்சி அளித்தது.பிரேசில் , இத்தாலி என்று சிறிய அணி தொடங்கி பெரிய அணி வரை எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது. பெரிய அணிகள் செமி பைனலுக்கு வரவே கஷ்டப்பட்டபோது, குரேஷியா அசால்ட்டாக இறுதி போட்டிக்கு வந்தது.

என்ன மாதிரியான தேசம்
போர், போராட்டம், வரலாறு இந்த மூன்று வார்த்தையில் இந்த நாட்டை அடக்கிவிடலாம். இப்போது நான்காவதாக கால்பந்து அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறது. தொடர் போரை சந்தித்து அந்த நாடுட வறுமையில் இருந்து மீண்டும் இப்போது வளர்ச்சி பாதைக்கு சென்றுள்ளது. அமெரிக்கா அந்த நாட்டை அதிக வருமானம் வரும் நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது.

வெல்டன் பாய்ஸ்
தற்போதுபல பல அரசியல் பிரச்சனைகளை சந்தித்து இருக்கும் அந்த நாடு, இந்தியா போன்ற முன்னேறிக்கொண்டு இருக்கும் நாடுகளுக்கு பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இரண்டு நாடுகளின் வரலாறும், புவியியல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரேமாதிரினதுதான். இந்தியா இந்த நாட்டிடம் இருந்து நிறைய காற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications