Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுவராஸுக்கு விதிக்கப்பட்ட தடை 'ஓவர்': சொல்கிறார் கடி வாங்கிய செலினினி

சா பாலோ: தன்னை கடித்த உருகுவே வீரரான லூயிஸ் சுவராஸுக்கு 4 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது அதிகம் என்று கடி வாங்கிய இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினினி தெரிவித்துள்ளார்.

ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. அப்போது இத்தாலி வீரரான ஜியார்ஜியோ செலினினியின் தோள்பட்டையில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் நறுக்கென கடித்தார். இதில் காயம் அடைந்த செலினினி வலியால் துடித்தார்.

இந்த விவகாரத்தை ஃபீஃபா கையில் எடுத்துக் கொண்டது.

தடை

தடை

கடி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஃபீஃபா சுவாரஸ் கால்பலந்து தொடர்பான எந்தஒரு நடவடிக்கையிலும் கலந்துகொள்ள 4 மாத தடையும், 9 சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோபம்

கோபம்

அரங்கில் நடந்த விஷயத்திற்காக சுவாரஸ் மீது கோபமோ, அவரை பழிவாங்கும் எண்ணமோ இல்லை. ஆட்டத்தை பற்றிய கோபம் மற்றும் வருத்தம் தான் உள்ளது என்று செலினினி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்

சுவாரஸ்

நான் தற்போது லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தாரை பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சிக்கலான நேரத்தை சந்திக்க வேண்டி உள்ளது என்றார் செலினினி.

அதிகம்

அதிகம்

சுவாரஸுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அதிகம் என்று நினைக்கிறேன். போட்டிகளின்போது அவரது அணியினரை அணுகவாவது சுவாரஸுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என செலினினி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 27, 2014, 18:33 [IST]
Other articles published on Jun 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+