ஃபிஃபா உலகக்கோப்பை 2022 LIVE : பிரான்ஸ் அபாரம்.. போலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து போலாந்து அணி விளையாடியது. இதில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து செனகல் அணி விளையாட உள்ளது.

 

FIFA World Cup Qatar 2022 LIVE News Updates - England vs Iran

10:29 PM

போலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

10:28 PM

இரண்டாம் பாதி ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் போலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அந்த அணியின் நட்சத்திர வீரர் லெவோண்டோஸ்கி கோல் அடித்து அசத்தினார்.

10:20 PM

இரண்டாம் பாதியின் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே மூன்றாவது கோலை அடித்து அசத்தியுள்ளார். இந்த கோல் மூலம் உலகக்கோப்பைத் தொடரில் அடித்த கோல் எண்ணிக்கையில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி சாதனையை சமன் செய்துள்ளார்.

10:04 PM

74வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே இரண்டாவது கோல் அடித்தார். இது அவரின் 8வது உலகக்கோப்பை கோலாகும்.

09:48 PM

57வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஜிரூட் அடித்த கோல், நடுவரால் அங்கீகரிக்கப்படவில்லை. போலாந்து அணி கோல்கீப்பர் காயம் காரணமாக விழுந்ததால், கோல் வழங்கப்படவில்லை.

09:33 PM

பிரான்ஸ் - போலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

09:21 PM

பிரான்ஸ் - போலாந்து அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலையில் உள்ளது

09:15 PM

44வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜிரூட் முதல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது

09:10 PM

37வது நிமிடத்தில் போலாந்து அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், பிரான்ஸ் அணியை தடுமாற செய்தது. இறுதியாக பிரான்ஸ் கோல்கீப்பர் போலாந்து அணியின் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.

09:09 PM

34வது நிமிடத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேவுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை, போலாந்து கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்

08:53 PM

21வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை போலாந்து அணியின் லெவண்டோஸ்கி தவறவிட்டார்

08:44 PM

ஆட்டம் தொடங்கியது முதலே பிரான்ஸ் அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்து வருகின்றனர்

08:36 PM

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் நாக் அவுட் போட்டியில் பிரான்ஸ் - போலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது

10:26 PM

அமெரிக்காவை வீழ்த்தியதன் மூலம் நெதர்லாந்து அணி உலகக்கோப்பை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது

10:26 PM

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிபெற்றது

10:09 PM

81வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி மூன்றாவது கோலை அடித்து அசத்தியது

10:04 PM

76வது நிமிடத்தில் அமெரிக்கா அணி முதல் கோல் அடித்து அசத்தியது

10:00 PM

71வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் கோல் வாய்ப்பை அமெரிக்கா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்

09:45 PM

இரண்டாம் பாதியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக அடுத்தடுத்து கோல் அடிக்க அமெரிக்கா அணிக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டது

09:32 PM

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நெதர்லாந்து - அமெரிக்கா இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

09:19 PM

முதல் பாதியின் கூடுதல் நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் பிளைண்ட் இரண்டாவது கோல் அடித்துள்ளார். இதனால் நெதர்லாந்து அணி முதல் பாதி ஆட்டம் நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

09:15 PM

42வது நிமிடத்தில் அமெரிக்கா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, நெதர்லாந்து கோல் கீப்பர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார். இதனால் ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கிலேயே நீடித்து வருகிறது.

08:56 PM

முதல் கோல் அடித்த பின்னர் நெதர்லாந்து அணியை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்து திணறி வருகின்றனர்

08:46 PM

ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் டொம்பிரிஸ் கொடுத்த கிராஸை, நெதர்லாந்து அணியின் டிபாய் முதல் அடித்து அசத்தினார்

08:42 PM

அமெரிக்கா அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

08:42 PM

ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் டொம்பிரிஸ் கொடுத்த கிராஸை, நெதர்லாந்து அணியின் டீபே முதல் அடித்து அசத்தினார்

08:35 PM

நெதர்லாந்து - அமெரிக்கா இடையிலான முதல் ரவுண்ட் ஆஃப் 16 போட்டி தொடங்கியது

08:35 PM

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் தொடங்கியது. இன்றையப் போட்டியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதித்து அமெரிக்கா பலப்பரீட்சை நடத்துகிறது.

10:38 PM

கானா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. இருந்தும் உருகுவே அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது. குரூப் எச் பிரிவில் இருந்து போர்ச்சுகல், தென் கொரியா அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன

10:34 PM

போர்ச்சுகல் அணிக்கு எதிராக உலகக்கோப்பை போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது

10:19 PM

இரு ஆட்டங்களும் முடிவை நோக்கி செல்கிறது. எந்த மாற்றமும் கோல்களில் இல்லை

09:16 PM

போர்ச்சுக்கல்லுக்கு எதிராக 27வது நிமிடத்தில் தென் கொரிய அணி முதல் கோல் போட்டு சமன் செய்தது

09:16 PM

ஆட்டத்தின் 26 மற்றும் 32வது நிமிடத்தில் உருகுவே கோல் அடித்து முன்னிலை பெற்றது. உலுகுவே 2, கானா 0

08:57 PM

25 நிமிடங்கள் முடிவந்த நிலையில், கானா, உருகுவே ஆட்டத்தில் யாரும் கோல் அடிக்கவில்லை. மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் vs தென் கொரியா 1-0,

08:40 PM

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் முதல் கோலை அடித்தது

08:38 PM

போர்ச்சுக்கல் vs தென் கொரியா 0-0, கானா vs உருகுவே 0-0 ஒரே நேரத்தில் 2 போட்டி தொடங்கியது

10:28 PM

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

10:28 PM

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் குரோஷியா - பெல்ஜியம் இடையிலான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிவடைந்தது. இதனால் பெல்ஜியம் அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. குரோஷியா அணி ரவுண்ட் ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

