ஃபிபா இறுதிப்போட்டி: ஈபிள் டவர் முன் 2 லட்சம் பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்.. வாவ் வீடியோ
மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை பிரான்ஸ் மக்கள் வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். ஈபிள் டவர் முன்பாக பல ரசிகர்கள் கூடி உள்ளனர்.
தற்போது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டி நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அதிரடியாக ஆடியது. குரேஷியாவின் சிறு சிறு தவறுகளை கூட எளிதாக பயன்படுத்திக் கொண்டது. கடந்த ஒரு மாதமாக இதற்கான கொண்டாட்டம், போட்டிகள் நடந்தது.
இந்த போட்டியை காண பிரான்சில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முக்கியமாக ஈபிள் டவர் முன்பாக பல ரசிகர்கள் கூடினார்கள். இவர்களின் போட்டியை காண பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த போட்டியை காண ஈபிள் டவர் முன்பு மொத்தம் 2 லட்சம் ரசிகர்களுக்கும் அதிகமானோர் கூடி இருக்கிறார்கள். இவர்களின் கரகோஷ வீடியோ பெரிய வைரல் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications