Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

24 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா வரலாற்று சாதனை.. போஸ்னியாவை வீழ்த்தி உலகக் கோப்பையில் முன்னேற்றம்

கலிபோர்னியா: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை நாக்கவுட் போட்டிகளில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா பதிவு செய்த முதல் வரலாற்று வெற்றி இதுவாகும்.

கலிபோர்னியாவில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி முடிவடைய இருந்த நேரத்தில் (45-வது நிமிடம்), அமெரிக்க வீரர் ஃபோலாரின் பாலோகன் முதல் கோல் அடித்து மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் போஸ்னியா வீரர் தாரிக் முஹாரெமோவிச்சை முரட்டுத்தனமாகத் தடுத்ததற்காக விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பின் பாலோகனுக்கு நடுவர் ரெட் கார்டு காட்டினார். இதனால் அமெரிக்க அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

FIFA World Cup USA Clinches Historic World Cup Knockout Victory Over Bosnia to Set Up Belgium Clash

ஒரு வீரர் குறைவாக இருந்தபோதிலும், அமெரிக்க அணியின் பயிற்சியாளர் மொரிசியோ போச்செட்டினோ வீரர்களை ஒன்றிணைத்து தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்தினார். போஸ்னியாவின் 40 வயதான கேப்டன் எடின் டிஸெகோ மற்றும் எர்மிடின் டெமிரோவிச் ஆகியோரின் கோல் முயற்சிகளை அமெரிக்க கோல்கீப்பர் மேட் ப்ரீஸ் அபாரமாகத் தடுத்து நிறுத்தினார்.

ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் செர்ஜினோ டெஸ்ட் மூலமாக கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை மாலிக் டில்மேன் வளைத்து அழகிய கோலாக மாற்றி அமெரிக்காவின் வரலாற்று வெற்றியை 2-0 என உறுதி செய்தார். இதற்கு முன்னதாக அமெரிக்க அணி கடந்த 2002 ஜூன் 17 அன்று மெக்சிகோவை வீழ்த்தி நாக்கவுட் சுற்றை வென்றிருந்தது.

FIFA: சர்ச்சையான கடைசி கோல்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த செனகல்.. பெல்ஜியம் போராடி வெற்றி

FIFA: சர்ச்சையான கடைசி கோல்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த செனகல்.. பெல்ஜியம் போராடி வெற்றி

அதன்பிறகு 24 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அமெரிக்கா நாக்கவுட்டில் ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இப்போட்டியை அமெரிக்கா முழுவதும் சுமார் 3 கோடி மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்ததாக கூறப்பட்டது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அமெரிக்கா தனது அடுத்த சுற்றில் பெல்ஜியம் அணியை ஜூலை 6 திங்கட்கிழமை அன்று சியாட்டில் நகரில் எதிர்கொள்ளவுள்ளது.

Story first published: Thursday, July 2, 2026, 9:50 [IST]
Other articles published on Jul 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+