09:55 PM

குரோஷியா வெற்றி அல்லது டிரா செய்தால் அடுத்த சுற்றுக்கு செல்லும். பெல்ஜியம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும்

09:53 PM

கனடா Vs மொராகோ - ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் மொராகோ வீரர் OWN GOAL போட்டு அதிர்ச்சி அளிக்க, கனடாவுக்கு முதல் கோல் கிடைத்தது

09:08 PM

37 நிமிடம் முடிவில் பெல்ஜியம், குரோஷிய அணிகள் கோல் அடிக்கவில்லை

09:06 PM

கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 23வது நிமிடத்தில் மொராகோ 2வது கோலை அடித்தது

08:43 PM

கனடாக்கு எதிரான ஆட்டத்தில் 4வது நிமிடத்தில் மொராகோ அணி முதல் கோல் அடித்தது

08:32 PM

குரோஷியா Vs பெல்ஜியம் 0-0 , கனடா vs மொராகோ 0-0 இரு ஆட்டங்களும் தொடங்கியது

10:34 PM

நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துனிசியா அபார வெற்றி.

10:28 PM

டென்மார்க் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா உலகக்கோப்பைத் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

09:21 PM

பிரான்ஸ் vs துனிசியா, டென்மார்க் vs ஆஸ்திரேலியா - முதல் பாதி முடிவில் யாரும் கோல் அடிக்கவில்லை

09:21 PM

38 நிமிட முடிவில் இரு போட்டியில் எந்த அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. நடப்பு சாம்பியன் பிரான்ஸ்க்கு துனிசியா தண்ணீர் காட்டுகிறது

08:47 PM

15 நிமிடங்கள் முடிந்த நிலையில், 2 ஆட்டத்திலும் எந்த அணியும் கோல் போடவில்லை

08:45 PM

பிரான்ஸ் துனிசியாவையும், டென்மார்க் ஆஸியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி ஒரே நேரத்தில் நடைபெறுகிறது

10:31 PM

எகுவடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செனகல் அணி 2க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி

10:28 PM

கத்தாருக்கு எதிரான மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணி 2க்கு0 என்ற கோல் கணக்கில் வெற்றி

10:06 PM

ஆட்டத்தின் 73 நிமிட முடிவில் எகுவடார் 1 கோலும், செனங்கல் 2 கோலும் போட்டுள்ளது

09:51 PM

எகுவடார் அணிக்கு எதிராக செனங்கல் ஒரு கோல் போட்டது

09:50 PM

கத்தாருக்கு எதிராக நெதர்லாந்து அணி 2 கோல்கள் போட்டது

09:04 PM

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தற்போது ஒரே நேரத்தில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. நெதர்லாந்து, கத்தார் அணிகளும், எகுவடார் , செனகல் அணியும் மோதி வருகிறது

11:25 PM

சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

11:13 PM

83வது நிமிடத்தில் பிரேசில் அணியின் கசிமீரோ முதல் கோல் அடித்து அசத்தினார்

10:55 PM

பிரேசில் அணி அடித்த முதல் கோல் ஆஃப் சைடாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது

10:53 PM

64வது நிமிடத்தில் பிரேசில் அணியின் வினிஷியஸ் ஜூனியர் முதல் கோல் அடித்தார்

10:45 PM

55வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிஷியஸ் கொடுத்த கிராஸை, கோல் அடிக்க முடியாமல் ரிச்சர்லிசன் தவறவிட்டார்

10:35 PM

பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

10:18 PM

பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் முடிவுக்கு வந்தது.

10:15 PM

இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்து வரும் முயற்சிகள், அந்தந்த அணிகளின் டிஃபென்டர்களால் தடுக்கப்பட்டு வருகிறது

09:53 PM

பிரேசில் நட்சத்திர வீரர் ரிச்சர்லிசனை கட்டுப்படுத்த முடியாமல், சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் திணறி வருகின்றனர்

09:45 PM

பிரேசில் அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில், கோல் அடிக்க முயற்சித்த ரிச்சர்லிசனின் முயற்சி சுவிட்சர்லாந்து டிஃபென்டர்களால் தடுக்கப்பட்டது

09:33 PM

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் குரூப் ஜி பிரிவில் உள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது.

08:39 PM

தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணி வெற்றிபெற்றது

08:29 PM

இரண்டாம் பாதி ஆட்ட நேரம் முடிவுக்கு வந்த நிலையில், கூடுதலாக 10 நிமிடங்கள் நடுவர்களால் வழங்கப்பட்டது

08:09 PM

61வது நிமிடத்தில் தென் கொரியா அணி இரண்டாவது கோலை அடித்து சமன் செய்துள்ளது. இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டுள்ளது. முதல் கோலை அடித்த சோ மீண்டும் ஹெட்டர் மூலம் கோல் அடித்தார்

08:08 PM

தென் கொரியா அணியின் கோலுக்கு பதிலடியாக கானா அணி மூன்றாவது கோலை அடித்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது கோலை அடித்த குடுஸ், மீண்டும் கோல் அடித்துள்ளார்

07:52 PM

தென் கொரியா அணி 58வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தியது. அந்த அணியின் சோ குயி சென் முதல் கோலை ஹெட்டர் மூலம் அடித்து அசத்தினார்

07:39 PM

தென் கொரியா - கானா அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

07:25 PM

தென் கொரியா - கானா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் கானா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

07:08 PM

கானா அணியின் நட்சத்திர வீரர் முகமது குடுஸ் இரண்டாவது கோலை அடித்தார்

07:08 PM

34வது நிமிடத்தில் கானா அணி இரண்டாவது கோலை அடித்து அசத்தியது

06:59 PM

முதல் கோல் அடித்த கானா.. தென் கொரியா பதிலடி கொடுக்குமா?

