Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை பரிசு..... தங்க பந்து விருது.... குரேஷியாவின் லுகா மோட்ரிக் வென்றார்!

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை குரேஷியாவின் லுகா மோட்ரிக் பெற்றார்.

ஃபிபா உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதைத் தவிர, சிறந்த முறையில் செயல்படும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

fifa world cup golden ball prize

அதன்படி சிறந்த வீரருக்கு தங்க பந்து பரிசு வழங்கப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய, குரேஷிய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டன் லுகா மோட்ரிக் தங்க பந்து விருதை வென்றார்.

2வது மற்றும் 3வது இடத்தைப் பிடிப்போவருக்கு வெள்ளிப் பந்து மற்றும் வெண்கலப் பந்து வழங்கப்படுகிறது. பெல்ஜியத்தின் எடன் ஹசார்ட் வெள்ளி மற்றும் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியின் ஆன்டோனி கிரீஸ்மான் வெண்கலப் பந்தையும் வென்றனர்.

ஃபிபாவின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள் இணைந்து இந்த விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும். 1982 முதல் இந்த தங்கப் பந்து விருது வழங்கப்படுகிறது.

இதுவரை தங்க பந்து விருது வென்றோர்:

2014 : லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா)
2010 - டியாஜோ போர்லான் (உருகுவே)
2006 : ஜினதின் ஜிதானே (பிரான்ஸ்)
2002 : ஆலிவர் கான் (ஜெர்மனி)
1998 : ரொனால்டோ (பிரேசில்)
1994: ரொமாரியோ (பிரேசில்)
1990 : சல்வாடோர் சிலாக்கி (இத்தாலி)
1986 : டியாஜோ மாரடோனா (அர்ஜென்டினா)
1982 : பாவ்லோ ரோசி (இத்தாலி)

Story first published: Sunday, July 15, 2018, 23:37 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+