For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக் கோப்பை: கெத்து ஆட்டம் போட்ட பிரான்ஸ் அதிபர்.. குரேஷியா அதிபரின் க்யூட் ரியாக்சன்!

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வென்ற பின் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

By Shyamsundar

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வென்ற பின் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. பிரான்ஸ் வீரர்களுடன் அவர் போட்டியின் வெற்றியை சந்தோசமாக கொண்டாடியுள்ளார்.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது. குரேஷியா செய்த சில சிறிய தவறுகளை கூட பிரான்ஸ் கோலாக மாற்றி சாதித்து காட்டியுள்ளது.

இந்த போட்டியை பிரான்ஸ், ரஷ்யா, குரேஷியா நாட்டு அதிபர்கள் ஒன்றாக சேர்ந்து பார்த்து இருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

முன்னாள் வீரர்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், 42 வயது கூட முடியாத இந்த இளம் அதிபர் ஒரு முன்னாள் கால்பந்து வீரர். கல்லூரி காலத்தில் தன்னுடைய கல்லூரி அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன்பே பிரான்ஸ் வீரர்களை சந்தித்து கண்டிப்பாக திரும்பி வரும்போதே கோப்பையுடன்தான் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சென்றனர்

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியை காண, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், ரஷ்ய அதிபர் புடின், குரேஷியா அதிபர் கொலிண்டா கிராபர்-கிட்ரோவிக் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து போட்டியை கண்டுகளித்து இருக்கிறார்கள். இதில் குரேஷியா, பிரான்ஸ் என்று இரண்டு நாட்டு அதிபர்களும் தீவிர கால்பந்தாட்ட ரசிகர்கள். இதனால் களத்தின் சூடு இங்கேயும் இருந்தது.

பெரிய அளவில் கொண்டாட்டம்

இந்த நிலையில் பிரான்ஸ் 4-2 என்று வெற்றி பெற்றதை அடுத்து, பிரான்ஸ் அதிபர் கத்தி கொண்டாடினார். சென்று கொண்டாடினார். கொட்டும் மழையில் குடை கூட பிடிக்காமல் சந்தோசமாக, தன்னாட்டு வீரர்களுடன் போட்டியின் வெற்றியை கொண்டாடினார். டிவிட்டரில் மெர்சி என்று பிரெஞ்சில் நன்றி தெரிவித்தார். இருவரும் கோப்பை முத்தமிட்டனர்.

வீடியோ வெளியிட்டார்

அதேபோல் இவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது. பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ் அணி வீரர்களுடன் 'டேப்' செய்துள்ளார். டேப் என்பது கால்பந்து தொடங்கி விளையாட்டு விளையாட்டு உலகில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு கொண்டாட்டம் ஆகும். அதை பிரான்ஸ் அதிபரும் முதல் முறையாக செய்துள்ளார்.

Story first published: Monday, July 16, 2018, 10:43 [IST]
Other articles published on Jul 16, 2018
English summary
FIFA WORLD CUP FINAL: Viral post celebrations of France and Croatia presidents.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+