Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா இறுதிப்போட்டி: குரேஷியா செய்யாத தவறுக்காக பிரான்ஸிற்கு கிடைத்த வாய்ப்பு.. வெடிக்கும் சர்ச்சை

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், பிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கிக்கிற்கு எதிராக கருத்துக்கள் வர தொடங்கி இருக்கிறது. குரேஷியா வீரர் செய்யாத தவறுக்காக பிரான்ஸ் அணிக்கு தவறான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது. இனி அடுத்த கால்பந்து உலகக் கோப்பை நடக்கும் வரை கூட இந்த இறுதி போட்டியை கால்பந்து ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.

குரேஷியா செய்த சில சிறிய தவறுகளை கூட பிரான்ஸ் கோலாக மாற்றி சாதித்து காட்டியுள்ளது. ஆனால் உண்மையாகவே குரேஷியா தவறு எதுவும் செய்ததா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.

கோல் அடித்தார்

கோல் அடித்தார்

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குரேஷியா சேம் சைட் கோல் போட்டதால், பிரான்ஸ் முன்னனிலை பெற்றது. அதற்கு அடுத்த தவறை மீண்டும் குரேஷியா செய்தது. அதன்படி சரியாக 38வது நிமிடத்தில் குரேஷியாவின் இவான் பெரிசிக் கையில் பால் பட்டு நழுவிச்சென்றது. இதனால் இதனால் பிரான்சிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விஏஆர் முடிவு

விஏஆர் முடிவு

இந்த உலகக் கோப்பை போட்டியில்தான் முதல்முறையாக, பிரான்ஸ் விஏஆர் - வீடியோ அசிஸ்டண்ட் ரேஃபரி எனப்படும் பார்த்து ஒருவர் தீர்ப்பு அழிப்பது கடைபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் வீரர்கள், கால்பந்து வல்லுநர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். நேற்றைய இறுதி போட்டியில் கால்பந்து குறித்து அதிக எழுதும், பேசும் முன்னாள் நடிகர் பிடானா விஏஆர் நடுவராக செயல்பட்டார்.

கோல்

கோல்

இவர்தான், பெரிசிக் கையில் பால் பட்டு நழுவிச்சென்ற வீடியோவை மீண்டும் மீண்டும் சோதனை செய்தார். பல கட்ட சோதனைக்கு பின்பே, பிரான்சிற்கு கோலடிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது தவறான முடிவு என்று சர்ச்சை எழுந்துள்ளது. வேண்டுமென்றே அவர் பந்தை பிடிக்கவில்லை, அவரால் செயலாற்ற முடியாத நிலையில் பந்து அவர் கையில்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

நடந்திருக்க வாய்ப்பில்லை

நடந்திருக்க வாய்ப்பில்லை

இந்த சம்பவம் குரேஷியா கால்பந்து ரசிகர்கள் தொடங்கி, அந்நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் வரை எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒரு பெரிய கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இப்படி செய்வது பெரிய தவறு என்று கால்பந்து வல்லுநர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Story first published: Monday, July 16, 2018, 10:11 [IST]
Other articles published on Jul 16, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+