Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா இறுதிப்போட்டி: போட்டியின் போதே மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர்கள்.. அதிர்ச்சி வீடியோ

மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போட்டி நடக்கும் போதே சிலர் மைதானத்திற்குள் ஓடி வந்துள்ளனர்.

தற்போது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டி நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

FIFA WORLD CUP FINAL: Viral video of match invaders

கடந்த ஒரு மாதமாக இதற்கான கொண்டாட்டம், போட்டிகள் நடந்தது. முதல் முறை ஆடும் குரேஷியா, எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்து இறுதி போட்டிக்கு சென்று இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இறுதிப்போட்டியில் போது அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி போட்டியின்போதே, களத்திற்குள் சிலர் நுழைந்து இருக்கிறார்கள்.

சரியாக 52வது நிமிடத்தின் போது, பூமிக்கு நுழைய செவ்வாய் கிரக வாசிகள் போல நுழைந்து இருக்கிறார்கள். இதனால் போட்டி சில நிமிடம் நிறுத்தப்பட்டது.

பின் பாதுகாவலர்கள் உள்ளே நுழைந்து, அவர்களை வெளியேற்றினார்கள். இவர்கள் தீவிர கால்பந்து ரசிகர்கள் என்பது சொல்லி தெரியவேண்டிய அவசியமும் இல்லை.

Story first published: Sunday, July 15, 2018, 22:05 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+