Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து கேப்டன் ரியோ பெர்டினாண்ட் காயம் - 'கோச்' புலம்பல்

Rio Ferdinand
ரஸ்டன்பர்க்: இங்கிலாந்து கேப்டன் ரியோ பெர்டினாண்ட் காயமடைந்துள்ளார். இதனால் அணியின் பயிற்சியாளர் பேபியோ கேபெல்லா அதிருப்தி அடைந்துள்ளார். இங்கிலாந்து கேப்டன்கள் எல்லோரும் சபிக்கப்பட்டவர்கள் என்று விரக்தியுடன் கூறியுள்ளார் கேபெல்லா.

பயிற்சி ஆட்டத்தின்போது ரியோவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு விட்டது. இதனால் அவரால் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பயிற்சியாளர் கேபெல்லா கூறுகையில், எனது கேப்டன்கள் அத்தனை பேருமே காயத்தால் சபிக்கப்பட்டவர்கள் போல.

இங்கிலாந்து கேப்டனாக இருப்பதே ஒரு சாபம் போலாகி விட்டது. முன்பு ஜான் டெர்ரி காயம் காரணமாக விலக நேர்ந்தது. இப்போது ரியோவுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

ரியோவுக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் ஒட்டுமொத்த அணியும் ஏமாற்றமடைந்துள்ளது. இது எதிர்பாராத காயம். முழங்காலில் அவருக்கு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. இது சாதாரண வலி இல்லை.

இங்கு வந்துள்ள ஒவ்வொரு வீரரும் எனக்கு முக்கியமானவர்கள். ரியோ இவர்களுக்குத் தலைவர், கேப்டன். இதனால் மற்ற வீரர்கள் கவலை அடைந்துள்ளனர், அப்செட் ஆகியுள்ளனர். பயிற்சியில் கூட அவர்களுக்கு நாடடமில்லாமல் போய் விட்டது.

இருப்பினும் இதை நாம் சமாளித்தாக வேண்டும். வேறு வழி இல்லை என்றார் கேபெல்லா.

ரியோவுக்குக் காயமேற்பட்டு நாடு திரும்பவுள்ளதால், அவருக்குப் பதில் புதிய கேப்டனாக ஸ்டீவன் ஜெரார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். ரியோவுக்குப் பதில் அணியில் மைக்கேல் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+