Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபீஃபா உலகக் கோப்பை: 'ஓலே ஓலா' தீம் சாங் பாடி அரங்கை அதிர வைத்த லோபஸ், பிட்புல்

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் துவக்க நிகழ்ச்சியில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், அமெரிக்க ராப்பரான பிட்புல்லுடன் சேர்ந்து பாடல் பாடி நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் வியாழக்கிழமை துவங்கின. இந்த போட்டிகளின் துவக்க நிகழ்ச்சி சா பாலோ நகரில் உள்ள இடாகுராவ் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

துவக்க விழாவை களைகட்ட வைத்தவர்கள் பற்றி பார்ப்போம்.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், அமெரிக்க ராப்பரான பிட்புல் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த பாடகி கிளாடியா லீயட் ஆகியோர் கால்பந்தாட்ட போட்டியின் தீம் பாடலான வீ ஆர் ஒன்(ஓலே ஓலா) பாடலை பாடினர்.

ஆட்டம்

ஆட்டம்

லோபஸ், பிட்புல் மற்றும் கிளாடியா ஆகியோர் பாடுகையில் மேடையில் குதித்துக் கொண்டும், கூட்டத்தை பார்த்து கையசைத்துக் கொண்டும் இருந்தனர். இதை பார்த்த ரசிகர்கள் கூட்டமும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.

லோ கட் ஆடை

லோ கட் ஆடை

தீம் பாடல் பாடும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் முன்னழகில் பாதிக்கும் மேல் காட்டி கவர்ச்சியான உடை அணிந்த ஜெனிபர் லோபஸ் சோலோ பாடலை பாடி ஆடும் போது அரங்கமே அதிர்ந்தது.

கண்ணீர்

கண்ணீர்

பாடலை பாடி முடித்த பிறகு ஜெனிபர் லோபஸ் ரசிகர்களின் அன்பை பார்த்து உருகி கண்கள் கலங்க நெஞ்சில் கையை வைத்து நன்றி தெரிவித்தார்.

ஷகீரா

ஷகீரா

2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி துவக்க நிகழ்ச்சியில் அமெரிக்க பாடகியான ஷகீரா வாக்கா வாக்கா என்ற பாடலை பாடி ஆடினார்.

வாக்கா வாக்கா

வாக்கா வாக்கா

அதிகம் விற்பனையான கால்பந்தாட்ட போட்டி துவக்க பாடல் என்றால் அது வாக்கா வாக்கா தான். மேலும் அந்த பாடல் வீடியோவை யூடியூப்பில் 665 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 8வது வீடியோ ஷகீராவின் வாக்கா வாக்கா வீடியோ.

வீடியோ

உலகக் கோப்பை கால்பந்து துவக்க விழா

Story first published: Friday, June 13, 2014, 12:12 [IST]
Other articles published on Jun 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+