உலகக் கோப்பைத் தோல்வியை மறக்க 'உல்லாசமாக' இருங்கள்.. இங்கிலாந்து அட்வைஸ்!!
லண்டன்: உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி சந்தித்த தோல்வியால் ரசிகர்கள் மனம் உடைந்து போய் விடக் கூடாது. இந்தத் தோல்வியிலிருந்து வெளிவர அதிக அளவில் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று இங்கிலாந்து அரசு ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் நலனுக்காக சில அறிவுரைகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த செக்ஸ்.

ஜிம்முக்குப் போங்க
இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தலாம். பாட்டுப் பாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைய செக்ஸ்
அதேபோல வழக்கத்தை விட சற்று அதிகமான அளவில் செக்ஸில் ஈடுபடலாம் என்றும் இந்த வழிகாட்டல் சொல்கிறது.

கலர் கலரா எழுதுங்க
உலகக் கோப்பை குறித்த வால் பேப்பர்களை வாங்கி அதில் கலர் கலர் பேனாக்களை வைத்து விதம் விதமாக எழுதிப் பார்க்கலாம். இது மனதை டைவர்ட் செய்ய உதவும் என்றும் அந்த வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளது.

மாரடைப்பு அதிகரிப்பு
இதற்கு முன்பு 1998ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது அர்ஜென்டினாவிடம் இங்கிலாந்து தோற்றபோது இங்கிலாந்து இளைஞர்களிடையே 25 சதவீத அளவுக்கு மாரடைப்பு அதிகரித்து மருத்துவமனைகளில் கூட்டம் குவிந்தது நினைவிருக்கலாம்.

காண்டம் விற்பனை அதிகரிக்கப் போகிறது
இந்த நிலையில் அப்படி எதுவும் நடந்து விடாமல் தடுக்க அரசே முன்வந்து சில வழிகாட்டல்களை காட்டியுள்ளது... என்ன இப்போது காண்டம் விற்பனை அதிகரிக்கப் போகிறது அவ்வளவுதான்!!


Click it and Unblock the Notifications