06:57 PM

23வது நிமிடத்தில் கானா அணி முதல் கோலை அடித்து அசத்தியது. கானா அணியின் முகமது சலீசு முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்துள்ளார்

06:49 PM

16வது நிமிடத்தில் கானா அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பில், கோல் அடிக்காமல் வீணடித்தது

06:37 PM

கானா அணி 4-3-3 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது

06:37 PM

தென் கொரியா அணி 4-2-3-1 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது

06:35 PM

தென் கொரியா - கானா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது

08:29 PM

2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை மொராகோ வீழ்த்தியது

08:27 PM

ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் 2 வது கோலை அடித்தது பெல்ஜியம்

08:23 PM

ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் மொராகோ அணி ஒரு கோலை அடித்து முன்னிலை பெற்றது

07:39 PM

பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மொரோகோ அடித்த கோல் , OFF SIDE என திரும்ப பெறப்பட்டது

05:27 PM

ஆட்டம் முடிவில் ஜப்பானை வீழ்த்தியது கோஸ்டா ரிக்கா

05:22 PM

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோஸ்டக்கா வீரர் ஃபுல்லர் முதல் கோல் அடித்தார்

04:25 PM

ஆட்டடத்தின் முதல் பாதியில் ஜப்பான், கோஸ்டா ரிக்கா அணிகள் கோல் அடிக்கவில்லை

04:24 PM

ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் மிக்காவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

04:23 PM

ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் கோஸ்டா ரிக்கா வீரர் ஆந்தோணிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது

04:23 PM

கோஸ்டா ரிக்காக்கு எதிரான ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்தில் ஜப்பான் வீரர்கள் 3 FOUL செய்தனர்

11:29 PM

டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முதல் அணியாக நடப்பு சாம்பியன் பிரான்ஸ் தகுதிபெற்றுள்ளது.

11:22 PM

இரண்டாம் பாதி ஆட்டத்தில் 6 நிமிடங்கள் கூடுதல் நேரமாக வழங்கப்பட்டுள்ளது

11:22 PM

86வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே இரண்டாவது கோலை அடித்து அசத்தினார்

11:00 PM

பிரான்ஸ் அணி அடித்த முதல் கோலுக்கு பதிலடியாக, டென்மார்க் அணி 68வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தல்

11:00 PM

டென்மார்க் அணிக்கு எதிராக பிரான்ஸ் அணியின் எம்பாப்பே முதல் கோல் அடித்து அசத்தல்

10:47 PM

55வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி நட்சத்திர வீரர் எம்பாப்பே கோல் அடிக்க எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது

10:35 PM

பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

10:17 PM

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை

10:00 PM

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் பிரான்ஸ் அடித்த கோல் வாய்ப்பை அபாரமாக தடுத்தார் டென்மார்க் வீரர் சோமேக்கர்

09:52 PM

டென்மார்க் வீரர் ஆண்டிரியாஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது

09:50 PM

டென்மார்க் எதிரான போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் வீரர்கள் ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

08:38 PM

சவுதி அரேபியாவை 2க்கு0 என்ற கோல் கணக்கில் போலாந்து வீழ்த்தியது

08:27 PM

உலககோப்பை கால்பந்து வராற்றில் ராபர்ட் லிவோண்டஸ்கி தனது முதல் கோலை அடித்தார்

08:27 PM

ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ராபர்ட் லிவோண்டஸ்கி கோல் அடிக்க, போலாந்து 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

08:04 PM

63வது நிமிடத்தில் போலாந்து வீரர் ராபர்ட் லிவோண்டஸ்கி அடிக்க முயன்ற கோலை சவுதி அணி தடுத்தது

07:27 PM

சவுதி அரேபியா - போலாது அணிக்கு இடையிலான முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் போலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

07:18 PM

சவுதி அரேபியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்காமல் தவறவிட்டது

07:17 PM

43வது நிமிடத்தில் சவுதி அரேபியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்துள்ளது

07:13 PM

ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் போலாந்து அணிக்காக ஜெலின்ஸ்கி முதல் கோல் அடித்து அசத்தல்

07:12 PM

சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் போலாந்து அணி முதல் கோல் அடித்து முன்னிலை

07:07 PM

முதல் பாதி ஆட்டம் முடிவிற்கு வரும் முன்னரே, போலாந்து அணி வீரர்கள் 4 மஞ்சள் அட்டையை பெற்றுள்ளனர்

06:57 PM

25வது நிமிடத்தில் போலாந்து அணி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, சவுதி அரேபியா அணி கடைசி நொடியில் தடுத்தது

06:44 PM

ஆட்டம் தொடங்கியது முதலே சவுதி அரேபியா அணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

06:35 PM

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் குரூப் சி பிரிவில் உள்ள போலாந்து - சவுதி அரேபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது.

05:39 PM

ஆஸ்திரேலியா 1க்கு0 என்ற கோல் கணக்கில் துனிஷியாவை வீழ்த்தியது

05:02 PM

ஆஸ்திரேலியாவின் கோலை சமன் செய்ய துனிஷியா போராட்டம்

05:01 PM

துனிஷிய வீரர் அப்திக்கு மஞ்சள் அட்டையை காண்பித்தார் நடுவர்

04:19 PM

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. துனிசியா 0 கோல்

03:32 PM

துனிசியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. இவ்விரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் துனிஷியாவே வெற்றி பெற்று இருக்கிறது

11:35 PM

நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது

11:25 PM

இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 6 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது

11:21 PM

ஈகுவடார் அணியின் கேப்டன் வெலன்சியா காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்

11:08 PM

இரண்டாவது கோலை அடிக்கும் முயற்சியில் நெதர்லாந்து, ஈகுவடார் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன

10:46 PM

நெதர்லாந்து - ஈகுவடார் அணிக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டுள்ளது

10:42 PM

49வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் கேப்டன் வெலன்சியா கோல் அடித்து அசத்தினார்.

