Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து: ஆருடம் சொன்ன ஆக்டோபஸ் பழசு, சொல்லியடிக்கும் நெல்லிதான் புதுசு!

ரியோடி ஜெனிரோ: கடந்த உலககோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின்போது எந்த அணி வெற்றி பெறும் என்று சரியாக கணித்துச் சொன்ன, ஆக்டோபஸ் இறந்துபோய்விட்ட நிலையில், இந்தாண்டு உலக கோப்பையை வெல்லும் அணியை கணிக்க மற்றொரு உயிரினம் ரெடியாகிவிட்டதாம். இந்த கணிப்பை அறிந்துகொள்ள, விளையாட்டு ரசிகர்கள் ஏகத்துக்கும், எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆக்டோபஸ் ஒரு தடவை சொன்னா..

ஆக்டோபஸ் ஒரு தடவை சொன்னா..

கடந்த உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின்போது 'பால்' என்று பெயரிடப்பட்ட ஆக்டோபஸ், அணிகளின் வெற்றியை கணித்தது. தண்ணீர் தொட்டிக்குள், விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளை வைத்து ஆக்டோபஸ் அதில் எந்த கொடியை தொடுகிறதோ அந்த கொடியையுடைய நாடுதான் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆக்டோபஸ் தொட்ட கொடிக்குறிய நாடுதான் அன்றைய போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில் போட்டித்தொடர் முடிந்த சில நாட்களிலேயே ஆக்டோபஸ் உயிரிழந்தது.

குரங்கு, முள்ளம் பன்றியால் முடியலை..

குரங்கு, முள்ளம் பன்றியால் முடியலை..

இந்நிலையில் 20வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டிகள், வரும் 12ம்தேதி பிரேசிலில் தொடங்குகின்றன. இந்த முறை ஆக்டோபஸ் இல்லாததால் யார் கணிப்பார்கள் என்ற கவலையில் ரசிகர்கள் இருந்தனர். ரசிகர்கள் கவலையை போக்க குரங்கு, முள்ளம்பன்றி, இறால் ஆகிய உயிரினங்களை சில உள்ளூர் போட்டிகளில் களமிறக்கி சோதித்து பார்த்தனர். ஆனால் அவற்றின் கணிப்பு தவறாகிவிட்டது. ஆக்டோபஸ் அளவுக்கு நூறுசதவீதம் சரியாக கணிக்கும் உயிரினமாக இல்லாவிட்டாலும், முக்கால்வாசியாவது சரியாக கணிக்கும் உயிரினத்தை அறிமுகம் செய்ய விளையாட்டு ஆர்வலர்கள் துடித்து வந்தனர்.

கில்லியாக களம் காணும் நெல்லி

கில்லியாக களம் காணும் நெல்லி

விளையாட்டு ஆர்வலர்களின் மனக் குறையை நீக்க ஒரு உயிரினம் ரெடியாகிவிட்டது. ஆனால் இதை தண்ணீர் தொட்டியில் போட முடியாது. ஏனெனில் ஆக்டோபஸைவிட இது மிகப்பெரிய உயிரினம். அவர் வேறு யாருமல்ல கஜேந்திரன்தான். ஆம்.. ஜெர்மனியில் உள்ள 'நெல்லி' என்ற பெயர் கொண்ட யானைதான் இந்த உலக கோப்பையின் 'ஜோதிட திலகம்'. ஆக்டோபசும், இதே ஜெர்மனி நாட்டில் உருவானதுதான் என்பதால், நெல்லி மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் ஏறியுள்ளது.

