Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரேசிலில் கோல் போட்டால், பெங்களூர் ஹோட்டலில் அடுப்பு அதிக நேரம் எரியுதாம்...

பெங்களூர்: பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளால் இந்திய ஹோட்டல்களில் இரவு நேர வியாபாரம் பிய்த்துக்கொண்டுபோகிறதாம். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் கடந்த 12ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதை இந்தியாவில் பல ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டு கழித்து வருகிறார்கள். இரு நாடுகளுக்கும் நடுவே கால நேர வேற்றுமை அதிகமாக உள்ளதால், அங்கு பகலில் நடைபெறும் போட்டிகளை இங்கு இரவில்தான் பார்க்க முடியும்.

விடிய, விடியபார்க்கும் ரசிகர்கள்

விடிய, விடியபார்க்கும் ரசிகர்கள்

முதல் போட்டியே இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குதான் தொடங்குகிறது. இதன்பிறகு நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை வரை அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் ரசிகர்கள் பலரும் இரவு 12 மணிக்கு மேலும் கண் விழித்து போட்டிகளை பார்க்கிறார்கள்.

சும்மா பார்க்க முடியுமா?

சும்மா பார்க்க முடியுமா?

போட்டியை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால் போர் அடித்துவிடும் என்பதற்காக நொறுக்கு தீனிகளையும், பல வகை உணவுகளையும் உருட்டி வாய்க்குள் தள்ளியபடி உள்ளனர். இதன் காரணமாக, இரவு நேரத்தில் இந்திய பெருநகரங்களில் செயல்படும் ஹோட்டல்களுக்கு ஆர்டர்கள் குவிகின்றன.

டோர்டெலிவரி அதிகம்

டோர்டெலிவரி அதிகம்

ஹோட்டல்களுக்கு பெரும்பாலும் டோர் டெலிவரி ஆர்டர்கள் அதிகம் வருகின்றன. வீட்டில் இருந்தபடி குடும்பத்தோடு சாப்பிட்டு குஷியாக மேட்ச் பார்க்கிறார்களாம் இந்தியர்கள்.

அணிகளுக்கு ஏற்ப ஆர்டர்

அணிகளுக்கு ஏற்ப ஆர்டர்

பெங்களூரில் இயங்கும் நைட்அவுட் உணவக குரூப் நிர்வாகி, பிரதிப் சிங் கூறுகையில், பெங்களூரில் இங்கிலாந்து, ஜெர்மனி நாட்டு அணிகளுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்த அணிகள் விளையாடும் நாட்களில் எங்கள் உணவகங்களுக்கு கூடுதலாக ஆர்டர்கள் வருகின்றன. வார நாட்களில் ஒரு ஆர்டரின் சராசரி மதிப்பு ரூ.350ஆக இருந்த நிலை மாறி தற்போது ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களில் இது ரூ.900வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். அப்படீன்னா, அங்க கோல்போடும் வரைக்கும் நீங்க அதிக நேரம் அடுப்பெரித்துதான் ஆகனும்.

கூடுதல் நேரம் திறப்பு

கூடுதல் நேரம் திறப்பு

மும்பையில் செயல்படும் மேட் பைட் ஹோட்டலில் முன்பெல்லாம் நாளொன்றுக்கு சராசரியாக 50 முதல் 60 ஆர்டர்கள் இரவில், செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 85 வரை அதிகரித்துள்ளதாம். உலக கோப்பையை முன்னிட்டு, மும்பையின் ஃபாசோஸ் துரித உணவு ஹோட்டல்கள் இரவில் கூடுதல் நேரம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ட்விட்டர், பேஸ்புக் மூலம் இத்தகவல் வாடிக்கையாளர்களை சென்றடைந்துவிடுவதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

பீட்சா, சான்ட்விச்

பீட்சா, சான்ட்விச்

விளையாட்டு பார்த்துக்கொண்டே சாப்பிட பீட்சா, பாஸ்டா, நூடுல்ஸ், சேன்ட்விஜ் போன்றவைதான் அதிகப்படியாக ஆர்டர் செய்யப்படுகின்றது என்று ஹோட்டல் அதிபர்கள் கூறுகிறார்கள். ஃபிஃபா உலக கோப்பைக்காகவே தனி மெனுக்களையும் உருவாக்கியுள்ள பிரபல ஹோட்டல்கள். இது காம்போ-பேக்காக இருக்கும். ஸ்நாக்ஸ், குளிர்பானம் போன்றவை இந்த காம்போவில் இடம்பெற்றிருக்கும்.

சிறப்பு தள்ளுபடியும் உண்டு..

சிறப்பு தள்ளுபடியும் உண்டு..

சாப்பாட்டு ஆர்டர்களை ஊக்குவிக்கும் நோக்கில், உணவகங்கள் டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளன. போட்டி நடைபெறும் நேரங்களில் ஆர்டர் செய்யப்படும் உணவகளுக்கு நைட்புட்டீ உணவகம் 20 சதவீத தள்ளுபடி அறிவித்துளளது. புட்பான்டா, டேஸ்டிகானா போன்ற பிரபல ஹோட்டல்களும் 20 முதல் 25 சதவீதம் டிஸ்கவுண்ட் ரேட்டில் உணவுகள் அளிக்கின்றன. லக்கி கூப்பன்களை அறிமுகம் செய்து பரிசளிக்க ஆரம்பித்துள்ளன சில ஹோட்டல்கள்.

இனிதான் களைகட்டும்

இனிதான் களைகட்டும்

உலக கோப்பை கால்பந்தாட்டத்தில், இப்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாக்-அவுட் சுற்று வந்த பிறகு ஆட்டம் மேலும் விறுவிறுப்பாகும் என்பதால் அப்போது உணவு விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்ற ஆசையில் கடையை திறந்து வைத்து காத்திருக்கிறார்கள் உணவக உரிமையாளர்கள்.

Story first published: Saturday, June 21, 2014, 13:57 [IST]
Other articles published on Jun 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+