10:38 PM

நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

10:23 PM

கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில், ஈகுவடார் அணியின் எஸ்டிபினான் கோல் அடித்தார். ஆனால் நடுவர்களால் கோல் கொடுக்கவில்லை. அதோடு முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதி முடிவில் நெதர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

10:17 PM

முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 3 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது

09:59 PM

ஈகுவடார் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்து வருகிறது. அத்தனை முயற்சிகளையும் நெதர்லாந்து அணியின் டிஃபென்ஸ் வீரர்கள் இரும்பு அரண் போல் தடுத்து வருகின்றனர்

09:55 PM

கோல் அடிப்பதற்காக ஈகுவடார், நெதர்லாந்து அணிகள் தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன

09:51 PM
Mykhel

ஈகுவடாருக்கு எதிராக 6வது நிமிடத்திலேயே கோல் அடித்து நெதர்லாந்து முன்னிலை

09:40 PM

ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலே நெதர்லாந்து அணியின் 19 வயதான கோடீ கேக்போ முதல் கோல் அடித்து அசத்தினார்

09:32 PM

நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது

08:36 PM

முதல் போட்டியில் ஈகுவடார் அணியிடம் அடைந்த தோல்விக்கு பின், கத்தார் அணி மீண்டும் செனகல் அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளது

08:35 PM

ஆட்ட நேர முடிவில் செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.

08:28 PM

இரண்டாம் பாதி முடிவடைந்த நிலையில், கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது

08:22 PM

கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி முன்னிலை

08:22 PM

ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் செனகல் அணி வீரர் பம்பா, அந்த அணிக்காக மூன்றாவது கோல் அடித்து அசத்தினார்

08:19 PM

72வது நிமிடத்தில் கத்தார் அணியின் முகமது முன்டாரி முதல் கோலை அடித்து அசத்தினார்

08:03 PM

62வது நிமிடத்தில் கத்தார் வீரர் ஹசன் கோல் அடிக்க எடுத்த முயற்சியை, செனகல் அணியின் கோல்கீப்பர் மென்டி தடுத்து நிறுத்தினார்

07:53 PM

கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் செனகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை

07:53 PM

இரண்டாம் பாதியின் சில நிமிடங்களிலேயே செனகல் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பில், அந்த அணியின் ஃபமாரா தியது இரண்டாவது கோல் அடித்து அசத்தல்

07:40 PM

கத்தார் - செனகல் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

07:25 PM

கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

07:14 PM

41வது நிமிடத்தில் செனகல் அணி வீரர் டியா முதல் கோலை அடித்து அசத்தினார்

07:00 PM

கத்தார் அணிக்கு எதிராக போட்டியில் செனகல் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கத்தார் அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்து, செனகல் ஃபார்வேடு வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்து வருகின்றனர்

06:53 PM

செனகல் அணிக்கு கத்தார் அணி வீரர்கள் சரியான போட்டியளித்து வருகின்றனர். 14வது நிமிடத்தில் கத்தார் அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது

06:37 PM

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் குரூப் ஏ பிரிவில் உள்ள செனகல் - கத்தார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது

05:40 PM

வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிடத்தின் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து ஈரான் அணி அபாரம்

05:39 PM

வேல்ஸ் அணியை கடைசி நிமிடத்தில் வீழ்த்திய ஈரான்

05:38 PM

வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது

05:38 PM

தொடர்ந்து கூடுதல் நேரத்தின் 11வது நிமிடத்தில் ஈரான் அணியின் ரமின் இரண்டாவது கோலை அடித்து சாதித்தார்

05:37 PM

ஈரான் அணியின் செஸ்மி கூடுதல் நேரத்தின் 8வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார்

05:34 PM

வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து ஈரான் அணி அபாரம்

05:32 PM

வேல் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாம் பாதியில் கூடுதல் நிமிடத்தின் கடைசி நொடிகளில் ஈரான் அணி கோல் அடித்து அசத்தியது

04:40 PM

ஆட்டத்தின் முதல் பாதி நேரம் முடிந்தபிறகும் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் சவால் கொடுத்து வருகின்றன

04:03 PM

இரு அணிகளும் கடும் சவால் கொடுத்து வருவதால், 29 நிமிடங்கள் வரையிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை

03:52 PM

வேல்ஸ் அணியின் கரேத் பாலேவுக்கு ஃப்ரீ கிக் கொடுக்கப்பட்டுள்ளது

11:29 PM

கானா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றிபெற்றுள்ளது

11:21 PM

90வது நிமிடத்தில் கானா அணியின் ஓஸ்மான் புகாரி இரண்டாவது கோலை அடித்தார்

11:10 PM

80வது நிமிடத்தில் ரஃபேல் லியோ போர்ச்சுகல் அணிக்காக மூன்றாவது கோல் அடித்து அசத்தல்

11:08 PM

77வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ஜாவோ ஃபெலிக்ஸ் 2வது கோலை அடித்து அசத்தினார்

11:05 PM

இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்துள்ளதால் 1-1 என்று சமநிலை ஏற்பட்டுள்ளது

11:02 PM

72வது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரே அயோ கோல் அடித்து அசத்தினார்

10:56 PM

ஐந்து வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடரில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ

10:53 PM

போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்

10:52 PM

62வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

10:52 PM

போர்ச்சுகல் அணி வீரருடன் மோதலில் ஈடுபட்டதால், கானா அணியின் அலிட் செயிடுவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டுள்ளது

10:42 PM

போர்ச்சுகல் - கானா அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியுள்ளது

10:31 PM

முதல் பாதி முடிந்தது.போர்ச்சுகல், கானா அணிகள் கோல் அடிக்கவில்லை

10:05 PM

2 முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் வீண் செய்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

09:42 PM

கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக நடப்பு உலககோப்பையில் விளையாடி வருகிறார்

09:37 PM

போர்ச்சுக்கல் , கானா அணிகள் விளையாடி வருகிறது

08:30 PM

உருகுவே, தென்கொரியா மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது

08:13 PM

ஆட்டத்திடன 81வது நிமிடத்தில் கோல் வாய்ப்பை தவறவிட்டது உருகுவே

08:04 PM

75 நிமிடங்கள் முடிந்தும், உருகுவே, தென் கொரியா கோல் ஏதும் அடிக்கவில்லை

07:19 PM

உருகுவே - தென் கொரியா அணிகளுக்கு இடையிலான முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது. இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், அந்தந்த அணிகளின் டிஃபெண்டர்களால் தடுக்கப்பட்டது.