முதல்வகுப்பில் பாஸ் ஆன நெல்லி

முதல்வகுப்பில் பாஸ் ஆன நெல்லி

இந்த நெல்லி யானை பல வருடங்களாகவே இதற்காக பயிற்சி பெற்றுவருகிறது. 2006ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக கோப்பை, 2010ம் ஆண்டில் நடைபெற்ற ஆண்கள் உலக கோப்பை, 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்களில் பெரும்பாலான போட்டிகளை சரியாக கணித்துள்ளது. மொத்தம் 33 போட்டிகளில் 30 ஆட்டங்களில் நெல்லியின் கணிப்பு அப்படியே பலித்துள்ளது. எனவே கணிப்பு பரிட்சையில் நெல்லி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவே கூறப்படுகிறது.

கணிப்பது இப்படித்தான்..

கணிப்பது இப்படித்தான்..

யானையின் இரு பக்கங்களிலும், 2 கோல் கம்பங்களை நட்டுவைக்கிறார்கள். கோல் கம்பங்களின் மீது இரு நாடுகளின் தேசிய கொடியை ஓட்டுகிறார்கள். இதன்பிறகு நெல்லி யானையின் காலுக்கடியில், கால்பந்து ஒன்றை வைக்கிறார்கள். அந்த பந்தை யானை எந்த நாட்டு கொடி ஒட்டப்பட்ட கோல்கம்பத்துக்குள் அடிக்கிறதோ, அந்த நாடு அன்றைய போட்டியில், வெற்றி பெறும் என்று கணிக்கிறார்கள். இரு கோல்கம்பத்துக்கும் நடுவே காலியிடத்தில் பந்து சென்றால், பந்தையம் டிரா ஆவது உறுதியாம்.

கரடி விடும் சீனா

கரடி விடும் சீனா

அனைத்து விசயங்களிலும் காப்பியடிக்கும் சீனா, இதில் மட்டும் சும்மா இருக்குமா என்ன..? ஜெர்மனிக்காரர்களுக்கு போட்டியாக பாண்டா கரடியை களம் இறக்கியுள்ளது சீனா. அந்த நாட்டின் சிஷுவான் மாகாணத்தில் உள்ள உயிரின பாதுகாப்பு மையத்தில் உள்ள பாண்டா கரடிக்கு, அந்த அபார சக்தியுள்ளதாக கரடிவிட்டுக்கொண்டுள்ளது சீனா. பாண்டாவுக்கு பிடித்த உணவை நாடுகளின் கொடிகளின் வடிவில் வடிவமைத்து கணிக்கலாமா, அல்லது பாண்டா ஏறும் மரங்களில் நாடுகளின் கொடிகளை கட்டி விட்டு கணிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து கொண்டுள்ளது.

எண் ஜோதிடம்

எண் ஜோதிடம்

இத்தாலியர்களுக்கு 17ம் எண் ஆகாது. இந்த எண்ணின் ரோமன் வடிவத்தை லத்தீன் மொழியில், மொழி பெயர்த்தால், மரணத்தை நோக்கி என்ற அர்த்தம் வரும். எனவே இத்தாலி விமானங்களில் 17ம்தேதி எண் வரிசையை தூக்கிவிட்டார்கள். வீடுகளுக்கும் அந்த எண்ணை கொடுப்பதில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் இத்தாலி கால்பந்தாட்ட அணி 17ம்தேதிகளில் 33 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது. அதில் 30ல் தோற்றும் போனது. இந்த உலக கோப்பை போட்டியில் 17ம்தேதி இத்தாலிக்கு போட்டி இல்லை என்பதால் வீரர்கள் நிம்மதியாக உள்ளனர். அமேரிக்கர்களுக்கு 13ம் எண்ணும், ஜப்பான்காரர்களுக்கு 4 மற்றும் 9ம் எண்ணும் ஆகாது. ரஷ்யர்கள் ஓரளவுக்கு இதில் இந்தியர்களைப்போலத்தான். ஒற்றைப்படை எண் என்றால் நல்ல சகுணமாகவும், இரட்டைப்படை எண் என்றால் அலர்ஜியாகவும் உணருகிறார்கள்.

Story first published: Saturday, June 7, 2014, 15:14 [IST]
Other articles published on Jun 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+