Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா இறுதிப்போட்டி: பிரான்ஸ் மாஸ் வெற்றி.. அதிர்ந்தது புதுச்சேரி...கோலாகல கொண்டாட்டம்

மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரான்ஸின் வெற்றியை புதுச்சேரி மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி முடிந்து உள்ளது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இறுதியாக பிரான்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த ஒரு மாதமாக புதுச்சேரி இந்த போட்டிக்காக தயாராகிக் கொண்டு இருந்தது. இப்போது அங்கு கொண்டாட்டம் நடந்து வருகிறது.

பிரெஞ்சு

பிரெஞ்சு

புதுச்சேரியில் பிரெஞ்சு மக்கள் மிகவும் அதிக அளவில் இருக்கிறார்கள். பிறந்து வளர்ந்ததிலிருந்தே புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு மக்களும் இருக்கிறார்கள். இவர்களால் அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்கும் பிரான்ஸ் மீதான பாசமும், பிரான்ஸ் அணியின் மீதான பாசமும் அதிகம்.

பெரிய கொண்டாட்டம்

பெரிய கொண்டாட்டம்

இந்த நிலையில் கால்பந்து தொடர் தொடங்கிய போதே, புதுச்சேரியில் கொண்டாட்டமும் அதிகமாகிவிட்டது. முக்கியமாக பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு சென்றதை மக்கள் ஆரவாரமாக கொண்டாடினார்கள். இதற்காக பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டும் இருந்தது.

சிறப்பு கொண்டாட்டம்

சிறப்பு கொண்டாட்டம்

இந்த நிலையில் இன்றும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண புதுச்சேரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் புதுச்சேரி கடற்கரை பகுதியில் போட்டி நேரடியாக பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக மக்கள் கூடினர்.

ஜாலிதான்

ஜாலிதான்

அதேபோல் இந்த போட்டியில் பிரான்ஸ் வென்றால் எப்படி கொண்டாடலாம் என்றும் திட்டமிட்டு அலங்கரித்து வைத்து இருந்தனர். அதேபோல் வெற்றியை மக்கள் இப்போது ஆரவாரமாக கொண்டாடிவருகிறார்கள்.போட்டியை காண ஏராளமான மக்கள் ஆவலாக இருந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரிலும் போட்டியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது அங்கு கொண்டாட்டம் நடந்து வருகிறது.

முதல்வர் நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி

இந்த நிலையில் பிரான்ஸ் குரோஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரிடியாக கண்டுகளித்தார். இதற்காக கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் மக்களுடன் மக்களாக சேர்ந்து கண்டு ரசித்தார். அவரும் மக்களுடன் சேர்ந்து பிரான்ஸ் வெற்றியை கண்டு ரசித்தார்.

புகைப்படம் உதவி: ராஜேஷ்வரி

Story first published: Sunday, July 15, 2018, 23:15 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+