07:06 PM

ஆட்டத்தில் 34வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் தென் கொரியா அணி கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தது

06:58 PM

25வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை வீணடித்தது

06:49 PM

தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் உருகுவே அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது

05:31 PM

கேமரூணை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

05:24 PM

90 நிமிடங்கள் முடிந்த நிலையில், போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றுவிட்டது. சுவிட்சர்லாந்து 1 கோலுடன் முன்னிலையில் உள்ளது

05:20 PM

ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் சுவிட்சத்லாந்து வீரர் அகாஞ்சிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது

05:14 PM

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ப்ரீல் எம்போலோ கோல் அடித்து அசத்தல்

05:07 PM

சுவிட்சர்லாந்து கோலை சமன் செய்ய முடியாமல் கேமரூண் போராட்டம்

05:05 PM

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து முதல் கோல் அடித்தது

04:20 PM

ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்துவிட்ட போதும், இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

04:07 PM

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கேமரூனை சேர்ந்த மார்டின் கோல் அடிக்க முயன்ற போது தோல்வியில் முடிந்தது

03:54 PM

ஆட்டத்தில் 20 நிமிடங்கள் ஆகியும் இரு அணிகளுமே ஒரு கோலை கூட அடிக்காமல் உள்ளது

03:01 PM

கேமரூண் vs சுவிட்சர்லாந்து லீக் ஆட்டம் தமிழ் அப்பேட்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம். போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும்

11:31 PM

கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது

11:25 PM

இரண்டாம் பாதியின் கூடுதல் நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மொரட்டா 7வது கோல் அடித்தார்

11:23 PM

இரண்டாம் பாதியின் கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் கார்லஸ் சோலர் 6வது கோல் அடித்தார்

11:10 PM

கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை

11:10 PM

ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் காவி 5வது கோல் அடித்து அசத்தினார்

11:10 PM

கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி தொடர்ந்து ஆதிக்கம்

11:09 PM

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஃபெரன் டோரஸ் 4வது கோல் அடித்து அசத்தினார்

10:22 PM

முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

10:16 PM

கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியை ஸ்பெயின் அணி தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. முதல் பாதியிலேயே ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

10:03 PM

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில், அந்த அணியின் ஃபெரோன் டோரஸ் கோல் அடித்து அசத்தினார்

09:55 PM

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்கோ அசன்சியோ 2வது கோல் அடித்து அசத்தினார்

09:44 PM

ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டானி முதல் கோலை அடித்து அசத்தினார்

09:37 PM

கோஸ்ட்டா ரிக்கா அணி 5-4-1 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது

09:36 PM

முன்னாள் சாம்பியன் அணியான ஸ்பெயின் அணி 4-3-3 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது

09:35 PM

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் குரூப் ஈ பிரிவில் உள்ள ஸ்பெயின் - கோஸ்ட்டா ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது

08:40 PM

உலககோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்

08:39 PM

4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி முதல் ஆட்டத்தில் தோற்றது

08:36 PM

நேற்று சவுதியிடம் அர்ஜென்டினா தோற்ற நிலையில், ஜெர்மனி அணி, ஜப்பானிடம் வீழ்ந்தது. இதனால் கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

08:33 PM

ஜப்பானிடம் தோல்வியை தழுவியது ஜெர்மனி. 2க்கு1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வென்றது

08:24 PM

90 நிமிடங்கள் முடிந்து, ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றுவிட்டது. கோலை சமன் செய்ய ஜெர்மனி போராட்டம்

08:19 PM

பரபரப்பான நிலையில் ஜெர்மனி 1 - ஜப்பான் 2 கோல்கள் போட்டுள்ளது

08:18 PM

ஜப்பான் அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு முன்னிலை பெற்றது

07:59 PM

ஆட்டத்தின் 2வது பாதியில், ஜெர்மனியின் கோலை சமன் செய்ய ஜப்பான் போராடி வருகிறது

07:25 PM

ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி 1க்கு0 என்ற கோல் கணக்கில் முன்டினலையில் உள்ளது

07:07 PM

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றியது ஜெர்மனி

07:02 PM

தாக்குதல் ஆட்டத்தை ஜெர்மனி அணி தொடங்கிவிட்டது. 26, 27 மற்றும் 28 நிமிடங்களில் கோல் போட முயற்சி

07:00 PM

ஜெர்மனி , ஜப்பான் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

05:38 PM

போட்டி 90 நிமிடங்கள் முடிந்த நிலையில், தற்போது கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. குரோஷியா Vs மொராகோ 0-0

04:58 PM

ஆட்டத்தின் 63 வது நிமிடத்தில் குரோஷியா ஃபிரி கீக் வாய்ப்பை வீணடித்தது

04:43 PM

ஆட்டத்தின் முதல் பாதி முடிந்தது - குரோஷியா Vs மொராகோ 0-0

04:03 PM

அரைமணி நேரம் கடந்த நிலையில் மொராகோ, குரோஷியா கோல் அடிக்கவில்லை

04:02 PM

ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது கொராகோ

03:41 PM

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை, குரோஷியா கோலாக மாற்றவில்லை

