இறுதி போட்டியை காண முடியாத தாய்லாந்து சிறுவர்கள்.. வேறு வசதி செய்து கொடுத்த ஃபிபா!
பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கி தற்போது மீண்டு இருக்கும் சிறுவர்கள் ஃபிபாவின் அழைப்பின் படி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க முடியாது. ஆனால் அவர்களுக்கு நாளை போட்டியை டிவியில் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து சிறுவர்கள் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள், இதுதான் உலகில் பலருக்கும் கேள்வியாக இருக்கும். அவர்கள் இப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாலும், குட்டி கால்பந்து வீரர்களை இன்னும் ஃபிபா அமைப்பு மறக்கவில்லை.
சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற குகைக்குள் சுற்றுலா சென்ற தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.
16 நாட்கள் அவர்கள் உள்ளேயே இருந்தனர். 10 நாட்கள் கழித்துதான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருகிறார்கள்
தற்போது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.இதில் சில சிறுவர்களுக்கு தற்போது நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது.அதேபோல் சிலருக்கு வெள்ளை அணுக்கள் அதிக அளவில் குறைந்து இருக்கிறது.இவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து நடந்து வருகிறது.

விழாவிற்கு அழைத்தனர்
இந்த நிலையில், இந்த சிறுவர்களை ஃபிபா அமைப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண அழைத்து இருந்தது. அதன்படி இவர்கள் மீண்டு வந்ததும், கண்டிப்பாக, இறுதி போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்கள் மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள். இந்த மருத்துவ பிரச்சனை காரணமாக அந்த சிறுவர்கள் உலகக் கோப்பை இறுதி போட்டியை காணும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்

முடியாது
இந்த நிலையில் இவர்கள் போட்டியை இன்று டிவியில் கூட பார்க்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு அதிக நேரம் இரவில் விழித்து இருக்க கூடாது. ஆனால் இறுதி போட்டி தாய்லாந்து நேரப்படி நடுஇரவு வரை நடக்கும். அவர்கள் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த போட்டியை காண மாட்டார்கள். மாறாக நாளை காலை ரெக்கார்ட் செய்து இவர்களுக்காக சிறப்பு ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். இதை ஃபிபாவே செய்து கொடுத்துள்ளது.

பரிசு விழா
இந்த நிலையில் சிறந்த கால்பந்து வீரருக்கான பரிசு வரும் செப்டம்பர் 23ம் தேதி லண்டனில் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஃபிபா மூலம் இந்த சிறுவர்கள் அழைத்து வரப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு இதற்கான பயண செலவு தங்கும் செலவு எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications