Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை இறுதி போட்டி.. டிவிட்டரில் புதிய சாதனை

ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியின்போது ஒரு நிமிடத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான ட்விட்டுகள் வெளியாகி புதிய சாதனையை படைத்துள்ளது. ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அல்லது உலக கோப்பை இறுதி போட்டி என்ற ஹேஸ்டேக்குடன் வெளியாகிய ட்விட்டர்கள் மட்டும் இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது முக்கியமானது.

டிவிட் செய்த ரசிகர்கள்

டிவிட் செய்த ரசிகர்கள்

உலக கோப்பை இறுதி போட்டியில் நேற்று இரவு ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதின. ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியன் ஆனது. இந்த போட்டி நடந்துகொண்டிருந்தபோது உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கீச்சுக்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

ஹேஸ்டேக் டிவிட்டுகள்

ஹேஸ்டேக் டிவிட்டுகள்

இந்த கீச்சுக்களின் உள்ளே, #GERvsARG அல்லது #WorldCupFinal என்ற ஹேஸ்டேக் சேர்த்து அவர்கள் டிவிட் செய்தனர். ஷகிரா ஆட்டம்போட்டபோது அவரது பெயரிலும் ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு அது டிரெண்டாகவும் இருந்தது. அதுபோல மெஸ்சி பெயரிலும் ஹேஸ்டேக் செய்து ரசிகர்கள் டிவிட் செய்தனர்.

ஒரே நிமிடத்தில் ஆறு லட்சம்

ஒரே நிமிடத்தில் ஆறு லட்சம்

இதில் ஜெர்மனி, அர்ஜென்டினா, உலக கோப்பை பைனல் என்ற ஹேஸ்டேக் கொண்ட கீச்சுக்களின் எண்ணிக்கை மட்டும் போட்டியின் ஒரு பகுதியின்போது, நிமிடத்துக்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 725 வெளியாகியது. ஜெர்மனி தனது கோலை பதிவு செய்தபோதுதான் இத்தனை கீச்சுக்கள் மொத்தமாக வெளியாகியுள்ளன.

புதிய சாதனை

புதிய சாதனை

இது புதிய சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நிமிடத்தில் இத்தனை டிவிட்டுகள் ஒரு விளையாட்டு போட்டியில் வெளியாகியது இதுதான் முதன்முறை என்று அறிவித்துள்ளது டிவிட்டர்.

ஒட்டு மொத்த எண்ணிக்கையில் 2வது இடம்

ஒட்டு மொத்த எண்ணிக்கையில் 2வது இடம்

அதே நேரம் ஆட்டத்தின், ஒட்டு மொத்த டிவிட் எண்ணிக்கையில், பிரேசிலும், ஜெர்மனியும் மோதிய அரையிறுதி போட்டி தனது சாதனையை தக்க வைத்துள்ளது.

பிரேசிலுக்கு ரசிகர் பலம்

பிரேசிலுக்கு ரசிகர் பலம்

அந்த போட்டியின்போது மொத்தம் 35.6 மில்லியன் ட்விட்டுகள் செய்யப்பட்டன. ஆனால் இறுதி போட்டியின்போது மொத்த ட்விட் எண்ணிக்கை 32.1 மில்லியன்களாகும். எனவே, மோசமாக தோற்றாலும் பிரேசில் அணிக்கு உலகமெங்கும் உள்ள ரசிகர் பலத்தை இது காண்பிப்பதாக உள்ளது.

இந்தியாவில் இப்படி..

இந்தியாவில் இப்படி..

இந்தியாவில் உலக கோப்பை போட்டி நேரத்தின்போது 1 லட்சத்து 91 ஆயிரத்து 494 ட்விட்டுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை நிலை

சென்னை நிலை

சென்னையில் இருந்து செய்யப்பட்ட ட்விட்டுகளில் 1149 பேர் மெஸ்சியை தங்களது கீச்சுக்களில் ஹேஸ்டேக் செய்துள்ளனர். 109 பேர் ஷகிராவை ஹேஸ்டேக் செய்துள்ளனர். பெங்களூரில் 2279 பேர் மெஸ்சியையும், 368 பேர் ஷகிராவையும் ஹேஸ்டேக் செய்து ட்விட் செய்துள்ளனர்.

Story first published: Monday, July 14, 2014, 15:23 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+