03:38 PM

மொராகோ, குரோஷிய அணிக்கு இடையிலான லீக் ஆட்டம் தொடங்கியது

03:27 PM

மொராகோ 16 உலககோப்பை ஆட்டங்களில் விளையாடி 2 ஆட்டங்களில் வெற்றி, 9 தோல்வி, 5 டிரா பெற்றுள்ளது

03:27 PM

குரோஷிய அணி கடந்த 2006 ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் ஜப்பானுக்கு எதிராக கோல் அடிக்கவில்லை. அதன் பிறகு விளையாடிய அனைத்து உலககோப்பையிலும் குரோஷிய அணி ஒரு கோலாவது அடித்து இருக்கிறது

03:22 PM

குரோஷிய அணியின் நட்சத்திர வீரர் மொட்ரிச் இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

03:22 PM

கடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய 8 வீரர்கள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர்

03:21 PM

குரோஷியா , மொரகோ அணிகள் மோதும் லீக் ஆட்டத்தின் தமிழ் அப்டேட்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்

10:42 PM

போலாந்து அணியின் ராபர்ட் லேவண்டோஸ்கி ஃப்ரீ கிக்-ஐ பெற்றுள்ளார்

10:22 PM

ஆட்டத்தின் முதல் பாதி நேரம் முடிவடைந்த சூழலில் இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்கவில்லை

10:02 PM

மெக்ஸிகோ வீரர் ஜார்ஜ் ஃபவுலானதால் மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டது

10:00 PM

ஆட்டத்தின் 27வது நிமிடம் வரை இரு அணிகளுமே இன்னும் ஒரு கோல் கூட போடாமல் ஆடி வருகிறது

08:31 PM

போட்டி சமனில் முடிவடைந்ததால் டென்மார்க், துனிசியா அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது

08:30 PM

டென்மார்க், துனிசியா மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் போட்டி முழுவதும் கோல் அடிக்கவில்லை

07:48 PM

அடுத்தடுத்து 3 நிமிடங்களில் கிடைத்த கார்னர் வாய்ப்பை துனிசியா தவறவிட்டது. டென்மார்க், துனிசியா 0-0

07:24 PM

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. டென்மார்க், துனிசியா 0-0

06:50 PM

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை துனிசியா அணி தவறவிட்டது

06:35 PM

டென்மார்க் எதிராக ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை துனிசியா தவறவிட்டது

06:34 PM

டென்மார்க் Vs துனிசியா ஆட்டத்திற்கான லைப் அப்டேட்ஸ் தமிழில் உங்களுக்காக..

05:44 PM

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வலிமையான அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அணி வரலாறு படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் - துனிஷியா அணிகள் மோத உள்ளன.

05:44 PM

இரண்டாம் பாதி ஆட்டம் நேரம் முடிவுக்கு வந்த நிலையில், 8 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.

05:41 PM

உலகக்கோப்பைத் தொடரில் வலிமையான அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா அணி வரலாறு படைத்தது

05:41 PM

கடைசி நிமிடத்தில் அர்ஜென்டினா அணி எடுத்த அனைத்து முயற்சிகளையும் சவுதி அரேபியா கோல் கீப்பர் முகமது தடுத்து நிறுத்தினார்

05:41 PM

அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, சவுதி அரேபியா டிஃபெண்டர்கள் அசாத்தியமாக க்ளியர் செய்து பந்தை எதிர்திசைக்கு கொண்டு சென்றனர்

05:39 PM

உலகக்கோப்பைத் தொடரில் வலிமையான அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா அணி வரலாறு படைத்தது

05:29 PM

இரண்டாம் பாதி ஆட்டம் நேரம் முடிவுக்கு வந்த நிலையில், 8 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.

05:22 PM

83வது நிமிடத்தில் டி மரியா கொடுத்த கிராஸ் வாய்ப்பை, நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஹெட்டர் அடித்தார். அது அர்ஜென்டினா அணிக்கு கோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதானமாக நின்றிருந்த சவுதி அரேபியா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்.

05:18 PM

79வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை, நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தவறவிட்டார்

05:13 PM

1990 உலகக்கோப்பைத் தொடரில் கேமரூன் அணிக்கு எதிரான குரூப் போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது. அதேபோல் நடப்பு உலகக்கோப்பைத் தொடரிலும் முதல் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை சந்திக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது

05:08 PM

அர்ஜென்டினா அணியின் ஃபெர்னாண்டஸ், ஆல்வரெஸ், மார்டினெஸ் ஆகியோருக்கு பதிலாக ரொமேரோ, பரடெஸ், கோமெஸ் களமிறக்கப்பட்டுள்ளனர்

04:59 PM

62வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணி கோல் அடிக்க முயற்சியை, சவுதி அரேபியா அணி லாவகமாக தடுத்து நிறுத்தியது

04:55 PM

சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து சவுதி அரேபியா அணி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது

04:51 PM

ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் சவுதி அரேபியா அணியின் நட்சத்திர வீரர் சலீம் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார்

04:50 PM

அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் 2வது கோலை அடித்து அசத்தியது சவுதி அரேபியா

04:45 PM

அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பாக நடந்து வருகிறது

04:45 PM

48வது நிமிடத்தில் சவுதி அரேபியா அணியின் சாலே அல்ஷெகரி அந்த அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார்

04:45 PM

அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது

04:31 PM

அர்ஜென்டினா அணிக்கு எதிராக சவுதி அரேபியா வீரர்கள் சுமாராக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவால் அளித்து வருகின்றனர்

04:27 PM

முதல் பாதியின் இறுதி நேரத்தில் சவுதி அரேபியா கேப்டன் சல்மான் காயம் காரணமாக வெளியேறினார்

04:27 PM

அவருக்கு பதிலாக சவுதி அரேபியா அணியின் இளம் வீரர் அல் அபித் மாற்று வீரராக களமிறங்கினார்

04:27 PM

முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது

04:26 PM

அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகளுக்கு இடையிலான முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது

04:25 PM

முதல் பாதியில் மட்டும் அர்ஜென்டினா அணி வீரர்கள் 7 முறை விதிகளை மீறி ஆஃப் சைடில் நின்றுள்ளனர்

04:19 PM

அர்ஜென்டினா அணியின் ஃபார்வர்ட் வீரர்களை, சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பாக தடுத்து வருகின்றனர்

04:19 PM

அர்ஜென்டினா அணிக்கு எதிராக சவுதி அரேபியா வீரர் சுமாராக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவால் அளித்து வருகின்றனர்

04:15 PM

39வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை வேரியேஷன் முறையில் அர்ஜென்டினா அணி பயன்படுத்திய நிலையில், சவுதி அரேபிய வீரர்கள் ஃபவுல் செய்தனர்.

04:07 PM

அர்ஜென்டினா 4-4-2 மற்றும் சவுதி அரேபியா 4-1-4-1 என்ற அடிப்படையில் விளையாடுகிறது

04:00 PM

ஆட்டத்தின் 21 ,22 மற்றும் 24 ஆகிய நிமிடங்களில் அர்ஜென்டின வீரர்கள் விதிகளுக்கு மீறி ஆப் சைடில் நின்றனர்

03:49 PM

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் அர்ஜென்டின வீரர் மெஸ்ஸி

12:49 AM

ஆட்டம் தொடங்கிய 13 நிமிடங்களிலேயே அமெரிக்கா அணியின் வெஸ்டன் மெக்கன்சி மற்றும் செர்ஜினோ ஆகியோருக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

12:44 AM

ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே அமெரிக்கா அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை அமெரிக்கா கோல் அடிக்காமல் வீணடித்தது. தொடர்ந்து 5வது நிமிடத்தில் முதல் கார்னர் வாய்ப்பும் அமெரிக்காவுக்கு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் மேஃபாம் தவறான திசையில் ஹெட்டர் அடித்ததால், வாய்ப்பை பயன்படுத்த தவறினார்.

12:39 AM

ஃபிபா உலகக்கோப்பைத் தொடரில் குரூப் பி பிரிவில் உள்ள அமெரிக்கா - வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது

11:32 PM

கடைசி நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டேவி கிளாஸன் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 2-0 என கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

11:17 PM

84வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை நெதர்லாந்து அணியின் கேக்போ அடித்து அசத்தினார். இதனால் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

11:02 PM

64வது நிமிடத்தில் செனகல் அணியின் நட்சத்திர வீரர் டியா கோல் போஸ்ட்டின் கீழ் பகுதி கார்னரில் அடித்த பந்தை, நெதர்லாந்து அணியின் கோல் கீப்பர் லாவகமாக தடுத்ததால், ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் தொடர்ந்து வருகிறது.

10:55 PM

செனகல் அணியின் இஸ்மைலாவை தள்ளிவிட்டதால், நெதர்லாந்து அணியின் மத்ஜிஸ் டி லிஜித்திற்கு ஆட்டத்தின் முதல் மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

10:52 PM

53வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நெதர்லாந்து அணியின் வான் டிஜிக் சரியான நேரத்தில் ஹெட்டர் அடிக்காததால் கோல் வாய்ப்பு பறிபோனது.

10:46 PM

செனகல் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

10:23 PM

செனகல் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை, அந்தந்த அணிகளின் டிஃபெண்டர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

10:23 PM

41வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் செய்த தவறால், செனகல் அணிக்கு கோல் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை நெதர்லாந்து அணியின் வின்செண்ட் ஜான்சன் திறம்பட தடுத்தார்.

10:01 PM

செனகல் அணியின் டிஃபெண்டர்களை தகர்க்க முடியாமல் நெதர்லாந்து அணியின் ஃபார்வேர்டு வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால் நெதர்லாந்து அணி கோல் அடிக்க முடியாமல் தவித்து வருகிறது.

09:51 PM

16வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த நெதர்லாந்து அணி வீணடித்தது. தொடர்ந்து நெதர்லாந்து அணி வீரர்கள் தாக்குதல் பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

09:39 PM

3வது நிமிடத்தின் போது நெதர்லாந்து அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை நழுவவிட்டது.

09:36 PM

செனகல் அணி 4-1-2-3 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது. அதேபோல் நெதர்லாந்து அணி 5-3-2 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது.

09:33 PM

ஃபிபா உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது

08:46 PM

இங்கிலாந்து அணி 6க்கு2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது

08:46 PM

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றியது ஈரான்

08:34 PM

90வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி 6வது கோலை அடித்தது

08:15 PM

71வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி 5வது கோலை அடித்து அசத்தல். மார்கஸ் ராஸ்ஃபோர்ட் கோல் அடித்தார்

08:07 PM

65வது நிமிடத்தில் ஈரான் வீரர் மெஹதி முதல் கோலை அடித்தார்

08:05 PM

ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி 4வது கோல் அடித்தது. சாகா ஆட்டத்தின் 2வது கோலை அடித்தார்

08:04 PM

தொடர்ந்து 3 கோல்கள் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த இங்கிலாந்து

07:34 PM

ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்தது - இங்கிலாந்து அணி 3 -0 என முன்னிலை பெற்றுள்ளது

07:18 PM

ஆட்டத்தின் முதல் பாதியின் கூடுதல் நிமிடத்தில் இங்கிலாந்து 3வது கோலை அடித்தது

07:18 PM

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஷாகா கோல் அடித்தார். இங்கிலாந்து 2 கோல்கள் முன்னிலையில் உள்ளது.

07:14 PM

ஆட்டத்தின் 35வது நிமிடத்திடல இங்கிலாந்து வீரர் ஜூட் முதல் கோலை அடித்தார்

07:06 PM

28வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சாகா அடித்த பந்து நேரடியாக இரான் கோல் கீப்பர் கையில் விழுந்தது. இதனால் வாய்ப்பு பறிபோனது

07:05 PM

25வது நிமிடத்தில் ஈரான் வீரர் அலிக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது

06:57 PM

21வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரி கீக் வாய்ப்பை இங்கிலாந்து வீணடித்தது

06:47 PM

இங்கிலாந்து வீரர் கோல் அடிக்க முயன்ற போது மோதியதால் கோல் கீப்பர் அலியின் மூக்கு உடைந்தது

06:47 PM

இரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்தது

06:47 PM

7வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பு வீணடித்தது இங்கிலாந்து

04:45 PM
Mykhel

இன்ஸ்டாகிராமில் 50 கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் நபர் என்ற பெருமை பெற்றார் கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ!

03:32 PM

தரவரிசையில் 20 வது இடத்தில் உள்ள ஈரான் அணி, இதுவரை ஒரு முறை கூட நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது இல்லை

03:31 PM

இங்கிலாந்து அணி விளையாடிய கடைசி 5 போட்டியில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை

03:29 PM

கத்தாரில் நடைபெறும் மனித உரிமை மீறல், ஒரின சேர்க்கைக்கு தடை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து வீரர் ஹாரி கேன், லவ் பேண்ட் அணிய உள்ளதாக தகவல்

03:22 PM

இங்கிலாந்து Vs ஈரான் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு மோதல்

11:33 PM

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வீழ்த்தியது.

11:13 PM

இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், கத்தார் அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. கேப்டன் ஹசன் மற்றும் அனுபவ வீரர் அலி ஆகியோருக்கு பதிலாக முகமது வாத் மற்றும் முகமது முன்டாரி ஆகியோர் களம் புகுந்துள்ளனர்.

10:28 PM

முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க கிடைத்த சிறந்த வாய்ப்பை கத்தார் அணி தவறவிட்டது.

10:07 PM

ஈகுவடார் அணியின் அனுபவ வீரர் வெலன்சியா 31வது நிமிடத்தில் 2வது கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

10:03 PM

கத்தார் அணியின் அல்மொய்ஸ் அலிக்கு நடுவரால் மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஈகுவடார் அணியின் அபார ஆட்டத்தால், கத்தார் அணி திணறி வருகிறது.

09:52 PM

உலகக்கோப்பைத் தொடரின் முதல் கோலை அடித்து அசத்தினார் ஈகுவடார் அணியின் வெலன்சியா. இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி முன்னிலை பெற்றுள்ளது.

09:52 PM

ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே ஈகுவடார் அணியின் நட்சத்திர வீரர் வேலன்சியா முதல் கோலை அடித்தார். ஆனால் அதனை நடுவர்கள் ஆஃப் சைட் கொடுத்தனர்.

09:37 PM

ஈகுவடார் அணி 4-4-2 ஃபார்மேஷனிலும், கத்தார் அணி 5-3-2 ஃபார்மேஷனிலும் களமிறங்கியுள்ளன

09:37 PM

ஈகுவடார் அணி 4-4-2 ஃபார்மேஷனிலும், கத்தார் அணி 5-3-2 ஃபார்மேஷனிலுன் களமிறங்கியுள்ளன

09:31 PM

கத்தார் அணி விவரம்: அல் ஷாகிப், அல் ராவ், கெளஹி, ஹசன், மிகெல், ஹாடிம், பவுடிஃப், அல் ஹெடோஸ், அஹ்மத், அபிஃப்

09:31 PM

ஈகுவடார் அணி விவரம்: கலிண்டெஸ், பிரிசியாஃபோ, டோரஸ், ஹின்கபி, எஸ்டிபினன், பிளாட்டா, மென்டெஸ், கய்சிடோ, எஸ்ட்ராடா, வேலன்சியா, இபெர்ரா

08:55 PM

ஃபிஃபா உலககோப்பை யின் மாஸ்காட்டான லாயிப் அறிமுகம். நமது செஸ் ஒலிம்பியாட் தம்பி போல் , ஃபிஃபா உலககோப்பைக்கு லாயிப்

08:41 PM

கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜங்கூக் பொப் பாடலை பாடி அசத்தினார்

08:41 PM

Please Dont take me home மற்றும் ole ole போன்ற பிரபல பாடல்கள் பின்னணியில் இசைக்கப்பட்டது

08:22 PM

கத்தார் நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

08:19 PM

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃபிரிமேன் உலககோப்பை கால்பந்து போட்டியை தொகுத்து வழங்குகிறார்

08:08 PM

ஒரின சேர்க்கையாளர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

08:08 PM

இன்னும் சற்று நேரத்தில் தொடக்க விழா ஆரம்பமாகிறது. பார்வையாளர்கள் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்

08:05 PM

ஃபிஃபா உலககோப்பையின் தொடக்க நிகழ்ச்சி தோஹாவிலிருந்து 40 கி.மீ. அருகே உள்ள அல் பாயத் மைதானத்தில் நடைபெற உள்ளது

03:46 PM

ஸ்போர்ட்ஸ் 18 என்ற சேனல் இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா ஓடிடியிலும் கண்டு களிக்கலாம்.

03:35 PM

முதல் லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடார் அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

03:34 PM

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் இம்முறை 32 அணிகள் பங்கேற்கின்றன

03:34 PM

2022 ஆம் ஆண்டு ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடர் இன்று கத்தாரில் தொடங்குகிறது

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
ஃபிஃபா உலககோப்பை கணிப்புகள்
VS

English summary
FIFA World Cup 2022 [2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி] LIVE News Updates in Tamil : south korea vs portugal and ghana vs uruguay
Story first published: Sunday, November 20, 2022, 15:33 [IST]
Other articles published on Nov 20, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X